முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

c 190 இலங்கைத் தமிழர்களுக்கு உணவளிக்க தயார்

இலங்கைத் தமிழர்களுக்கு உணவளிக்க தயார் - மோடியின் அனுமதி கோரும் மு.க ஸ்டாலின் !(Photos) கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என்று பிரதமரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்; நேற்று நாடாளுமன்றத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது 14 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் பிரதமரிடம்; வழங்கினார். அதில், இலங்கை தமிழர்கள் தொடர்பான கோரிக்கையும் அடங்கியிருந்தது. இலங்கையில் வசிக்கும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகள் உள்ளன. 1983-ம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை காரணமாக தமிழகத்திற்கு வரும் ஈழத் தமிழர்களின் வருகை அதிகமாகியது. அந்த வகையில் 1983-2012-ம் ஆண்டு வரை 3 லட்சத்து 4 ஆயிரத்து 269 இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். எனவே சம உரிமையியல் மற்றும் அரசியல் உரிமைகளை தமிழர்களுக்கு உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் அறிவுறுத்த வேண்டும். இலங்கையில்

c189 புலிகளை பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது!

புலிகளை பற்றி பேசும் தகுதி சுமந்திரனுக்கு கிடையாது! சுடச்சுட பதிலடி தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உருவாக்கியவர்கள் நாமே. விடுதலைப் புலிகளை வன்முறையாளர்கள் போல காட்டிக் கொள்ளும் எம்.ஏ. சுமந்திரன்,(M.A.Sumanthiran) தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிக்கும் தகுதியுள்ளதா என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) கேள்வியெழுப்பியுள்ளார். எம்.ஏ.சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் என மீது நீண்டகாலமாக குற்றச்சாட்டுள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை (Gotabaya Rajapaksa) சந்திப்பதில்லையென ரெலோ (TELO) எடுத்த முடிவை சுமந்திரன் பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். நேற்று (31-03-2022) வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறினால் சந்தோசமடைவேன் என கூறியிருந்தார். இதை தொடர்ந்து, ஜனாதிபதி கோட்டாவை காப்பாற்ற எமது கட்சி வராததால் சுமந்திரன் ஏன் பதற்றமடைகிறார், கடந்த நல்லாட்சி காலத்திலும் ரணிலை காப்பாற்ற இத

c 188 கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்!

கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர் புகைகுண்டு தாக்குதல் பொலிஸார் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஆர்ப்பாட்டமானது தீவிரமடைந்துள்ள நிலையில் குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர் அதிகமான அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் குழந்தையை ஒரு கையில் சுமந்துகொண்டு மற்றொரு கையில் எங்களுக்கும் குழந்தைகள் உள்ளது என எழுதிய பதாகையை பிடித்தப்படி போராடி வருகிறார்.இலங்கையில் நடக்கும் விடயங்கள் தொடர்வாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் தெளிவாகயிருக்க வேண்டும் இச்சந்தர்ப்தை பயன்படுத்தி ஐக்கி நாடுகளின் பாதுகாப்புப்படையினரை தமிழர்களின்பாதுகாப்பிற்காக வடகிழக்கில் இறக்க வேண்டும் இதற்கான காரணம் வெளிநாட்டு தமிழர்கள் முதலீடு செய்ய போகின்றார்கள் என்பதை வெளிநாடுகளிற்கும் அரசிக்கும் தெரியப்படுத்த முட

c 186 கொழும்பு ஊரடங்குச்சட்டம்

கொழும்பு ஊரடங்குச்சட்டம் - காவல்துறை மா அதிபர் வெளியிட்ட அறிவிப்பு கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரும் வரை தொடரும் என காவல்துறை மா அதிபர் சி டி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்கள் வருமாறு, கொழும்பு மத்தி பெட்டா, கெசல்வத்தை, டாம் வீதி, வொல்பென்டல் வீதி,கோட்டை, நீர்கொழும்பு, மருதானை மற்றும் மாளிகாவத்தை

c 185 கொளுத்தப்பட்ட இராணுவ வாகனம்

கொளுத்தப்பட்ட இராணுவ வாகனம்! கொழும்பில் பிறப்பிக்கப்பட்டது ஊடரங்கு உத்தரவு (Photos) கொழும்பில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி, நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் உடன் நடைமுறைக்கு வகையில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள் அறிவிப்பு வரும் வரையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதியின் இல்லம் முற்றுகையிடப்பட்டு இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

c 184 ரஷ்யாவை அதிரவைத்த எறிகணை தாக்குதல்

ரஷ்யாவை அதிரவைத்த எறிகணை தாக்குதல் - வெளியானது வீடியோ உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யா பெரும் உயிர், உடமை சேதங்களை நாளாந்தம் ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் எறிகணை வீச்சுக்களால் உக்ரைன் தினசரி அதிர்ந்த வண்ணம் உள்ளது. மக்கள் தொடர்ந்தும் பாதாள அறைகளில் அச்சத்துடன் தங்கியுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவில் அமைந்துள்ள இராணுவ தளம் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதல் அந்த நாட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உக்ரைனிலிருந்து 12 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் உள்ள Oktyabrsky என்ற கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் மீதே இந்த எறிகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த எறிகணை தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் சேத விபரங்களை அவர் வெளியிடவில்லை

c 183 தமிழ் இளைஞர்கள் போதைக்கு அடுமை கவலையில் தமிழ் சமுகம் ?

