முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 252 நீதிபதிக்க பாதுகாப்பற்ற நாடாக மாறிய இலங்கை?

 

முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Mullaitivu Judge Saravanaraja Resignation Letter
 By pavan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

சிங்கள வெறியர்கள் வாளால் வெட்டப்போதாக தமிழ் நீதிபதிகளை விரட்டியமையால் நாட்டைவிட்டோடிய தமிழ் நீதிபதி முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு நீதவான் பதவி விலகல் தொடர்பில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தகவலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நேற்றைய தினம் தமது பதவியிலிருந்து விலகி இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.

சிறிலங்கா நீதிச் சேவை ஆணைக்குழுச் செயலகத்துக்கு சரவணராஜா இந்த கடிதத்தை கடந்த 23 ஆம் திகதி அனுப்பியுள்ளார்.   

முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

முல்லைத்தீவு நீதவானின் பதவி விலகல் விவகாரம்: ரணிலுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்

கடிதம் இதுவரை கிடைக்கவில்லை

இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான கடிதம் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஐந்து வழக்குகளுக்கு அவர் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! | Mullaitivu Judge Saravanaraja Resignation Letter

அத்துடன், தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால் ஒரு நீதிபதியாக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சரவணராஜாவுக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மேலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி கடந்த வாரம் கொழும்புக்கு பயணம் செய்திருந்ததாகவும் அவரது வாகனத்தை விற்பனை செய்துள்ளதாகவும் விஜேயதாச ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். 

ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது: மாற்றம் மிக அவசியம் என்கிறார் மகிந்த

ஒரே மாதிரியான தலைமைத்துவங்கள் இருக்க கூடாது: மாற்றம் மிக அவசியம் என்கிறார் மகிந்த

தனிப்பட்ட விசாரணை

சரவணராஜாவின் கொழும்புக்கான பயணத்தின் போது அவர் மேற்குலக நாடுகளின் தூதுவர்களையும் சந்தித்துள்ளதாக நீதி அமைச்சர் கூறியுள்ளார். 

இது தொடர்பில் தாம் தனிப்பட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பு அவருக்கும் வழங்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?