முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 254 இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல்


இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video) | M A Sumanthiran Today Speech Jaffna Suthumalai

 By Kajinthan 1 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

இன்றைக்கு நீதித்துறை விசேடமாக ஒரு சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது அது குறித்து நாங்கள் கவனம் எடுக்க வேண்டிய ஒரு நிலையிலே இருக்கிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக பதவி விலக நேர்ந்துள்ளது. 

யாழ்ப்பாணம் - சுதுமலையில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடரும் சீரற்ற காலநிலை: சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

தொடரும் சீரற்ற காலநிலை: சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு


நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக வெளியேறியுள்ளதாக இன்றைய பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. இது நீதித் துறைக்கு ஏற்பட்டுள்ள ஒரு அச்சுறுத்தல்.


நாட்டில் உள்ள சுயாதீன நிறுவனங்களை பாதுகாக்கின்ற கடப்பாடு எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. அப்படியான மிகவும் முக்கியமான சுயாதீனமான நிறுவனமாக நீதித்துறையானது இருக்கிறது.

மூன்று விதமான செயற்பாடுகள்

நீதித் துறையை பாதுகாக்கின்ற போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் செய்வதை நாங்கள் கண்டிக்க வேண்டும், தடுக்க வேண்டும். அதே வேளையிலே நீதித் துறைக்கு உள்ளேயே தவறுகள் இருந்தால் அதனை திருத்துகின்ற வகையிலே நாங்கள் செயற்பட்டுக்கொள்ள வேண்டும்.


நீதித் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மூன்று விதங்களிலே ஒரு விதமாக அவர்கள் செயற்படலாம். ஒன்று அந்த அச்சுறுத்தலை கணக்கெடுக்காது தாங்கள் செய்ய வேண்டியதை செய்து விடலாம்.

இரண்டாவது அப்படியான அச்சுறுத்தல் வந்தால் அவர்கள் பதவி விலகல் செய்து அதில் இருந்து விலகி விடுவார்கள்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video) | M A Sumanthiran Today Speech Jaffna Suthumalai

மூன்றாவதாக, நீதிபதிகள் அந்த அச்சுறுத்தலுக்கு உள்ளாகி, அதற்கு அடங்கி தங்களுடைய நடத்தையை அல்லது தீர்ப்பை மாற்றி மற்றவர்களுடைய கைப் பொம்மைகளாக மாறி இயங்குவது இவை அனைத்தும் தடுக்கப்பட வேண்டும்.

உயிர் அச்சுறுத்தலினால் பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: பதில் வழங்க வேண்டிய நிலையில் ரணில்

உயிர் அச்சுறுத்தலினால் பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதி: பதில் வழங்க வேண்டிய நிலையில் ரணில்

நீதித்துறையை பாதுகாப்பது என்பது அவர்கள் எது செய்தாலும் பாதுகாப்பது என்பது அல்ல. நீதிபதிகள் சுயாதீனமானதாக செயற்படுவதை நாங்கள் பாதுகாப்பது ஆகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் மொழிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பயிற்சி மத்திய நிலையத்தில் சிங்கள மொழி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு மானிப்பாய் சுதுமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றில் இன்று 9.30 மணியறவில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்பொழுது வடமாகாணத்தின் சூரிய கற்கைகள் நிறுவகத்தின் இரண்டாம் மொழி கற்கைகள் நிலையங்களில் கல்வி கற்று சித்திர பெற்ற 300 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் மாணவர்களினால் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.

தொடர்ச்சியாக முன்னாள் சபாநாயகர் கரு ஜெய் சூரியாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சூரிய கற்கைகள் நிறுவகத்தினால் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது.

இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் சபாநாயகரும் சூரிய கற்கைகள் நிறுவகத்தின் இயக்குனருமான கருஜெயசூரிய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண ஆளுநர் பி.எஸ் எம். சார்ள்ஸ்,அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொல்லால் தாக்கப்பட்டு முதியவர் படுகொலை

பொல்லால் தாக்கப்பட்டு முதியவர் படுகொலை

மேலதிக விபரங்கள் - தீபன் 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?