மட்டக்களப்பில் பற்றைக்குள் பதுங்கியிருந்த 4 யாழ்.இளைஞர்கள்! சிக்கிய மர்மம் யாழிலிருந்து பேருந்து மூலம் மட்டக்களப்புக்கு கஞ்சா கடத்திச் சென்றிருந்த 4 பேர் சந்திவெளி பகுதியில் பற்றை ஒன்றுக்குள் கஞ்சா பொதி செய்துகொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பளை பிரதேசத்தைச் சேர்ந்த 4 பேர் எனவும், அவர்களிடமிருந்து சுமார் 165 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாகவும் சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடுத்து, சம்பவ தினமான நேற்றுமுன்தினம் மாலை குறித்த பற்றை காடு பகுதியை சுற்றிவளைத்து முற்றுகையிட்டனர். இதன்போது கேரளா கஞ்சாவை விற்பனைக்காக பொதி செய்து கொண்டிருந்த 4 பேரை 165 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்தனர். கைதானவர்கள் பளை இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 29,24,24,25 வயதுடையவர்கள் ஆவர். நால்வரும் கஞ்சாவை பொதி செய்யும்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

c 182 தமிழர்கள் சாவது அதிகரிப்பு நஞ்சு கலக்கப்பட்டதா?

திடீரென இளம் பெண்ணொருவர் உயிரிழப்பு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கீரிமலை - கூவில் பகுதியை சேர்ந்தவரும் , கெப்பற்றிக்கொலாவ குடும்பநல உத்தியோகஸ்தருமான கந்தசாமி நிதர்சினி (வயது 27) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கெப்பற்றிக்கொலாவையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் கடந்த 26ஆம் திகதி உடல் நிலை மோசமானதை அடுத்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மறுநாள் 27ஆம் திகதி அவர் மயக்க நிலைக்கு சென்றதை அடுத்து , மேலதிக சிகிச்சைக்காக யாழ், போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

c 181 உக்ரைனில் முக்கிய இடமொன்றிலிருந்து வெளியேறும் ரஷ்ய படை

உக்ரைனில் முக்கிய இடமொன்றிலிருந்து வெளியேறும் ரஷ்ய படை - உறுதிப்படுத்தியது அமெரிக்கா உக்ரைனில் செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறுவதாக அமெரிக்க பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா முதல் நாளில் வடக்கு உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை கைப்பற்றி தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இது தொடர்பாக உக்ரைன் அரசு கூறுகையில், செர்னோபில் அணு உலையை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் கைப்பற்றி உள்ளனர். இதனால் கோடிக்கணக்கான உயிர்கள் அச்சுறுத்தலில் உள்ளன என தெரிவித்தது. ஆனால், செர்னோபில் அணு உலை மீது பயங்கரவாத அமைப்புகளும், தேசியவாத குழுக்களும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்பதால் அணு உலையைப் பாதுகாக்கவே அதனைக் கைப்பற்றி உள்ளோம் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில், உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

c 180 திடீரென பகல் கனவு காணக் கூடாது

திடீரென பகல் கனவு காணக் கூடாது -புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்ட தமிழ்த் தேசியப் பிரச்சனைக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கின்ற ஒரு தீர்வு வரும்வரைக்கும் புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீட்டுக்கு வரமாட்டார்கள். புலம்பெயர் அமைப்புகளையும், தனியார்களையும் தடை செய்துவிட்டு அவர்களை வருமாறு அரசாங்கம் அழைப்பதில் அர்த்தமில்லை. எனவே அவர்கள் வருவார்கள் என்று திடீரென பகல் கன காண வேண்டிய அவசியம் கிடையாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேற்று மாலை மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அதில் அவர் தெரிவித்த புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பான விடயம் வருமாறு, அண்மையில் நான் சென்னைக்குச் சென்ற போது தமிழ் நாட்டின் நிதியமைச்சரோடு நீண்ட பேச்சுவார்ததைகளை நடத்தியிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக பல முன்னெடுப்புகள் தற்போது நடைபெறுகின்றன. அதிலொன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் முதலீட்டாளர்கள் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களையும் இணைத்துக் கொண்டு வருகின்ற திட்டமும் இருக்கின்றது. அந்தப் பொறிமுறையொன்றை ஏற

