முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 250 மெதுவாக உசார் அடைந்து வரும் தமிழர்கள் ஒன்பது கோடி தமிழர்களும் பொங்கி எழுந்தால் உலகத்தின் முடிவை மாற்றலாம்,?

 

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் -ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் -ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல் | Srilanka Punished In International Criminal Court
 By Sumithiran 3 மணி நேரம் முன்
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

தமிழினப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனவும் இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் எனவும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பாமக தலைவர் அன்புமனி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 54ஆவது அமர்வில் , பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் அதன் முன்னாள் தலைவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தற்போதைய தலைவருமான அன்புமணி ராமதாஸ் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை

இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் , ஆண்டுகளாக இனவாதம், பாகுபாடு மற்றும் வேறு பல வடிவங்களிலான சகிப்புத்தன்மையற்ற செயல்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.


இலங்கையில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், இன்னும் பலர் தொடர்ந்து ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அன்புமணி எடுத்துரைத்தார்.

தமிழர் தலைநகரில் இரகசியமாக கட்டப்படும் விகாரையால் பதற்றம்!(படங்கள்)

தமிழர் தலைநகரில் இரகசியமாக கட்டப்படும் விகாரையால் பதற்றம்!(படங்கள்)

இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான 21-ஆம் நூற்றாண்டின் முதலாவது அட்டூழியம் மற்றும் குற்றங்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அழைப்பை அனைத்து உறுப்பு நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் இலங்கை பொறுப்புடைமைத் திட்டத்தின் (OHCHR’s Sri Lanka Accountability Project-SLAP) திரட்டப்பட்டுள்ள சாட்சியங்களைக் கொண்டு இலங்கை தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும், அதிலிருந்து எந்த தண்டனையும் இல்லாமல் இலங்கை அரசு தப்பித்து வரும் போக்கிற்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் உறுப்பு நாடுகள் முடிவு கட்ட வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் -ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல் | Srilanka Punished In International Criminal Court

இலங்கை அரசின் மீது பல்வேறு வகையான தடைகளை விதித்தல், ஒவ்வொரு நாடும் அதன் சொந்த நீதிமன்றங்களில் சிவில், குற்றவியல் வழக்குகளை தொடருதல், உலகில் இப்போது செயல்பாட்டில் உள்ள சர்வதேச நீதிக்கான நீதிமன்றங்களுக்கு போர்க்குற்றம் குறித்த வழக்குகளை மாற்றுதல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விசாரிக்கும் வகையில் சர்வதேச குற்றவியல் நீதி வழங்குவதற்கான பொறிமுறையை உருவாக்குதல் ஆகியவற்றின் மூலம் இதை சாதிக்க வேண்டும் என்று ஐ,நா. மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லையென கைவிரிக்கும் சனல் 4

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லையென கைவிரிக்கும் சனல் 4

போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி

அதேபோல், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டி, பரிந்துரை வழங்குவதற்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலகத்தின் பொறிமுறைக்கு உறுப்பு நாடுகள் உதவுமாறு கூறினார்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் -ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல் | Srilanka Punished In International Criminal Court

இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களைப் பயன்படுத்தி, சாத்தியமாகக் கூடிய அனைத்து சட்டத் தளங்களிலும் வழக்குகளை வலிமையாக்குவதன் மூலம் பொறுப்புடைமைத் திட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள வலிமையான குழுவை அதே நிலையில் பராமரித்தல் மற்றும் வலுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுவரை மூடி மறைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், தமிழினப்படுகொலை மற்றும் 2015-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கைக்கான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அலுவலக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான சிங்கள அரசின் திட்டமிட்ட, பரவலான குற்றங்கள் உள்ளிட்ட அனைத்துக் குற்றங்களுக்கும் பொறிமுறை மூலம் ஆதாரங்கள் திரட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்க இந்திய சமரசமும் கனடாவும்: ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியது

அமெரிக்க இந்திய சமரசமும் கனடாவும்: ஈழத்தமிழர்கள் சிந்திக்க வேண்டியது

தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றறம்

மேலும் இலங்கையில் காலம் காலமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியேற்றுவதன் மூலமாகவும், இலங்கை அரசின் உதவியுடன் இந்து கோயில்கள் சிதைக்கப்படுவதன் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள்தொகை மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள் -ஜெனிவாவில் ஓங்கி ஒலித்த குரல் | Srilanka Punished In International Criminal Court

ஐக்கிய நாடுகள் அவையின் மூலமாக இலங்கை அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC),சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் (ICJ) மற்றும் பிற சர்வதேச பொறிமுறை அமைப்புகளில் கொண்டு சென்று நிறுத்தி தண்டனை பெற்றுத் தருதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?