முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 214திலீபனின் திருவுருவப்படம் மீது தாக்குதல் - கஜேந்திரன் எம்.பி விளக்கம்


திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி

திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி | Thileeipan S Memorial Rally Udaya Gammanpila

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

திலீபனின் நினைவூர்தி பேரணி என்பது இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும் என பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும், இனவாதத்தைக் கக்கும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில ரெிவித்துள்ளார்.

நினைவூர்தி பேரணி தொடர்பில் நேற்று(18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறிய அவர், காடையர்களின் தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

யார் அனுமதி கொடுத்தது?

அவர் மேலும் தெரிவிக்கையில், “திலீபன் என்பவர் யார்? நாட்டை பிளவுபடுத்தும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முயற்சிக்கு தலைமை தாங்கியவர்.

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)

திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)


பிரிவினைவாதத்தையும் தீவிரவாதத்தையும் நாட்டில் பரப்பும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நோக்கத்திற்காக தமது உயிரை பலி கொடுத்த ஒருவராவார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இந்த நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.

சிவப்பு மஞ்சள் கொடிகளால் வாகனம் ஒன்றை அலங்கரித்து அதில் திலீபனின் பாரிய நிழற்படம் ஒன்றை வைத்துக்கொண்டு கிழக்கில் இருந்து வட மாகாணத்திற்கு வாகனப் பேரணி ஒன்றை மேற்கொள்வதற்கு யார் அனுமதி கொடுத்தது?

எவரேனும் ஒரு உத்தியோகத்தர் அதற்கு அனுமதி வழங்கியிருப்பாராயின் அவர் இலங்கை அரசியலமைப்பின் 157 சரத்தை முழுமையாக மீறி பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான நிலை : கூட்டமைப்பு மீது விசனம்

மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் இயக்கத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண சிங்கள மக்களின் கிராமங்களுடாக இவர்கள் பயணித்தமை கட்டாயமாக இனவாதத்தையும் மக்கள் மத்தியில் குரோதத்தையும் ஏற்படுத்தும் சதித்திட்டமாகும்.

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனத்தின் 3ஆவது சரத்தின் கீழ் இனவாதம், மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி குரோதத்திற்கு வித்திடும் அனைத்து நடவடிக்கைகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அரசாங்கம் உடனடியாக இந்த இரண்டு விடயங்கள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரணில் விச்ரமசிங்க ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பங்களில் மாத்திரமே எப்போதும் பிரிவினைவாதிகளும் கடும்போக்கு வாதிகளும் எழுச்சி பெறுகின்றனர்.

அது சரியாக மழை காலத்தில் அட்டைகள் துடிப்பதற்கு நிகரானது.

பேரணிக்கு ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததா?

திலீபனின் நினைவூர்தி பேரணிக்கு யார் அனுமதி கொடுத்தது..! கொந்தளிக்கும் இனவாத எம்.பி | Thileeipan S Memorial Rally Udaya Gammanpila

கஜேந்திரன் மீதான காடையர்களின் தாக்குதல் : பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

கஜேந்திரன் மீதான காடையர்களின் தாக்குதல் : பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம்

இந்தப் பேரணிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அனுசரணை இருந்ததாக இல்லை.

அவரது வலுவற்ற ஆட்சியின் போதே எப்போதும் பயங்கரவாதிகள், கடும்போக்கு வாதிகள் எழுச்சி பெறுகின்றனர்.

புலிப் பயங்கரவாதம் ரணில் விக்ரமசிங்கவின் 2003 - 2004 ஆட்சியிலேயே வலுவடைந்தது. முஸ்லிம் பயங்கரவாதமும் அவரது 2015 - 2019 ஆட்சியிலேயே எழுச்சி பெற்றது.

ஆகவே இந்த நாட்டில் பயங்கரவாதமும் கடும்போக்கு வாதமும் அவரது அதிகரிக்க அவரது வலுவற்ற தன்மையே காரணமாக அமைந்துள்ளது.

தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புகள், பொதுமக்கள் பேரணிகளை முன்னெடுக்கும் போது தடை உத்தரவு பெறுகின்ற இந்த அரசாங்கம், பிரிவினைவாதம், பயங்கரவாதம், இனவாதத்தைப் பரப்பும் பாரிய பேரணியை ஏன் தடுக்கவில்லை என நாம் கேள்வி எழுப்புகிறோம்” என்றார்.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?