c 179 பெற்றோர்களே பெண்கள் தொடர்வாக அவதானமாகயிருக்கவும்,

கல்லூரி மாணவி தற்கொலை: குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு ''ரொம்ப நாள் வாழ ஆசை, ஆனால் கடவுள் என்னை வாழ விடவில்லை'' என்று தன் தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் அவர். அரசு கல்லூரியில் படித்து வந்தார். மாணவியின் 5 வயதில் அவருடைய தந்தை உயிரிழந்து விட்டார். தாயார் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். இன்று(புதன்கிழமை) அதிகாலை மாட்டுக்கொட்டகையில் இறந்த நிலையில் காணப்பட்டார். காலையில் எழுந்தும் அவரது தாய் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் சடலதை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்

c 178 பின்னணியில் இருக்கும் பெண் சாமியார்!

இலங்கையின் பாரிய நெருக்கடிக்கு பின்னணியில் இருக்கும் பெண் சாமியார்! நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடியின் பின்னணியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) மூட நம்பிக்கையே காரணமென எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை, நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி கோட்டாபய அனுராதபுரத்தில் ஞானக்காவின் உதவியை நாடியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார (Palitha Range Bandara) தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள பொருளாதார நிபுணர்கள், சர்வதேச நாணய நிதியம் மற்றும் மூத்த அரசியல்வாதிகளின் உதவியைப் பெறுவதற்குப் பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ஞானக்காவின் உதவியை பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்று திங்கட்கிழமை (28-03-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு ஞானக்காவே பொறுப்பு கூற வேண்டும் என அவர் கூறியுள்ளார். நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முன்கூட்டியே தீர்வுகளை அறிவி

c 177 துணிச்சலை கொடுத்தது யார்?

புலம்பெயர் தமிழர்களுடன் பாலமாக இருக்க சுமந்திரனுக்கு துணிச்சலை கொடுத்தது யார்? ஒரு தோல்வியுற்ற அரசை பிணை எடுப்பதற்காக புலம்பெயர் தமிழர்களுடன் தான் ஒரு பாலமாக சேவையாற்றுவதாகக் கூறிக்கொள்ளும் துணிச்சலை சுமந்திரன் அவர்களுக்கு புலத்தில் வாழும் ஒருசில அடிவருடிகளா கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதுடன், அரசாங்கச் செலவுகளில் 15 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டுப் போரின் போது, 2009ல் 100,000 இராணுவ சிப்பாய்கள் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இது 300,000 க்கு மேல் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்குச் சொ

c176 சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம்

யாழில் கடத்தப்பட்ட இளைஞன் கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் இன்று மாலை மீட்கப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நவக்கிரி சனசமூக நிலையத்தடியில் இன்று மாலை மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். புத்தூர் மேற்கு, நவக்கிரிக்கிரியைச் சேர்ந்த அருந்தவராசா சயந்தன் என்ற 30 வயது இளைஞரே கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளார் என்று அவரது உறவினர்கள் அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வீட்டு வளாகத்தில் இருந்து எவரோ பாய்ந்து வெளியே செல்வதை அவதானித்த இளைஞர் வீட்டுக்கு வெளியே சென்று பார்த்தார் என்றும், வெளியே சென்ற இளைஞரை வீட்டின் முன்புறம் உள்ள தோட்ட வெளியில் நின்றிருந்த மூவர் துரத்திச் சென்றனர் என்றும் உறவினர்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர். அதன்பின்னர் இளைஞர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடியபோத

c 175 மேல்முறையீடு தள்ளுபடி

வெளிநாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்! - மேல்முறையீடு தள்ளுபடி போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபரின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. நாகேந்திரன் தர்மலிங்கம் என்ற இளைஞரே இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிலையில், அவரின் மேல்முறையீட்டை சிங்கப்பூர் அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கம் கடந்த 2009ம் ஆண்டு சிங்கபூருக்கு 42.72 கிராம் போதைப்பொருளை கடத்தியபோது கைது செய்யப்பட்டார். இது குறித்த விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தியது உறுதி செய்யப்பட்டதால் 2010ம் ஆண்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதித்தது 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும், உயர்நீதிமன்றத்தில் அவரது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்பின் 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதி மன்றிலும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதபின் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். ஜனாதிபதி கருணை மனுவை திருப்பி

c 174 நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்"

