முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 202 சிங்கள பௌத்த தேசியவாதமே நாட்டின் அடிப்படை பிரச்சினை


சிங்கள பௌத்த தேசியவாதமே நாட்டின் அடிப்படை பிரச்சினை : புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம்



சிங்கள பௌத்த தேசியவாதமே நாட்டின் அடிப்படை பிரச்சினை : புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் | 6 Diaspora Tamil Organizations Warns Sl Noth South
 By Beulah 2 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மத்திய மயப்படுத்தப்பட்ட அதிகாரங்களே அடிப்படை அரசியல் பிரச்சினை உள்ளதாக  6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 6 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்  இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், பிரித்தானிய தமிழர் பேரவை, அயர்லாந்து தமிழர் பேரவை, அமைதி மற்றும் நீதிக்கான ஒருங்கிணைப்புக்குழு, சுவிஸ்லாந்து தமிழ் நடவடிக்கைக்குழு மற்றும் அமெரிக்க தமிழ் நடவடிக்கைக்குழு ஆகிய 6 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையிலேயே மேற்குறிப்பிடப்பட்டவாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் நிலவும் குறைபாடு மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த சூழல் இன்மை என்பவற்றை அடிக்கோடிட்டுக் காண்பித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கடந்த 6 ஆம் திகதி இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறலில் நழுவல் போக்கு - அமெரிக்காவின் இராஜதந்திர பிடியில் சிறிலங்கா

பொறுப்புக்கூறலில் நழுவல் போக்கு - அமெரிக்காவின் இராஜதந்திர பிடியில் சிறிலங்கா


இலங்கையின் பொறுப்புக்கூறல்

“இலங்கையில் அனைத்து மட்டங்களிலும் நிலவும் பொறுப்புக்கூறல்சார் குறைபாடு நாட்டின் அடிப்படை மனித உரிமை பிரச்சினையாகக் காணப்படுவதாக, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தனது எழுத்து மூல அறிக்கையில் தெரிவித்திருந்தமையை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.


உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்கும் அதேவேளை, அதில் உள்ளடக்கப்படவேண்டிய மேலும் சில விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதேபோன்று உண்மை, பொறுப்புக்கூறல், இழப்பீடு மற்றும் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் ஆகிய கூறுகளை ஒன்றிணைக்கும் வகையில் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையொன்றை ஸ்தாபிக்குமாறும், அப்பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தரப்பினரின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறாத சிறிலங்கா- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

தமிழினப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் பொறுப்புக் கூறாத சிறிலங்கா- விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

இருப்பினும் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு வழங்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்படவில்லை.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதில் அடையப்பட்டுள்ள தோல்வி மற்றும் அச்சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு என்பன குறித்து உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் தீவிர கரிசனை வெளியிடப்பட்டிருப்பதுடன் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் குறைபாடுகள் தொடர்பில் ஐ.நா விசேட அறிக்கையாளர்கள் 10 பேரின் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தீவிர பௌத்தமயமாக்கம்

இருப்பினும் பௌத்த விகாரைகளை நிர்மாணித்தல், இந்துக்களின் வணக்கத்தலங்களை அழித்தல், இந்துக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதைத் தடுத்தல் என்பன உள்ளடங்கலாக தமிழ்மக்கள் செறிந்துவாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல இடங்களில் இடம்பெற்றுவரும் தீவிர பௌத்தமயமாக்கலை ஆவணப்படுத்துவதற்கு உயர்ஸ்தானிகர் அலுவலகம் தவறியிருக்கின்றது.

சிங்கள பௌத்த தேசியவாதமே நாட்டின் அடிப்படை பிரச்சினை : புலம்பெயர் அமைப்புக்கள் கண்டனம் | 6 Diaspora Tamil Organizations Warns Sl Noth South

அரச கட்டமைப்புக்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுவரும் இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கு இடையிலான வன்முறையாக நிலைமாற்றமடையக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகின்றது.

பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு மற்றும் வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டியதன் அவசியம் என்பன தொடர்பில் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ள போதிலும், உண்மையில் அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்ந்தும் மட்டுமீறிய இராணுவப்பிரசன்னத்துக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருகின்றனர்.

மேலும், உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விசாரணை செயன்முறைகளுக்கு அப்பால் குமுதினி படகு படுகொலைகள் (1985), சத்துருக்கொண்டான் படுகொலைகள் (1990), குமாரபுரம் படுகொலைகள் (1996), 1983 கறுப்பு ஜுலை கலவரங்கள், பாடசாலைகள், தேவாலயங்கள் மற்றும் கோயில்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்கள் என்பன தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையை வழிநடத்தும் குழு ஆகியவற்றிடம் வேண்டுகோள்விடுக்கின்றோம்”  என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?