யுக்ரேன் தலைநகர் கீயவ் மற்றும் செரீனிஹிவ் நகரங்களுக்கு வெளியே ரஷ்யப்படைகளின் ராணுவ நடவடிக்கையை "முற்றிலும் குறைப்போம்" என, ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சர் அலெக்ஸாண்டர் ஃபோமின் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் நடைபெற்ற இருநாட்டு பிரதிநிதிகளிடையேயான பேச்சுவார்த்தையில் ரஷ்யா சார்பாக அலெக்ஸாண்டர் ஃபோமின் இடம்பெற்றிருந்தார். அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக நடுநிலையை ஏற்றுக்கொள்வதாக, யுக்ரேன் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் - ரஷ்யா இருநாடுகள் இன்று எடுத்த முடிவுகள், போர் தொடங்கியதற்கு பின்னான "மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" என துருக்கி தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்யா சொல்வதற்கும் அதன் செயல்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக, அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார். ரஷ்ய பெரும் பணக்காரரான ரோமன் ஆப்ராமோவிச் இருநாட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அப்ரமோவிச்சிற்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலில் உண்மையில்லை என, ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.

c 173 மிக புத்திசாலிகளின் பட்டியலில் கிம் ஜோங்

கிம் ஜோங் உன்: ஹ்வாசாங்-17 ஏவுகணையை செலுத்த ஹாலிவுட் பாணியில் டிரெய்லர் காட்டிய வட கிம் ஜாங்-உன்னின் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் ஹாலிவுட் பாணியில் காண்பிக்கப்பட்ட டிரெய்லர் காணொளி. வட கொரியா அதன் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியிருக்கிறது - இதன் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்திருக்கிறது அந்த நாடு. ஆனால் வட கொரியா அரசு நடத்தும் தொலைக்காட்சியில் இது பற்றிய செய்தி ஒளிபரப்பப்பட்ட விதம்தான் பரவலான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக வெற்றிக்களிப்பை பகட்டில்லாத வகையில் வெளிப்படுத்தும் தன்மையைக் கொண்ட வட கொரியா, இந்த முறை அது முன்பு எப்போதும் நடந்து கொள்ளாத வகையில் செயல்பட்டிருக்கிறது. இந்த முறை ஹாலிவுட் பாணி திரைப்பட டிரெய்லரை போல ஏவுகணை ஏவும் காட்சியை வடகொரியா காண்பித்திருக்கிறது. தோல் ஜாக்கெட் மற்றும் கறுப்பு நிற கண்ணாடியில் கதாநாயகன் போல தோன்றிய வட கொரியா தலைவர் கிம் ஜோங் உன், வீடியோ எஃபெக்ஸ்ட், திரைப்படத்தில் வருவது போன்ற பின்னணி இசையுடன் காணொளியில் தோன்றியிருக்கிறார். வட கொரிய தொலைக்காட்சி பொதுவாக ராணுவ வாத்திய குழு வாசிக்கும் தேசபக்தி மற்றும் உழைப்பின

c 172 ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அச்சுறுத்தலா?

சீனா - சொலமன் தீவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அச்சுறுத்தலா? சீனாவுக்கும் Solomon Islands நாட்டுக்குமிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று உருவாகி வருவதாக வரும் செய்திகள் கசிந்துள்ளன. ‘சீனாவுக்கும் Solomon தீவுகளுக்குமிடையேயான வரைவு பாதுகாப்பு ஒப்பந்தம் - draft security agreement’ பற்றி பசிபிக் தீவுகளுக்கு மிக அருகாமையிலிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு தெரியாமல் போனது குறித்து தேசிய பாதுகாப்பு மட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த செய்தி உண்மைதான் என்று ABC உறுதிசெய்துள்ளது. ‘சீனாவுக்கும் Solomon தீவுகளுக்குமிடையேயான வரைவு பாதுகாப்பு ஒப்பந்தம் – எனும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்குடையே இன்னும் கைச்சாத்திடப்படவில்லை. பசிபிக் பிராந்தியத்தில் திரைமறைவில் நடக்கும் power dynamics - ‘சக்தி இயங்காற்றல்’ பற்றி நமது பாதுகாப்புத்துறை அறிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டுவிட்டதோ என்று பல மட்டங்களில் கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது. சீனா தனது பொருளாதார வலிமையைப் பயன் படுத்தி நலிவடைந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை கொடுப்பதன் மூலமாகவும் உதவிகளை வழங்குவதன் மூலமாகவும் முதலீட

c 171 காரணம் கூறும் முக்கிய அரசியல்வாதி

இலங்கையை கைவிட்ட சர்வதேச சமூகம்! - காரணம் கூறும் முக்கிய அரசியல்வாதி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற ஆசனம் பிரதமர் ஆசனமாக இருக்கலாம் என அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க நாட்டைக் கைப்பற்றினால், 48 மணி நேரத்திற்குள் அனைத்து நாட்டில் தற்போது இருக்கும் வரிசை யுகத்திற்கு முடிவுகட்டப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய ஆட்சியின் மீதான சர்வதேச நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச சமூகம் நம்பக்கூடிய ஆட்சி இலங்கையில் நிறுவப்பட்டவுடன் சர்வதேச சமூகம் உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்கும் அளவுக்கு தமது கட்சியில் எவருக்கும் மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக தாம் நினைக்கவில்லை என அமைச்சர் ரோஹித அபேவர்தன குணவர்தன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

C 170 முன்னாள் முக்கியஸ்தர் மரணம்!

பிரான்ஸில் விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மரணம்! விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் தனது 51 ஆவது வயதில் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியவர் ஆவார். தமிழ் மக்களின் இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் நேற்றையதினம் (27. 03. 2022) மரணமானார். யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகக்கொண்ட ரஞ்சித்குமார் அவர்கள் தமிழீழக் காவல்துறையில் முதலாம் அணியில் பயிற்சி பெற்றிருந்தார். 1991 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தமிழீழக் காவல்துறையில் அவர் இணைந்துகொண்டார். பயிற்சியின் நிறைவின் பின்னர் யாழ்.சுன்னாகம் பகுதியில் இயங்கிய காவல்பணிமனையில் உப பரிசோதகராக தனது கடமையை ஆரம்பித்து, பின்னர் யாழ்.சாவகச்சேரியில் இயங்கிய காவல்துறை பணிமனைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அதன்பின்னர் வன்னிப் பெருநிலப்

c 169 பிரிட்டன் வெளியிட்ட தகவல்

க்ரைன் கள நிலைமை - பிரிட்டன் வெளியிட்ட தகவல் உக்ரைனின் கள நிலைமை குறித்த தனது தகவல்களை இங்கிலாந்து பாதுகாப்புத்துறை வழங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் பிராந்தியத்தில் உள்ள ரஷ்ய படைகளின் நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ரஷ்ய இராணுவத்துக்கு எதிரான உக்ரைன் தரப்பு உத்வேகம் மற்றும் மன உறுதி, உக்ரைனியர்களின் ஆக்ரோஷமான சண்டைகள் காரணமாக தளபாட பற்றாக்குறையை ரஷ்யா எதிர்கொண்டு வருகிறது. மரியுபோல் நகருக்கு அருகே ரஷ்யா அதிக இடங்களை ஆக்கிரமித்துள்ளது. அங்கு ரஷ்யா துறைமுகத்தை கைப்பற்ற முயற்சிக்கும் போது கடுமையான சண்டை நடந்து வருகிறது " என்று பாதுகாப்புத்துறை கூறியுள்ளது

c 168 பணக்கார நாடுகள் அறிவிப்பு

டினின் கோரிக்கை முற்றாக நிராகரிப்பு - உலகின் பணக்கார நாடுகள் அறிவிப்பு ரஷ்ய எரிசக்தியை பெறும் நட்பற்ற நாடுகள் அதற்கான கொடுப்பனவை ரூபிளில் செலுத்த வேண்டுமென்ற புடினின் கோரிக்கையை ஜி 7 என அழைக்கப்படும் நாடுகள் முற்றாக நிராகரித்துள்ளன. ஜேர்மனியின் எரிசக்தி அமைச்சர் ரொபேர்ட் ஹேபெக் இன் தகவலின்படி, ரஷ்யாவில் இருந்து எரிசக்தி இறக்குமதிக்கு ரூபிள் செலுத்த வேண்டும் என்ற மொஸ்கோவின் கோரிக்கையை உலகின் ஏழு பணக்கார நாடுகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர். ஜி7 நாடுகள் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகியவையே அவையாகும். புடினின் இந்த கோரிக்கை "தற்போதுள்ள ஒப்பந்தங்களின் தெளிவான மீறல்" என்று அவர் தெரிவித்தார். "ரூபிளில் பணம் செலுத்துவது ஏற்கத்தக்கது அல்ல, புடினின் கோரிக்கையைப் பின்பற்ற வேண்டாம் என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்களை நாங்கள் வலியுறுத்துவோம்" என்றார். "நட்பற்ற" நாடுகள் இயற்கை எரிவாயுவை இனி ரஷ்ய நாணயத்தில் மட்டுமே செலுத்த வேண்டும் என்று ரஷ்யா விரும்புவதாக புடின் கடந்த வாரம் அறிவித்தார். பொருளாதார வல்லுநர்கள் இந்த நடவட

c 167 பாலியல் வருத்தும் காரணமாகாக தாய்யை கொலை செய்த மகள்

தூத்துக்குடியில் தாயை கொன்றதாக மகள் கைது - போலீஸில் சிக்கியது எப்படி? ஆண் நண்பர்களுடன் அதிக நேரம் செல்போனில் பேசுவதை தவிர்க்குமாறு கண்டித்த தாயை, அவரது 17 வயது மகள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளதாக கூறப்படும் சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்துள்ளது. தூத்துக்குடி மேலசண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலட்சுமி. இவர் அரசு மருத்துவமனை தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் மாடசாமியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக இரு மகள்கள், மகனுடன் முனியலட்சுமி தனியாக வசித்து வருகிறார். முனியலட்சுமியின் 17 வயது மகள் பாலிடெக்னிக் முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த தங்ககுமார் மற்றும் முள்ளக்காடு பகுதியை சேர்ந்த கண்ணன் ஆகியோருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இதனால் செல்பேசி மூலம் தனது நண்பர்களுடன் இவரது மகள் பேசுவார். அதை முனியலட்சுமி பல முறை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது. விளம்பரம் இதனால் ஆத்திரமடைந்த மகள், தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து

c 166 வறிய நாடாக மாறிவரும் இலங்கை

தெற்காசியாவின் வறிய நாடாக மாறிவரும் இலங்கை இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக்கொண்டே வருகிறது. டாலருக்கான பெறுமதி கூடிக்கொண்டே வருகையில், இலங்கை ரூபாயின் மதிப்பு குறைந்துகொண்டே வருவதோடு, நாட்டின் வெளிநாட்டு நிதிப் பிரிவு நெடுங்காலமாகச் சரிவைச் சந்தித்துவருகிறது. அதனால், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்ததற்கு ஏற்றுமதிச் செலவுக்கும், இறக்குமதிச் செலவுக்கும் இடையே பாரிய வேறுபாட்டையும் முக்கியக் காரணமாகக் குறிப்பிடலாம். இதனால், 500 கோடி டாலர்களுக்கும் அதிகமான நஷ்டம் இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள். இவ்வளவு சரிவுகளைச் சந்தித்துக்கொண்டிருந்தபோதிலும், கடந்த மாதம் வரைக்கும் இலங்கை மத்திய வங்கி, ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை 202 ஆகவே தொடர்ந்து பேணுவதாகவும், எந்தக் காரணத்துக்காகவும் அதை மாற்றப்போவதில்லை என்றும் அறிவித்தது. அந்தக் காலகட்டத்தில் ஒரு டாலரின் பெறுமதி இலங்கை மத்திய வங்கியில் 202 ஆக இருந்தபோது, கறுப்புச் சந்தையில் ஒரு டாலருக்கு 240 ரூபாயைப் பெற்றுக்கொண்டிருந்ததும் நடந்தது. அதனால், மக்களும் வர்த்தக நிறுவனங்களும் தம்மிடம

c 165 திலீபனின் கடைசி வார்த்தைகளை நாடாளுமன்றில் ஞாபகப்படுத்திய சிங்கள MP

திலீபனின் கடைசி வார்த்தைகளை நாடாளுமன்றில் ஞாபகப்படுத்திய சிங்கள MP: பெரும் பரபரப்பு ! தமிழ் மக்களின் விடியலுக்காய் யாழ் நால்லூர் ஆலய வீதியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த திலீபன் கூறிய வார்த்தைகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நாடளுமன்றில் நேற்று தெரிவித்திருந்தார்.பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1987 செப்டம்பர் 26 ஆம் திகதி முதல் 10 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னர் தியாகி திலீபன் உயிரிழந்தார். பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் உள்ளவர்களை மட்டுமல்ல, தெற்கிலும் உள்ளவர்களையும் ஒடுக்கும் என திலீபன் அன்று கூறியது தற்போதும் நினைவிருக்கிறதாக் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். இந்தச் சட்டம் இறுதியில் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் என்பதை அவரது தியாகம் தங்களிடம் கூறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றில் பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நேற்று திருத்தங்களுடன்

c 164 டாங்கியுடன் உக்ரைன் படைகளிடம் சரணடைந்த ரஷ்ய வீரர்

தளபதியின் கொலை மிரட்டலுக்கு அஞ்சி டாங்கியுடன் உக்ரைன் படைகளிடம் சரணடைந்த ரஷ்ய வீரர் தனது தளபதியின் கொலை மிரட்டலுக்கு அஞ்சி தான் செலுத்தும் இராணுவ டாங்கியுடன் உக்ரைன் படையினரிடம் சரணடைந்துள்ளார் ரஷ்ய வீரர் ஒருவர். மிஷா என பெயர் குறிப்பிடப்பட்ட குறித்த ரஷ்ய வீரர் வெள்ளைக்கொடியுடன் உக்ரைனில் தனக்கு அரசியல் அடைக்கலம் வழங்குமாறு தெரிவித்து சரணடைந்துள்ளார். போரிட மறுத்தால் கொலை செய்யப்படுவீர்கள் என தமது தளபதி அச்சுறுத்தியதாகவும் இதனால் தன்னுடன் பணியாற்றிய சக வீரர்கள் உயிரைக் காப்பாற்ற தப்பிச் சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைனில் இனிமேலும் போரிடுவதில் அர்த்தமில்லை என தாம் கருதுவதாகவும் ஊருக்கு திரும்பினால் கண்டிப்பாக தாம் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை சரணடைந்த ரஷ்ய வீரருக்கு உக்ரைன் இராணுவ அதிகாரிகளின் அனுமதியுடன், உக்ரைன் குடியுரிமையும் 7,500 பவுண்டுகள் உதவித்தொகையும் உக்ரைன் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

c 163 அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக யாழ் இளைஞன்

அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக யாழ் இளைஞன் நியமனம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக நியமனம். அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறை உதவி பேராசிரியராக நியமனம் பெற்றுள்ள யாழ் இந்துவின் மைந்தன் சரங்கன் பாலசுப்ரமணியம் என்ற இளைஞனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. மேலும் ஜார்ஜியா பல்கலைக்கழகம் அமெரிக்காவின் முதன்மை 50 பல்கலைக்கழகங்களின் ஒன்றாகும்

"c 161 புடின் உலகை ஆள்வார்" கவனத்தை ஈர்த்துள்ள பாபா

"புடின் உலகை ஆள்வார்" கவனத்தை ஈர்த்துள்ள பாபா வங்காவின் கணிப்ப ு உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 33 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது. இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர். இந்நிலையில், கீவ் நகரில் ரஷ்யப் படைகள் தனது வான் தாக்குதலை மீண்டும் கடுமையாக்கியுள்ளதுடன், அங்கு தொடர்ந்து குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பு தொடர்பில் பல ஆண்டுகளுக்கு முன்னமே பாபா வங்கா விளாடிமிர் புடின் தொடர்பில் குறிப்பிட்டுள்ள கணிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாட்டவரான பாபா வங்கா 50 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இயற்கை பேரிடர் மற்றும் போர்கள் ஏற்படுவதற்கு முன்பு அவை பற்றியும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், விளாடிமிர் புடின் மற்றும் ரஷ்யா தொடர்பில் அவர் குறிப்பிட்டிருந்த கணிப்புகள் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவும் விளாடிமிர் புடினும் உலக நாடுகளில் ஆதிக்

c 160 யுக்ரேனை கொரியா போல இரண்டாக உடைக்க நினைக்கும் ரஷ்யா

யுக்ரேனை கொரியா போல இரண்டாக உடைக்க நினைக்கும் ரஷ்யா: யுக்ரேன் உளவுத் துறை ரஷ்யாவின் திடீர் முடிவு! உக்ரைன் உளவுத்துறை தலைவர் பரபரப்புத் தகவல் உக்ரைனை இரண்டாக பிரிப்பது பற்றி ரஷ்யா ஆலோசித்து வருவதாக உக்ரைன் மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியாமல் போயுள்ள நிலையில், ரஷ்யாவின் மூலோபாயத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பின் தலைவர், பிரிகேடியர் ஜெனரல் கிரில் புடானோவ், கொரியாவை போன்ற நிலைமையை ரஷ்யா உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். “கீவ் அருகே ஏற்பட்டுள்ள தோல்விகள் மற்றும் உக்ரைனின் மத்திய அரசாங்கத்தை தூக்கி எறிய இயலாமைக்கு பிறகு, புடின் மூலோபாயத்தை மாற்றி, தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளை கைப்பற்ற முயற்சிக்கிறார். அவர் ஒரு” கொரிய “காட்சியை உக்ரைனில் பரிசீலிக்கிறார் என்று நம்புவதற்கு காரணம் உள்ளது’ என்றார். ”அதாவது, நம் நாட்டின் ஆக்கிரமிக்கப்படாத மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்கு இடையே ஒரு பிளவுக் கோட்டைத் திணிக்க முயற்சிப்பார்கள். உண்மையில், இது உக்ரைனில் வட மற்றும் தென் கொரியாவை உருவாக

c 159 அடையாளம் இல்லாமல் போய்விடும்:

வெகு விரைவிலே வடக்கு - கிழக்கு மாகண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும்: தற்போது அரசாங்கம் செல்லும் நிலையைப் பார்த்தால் வெகு விரைவிலே வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் அடையாளம் இல்லாமல் போய்விடும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பில் வெண்மதி கைத்தறி ஆடை உற்பத்தி நிலையத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்களுக்குள் ஒரு பொதுவான கருத்து இருக்கின்றது. வடக்கு, கிழக்கு மக்கள் வேற்றுமைப்படக்கூடாது. தங்களுக்குள் ஒருமித்துச் செயலாற்ற வேண்டும். நாங்கள் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் என்ற ரீதியில் எங்களுக்குள் அன்னியோன்னியம் வரவேண்டும். அதனடிப்படையில் வட மாகாண மக்களுக்கு எவ்வாறான செயல்முறைகளைச் செயற்படுத்தி வருகின்றோமோ அதேபோல் கிழக்கு மாகாண உறவுகளுக்கும் எம்மாலான செயற்திட்டங்களை வகுத்துச் செயற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலே வெளிநாட்டு உறவுகளின் பண உதவியோடு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இந்தச் செயற்பாடு அரசியல் ரீதியானதல்ல, த

c 158 புத்தளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்!

புத்தளத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சிறுமியின் மரணம்! புத்தளத்தில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்று (26-03-2022) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

c 157 அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்!

அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்! பசில் அறிவுரை அழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை முன்வைத்து இன்னமும் எவ்வளவு காலத்துக்கு அரசியலை முன்னெடுக்கப்போகின்றீர்கள்? என முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். அவர்களை இனவாதிகள் என்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச கடுமையாகச் சாடியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் அரசின் அதிருப்திக் குழு கட்சிகளின் தலைவர்கள் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கம்மன்பில, “விடுதலைப் புலிகள் ஆயுதத்தால் பெற முடியாததை கூட்டமைப்பு டொலரை முன்னிறுத்தி பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. அதனால்தான் சர்வகட்சி கூட்டத்தில் கலந்து கொண்டது” என்று குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் வினவியபோது, "கம்மன்பில, விமல் வீரவங்ச ஆகியோர் இனவாதத்தை முன்வைத்துத்தான் தமது அரசியலை நடத்தி வருகின்றார்கள். அரசுக்குள்ளிருந்தும் இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்கள். இதனால் அரசு பெரும் அவப்பெயர

c 156 அமெரிக்கா வலியுறுத்தல்

அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையே பேச்சுக்கள் தொடர வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். "தமிழ் அரசியல் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பை அமெரிக்கா வரவேற்கின்றது. இந்தச் சந்திப்புத் தொடர வேண்டும் என்று ஊக்குவிக்கின்றது' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

c 155 கோட்டாபயவின் பகிரங்க அழைப்பு

பயம் வேண்டாம்! புலம்பெயர் தமிழர்களுக்கு கோட்டாபயவின் பகிரங்க அழைப்பு இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய முயன்று அவர்களுக்கு பாதுகாப்போ அல்லது இதர பிரச்சினைகளோ எதுவும் இருந்து வராமல் போயிருந்தால் அவர்களை இலங்கை வருமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். அவர்களின் பாதுகாப்பை எமது அரசாங்கம் உறுதி செய்யும். புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான விசேட நிதியமொன்று உருவாக்கப்படுதல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யோசனையொன்றை முன்வைத்துள்ளது. இதனைப் பற்றி தொடர்ந்து பேசி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் எமது நாட்டில் பிறந்தவர்களே. அவர்களுக்கு இந்த நாட்டில் எதனையும் மேற்கொள்ள உரிமையுண்டு. அவர்கள் இங்கு வருவதற்கோ அல்லது இங்கு

c 154 "ஜனாதிபதி பதவி விலக வேண்டும்

இலங்கை பொருளாதார நெருக்கடி: "ஜனாதிபதி பதவி விலகி, மேலை நாடுகளில் செல்வாக்கு உள்ள ஒருவர் கைக்கு நாடு செல்லவேண்டும்" பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகி, மேலை நாடுகளின் செல்வாக்கு பெற்ற ஒருவர் கைக்கு இலங்கை செல்லவேண்டும் என்று கூறியுள்ளார் பொருளாதார வல்லுநர் விஜேசந்திரன். இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ள இந்த தருணத்தில், நாட்டு மக்கள் நாளாந்தம் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இவ்வாறான நிலையில், நாடு எதிர்காலத்தில் எவ்வாறான சவால்கள் மற்றும் எவ்வாறான பிரச்சினைகளை எதிர்நோக்கும் என்பது குறித்து, பிபிசி தமிழ் ஆராய்கிறது. இந்த நிலையில், பொருளாதார நிபுணரும் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை மூத்த விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்க்காணல். விளம்பரம் கேள்வி: இலங்கை ரூபா அதன் மதிப்பை இழக்குமா? இலங்கை மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளுமா? பதில்: மற்றுமொரு நாணயத்தை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை இப்போதைக்கு இல்லை. இலங்கை பொதுவாக தன்னுடைய ரூபாவின் பெறுமத