முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 142 ஜனநாயகத்தை மீறயுள்ளாரா?

துரை வைகோ: ‘உள்கட்சி ஜனநாயகத்தை மீறி தேர்வு’ – கட்சியினரின் அதிருப்தியும் வைகோவின் பதிலும்
ம.தி.மு.கவின் தலைமை நிலைய செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ நியமிக்கப்பட்டதற்கு எதிராக அக்கட்சிக்குள்ளே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ` கட்சிக்குள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க வேண்டாம் என ஒன்றரை மணிநேரம் வைகோவிடம் பேசினேன், அவர் கேட்கவில்லை' என்கிறார், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி. சம்பவம் 1: ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் சார்பாக கட்சி நிகழ்ச்சிகள், கட்சி நிர்வாகிகளின் குடும்ப நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் வைகோவின் மகன் துரை வைகோ பங்கேற்று வந்தார் என கட்சிக்காரர்கள் மத்தியில் பேச்சு நிலவியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி ம.தி.மு.கவின் தலைமை அலுவலகமான தாயகத்தில் நடந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் உயர் நிலைக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு ஒன்றை வைகோ நடத்தினார். `என் மகன் என்பதற்காக பதவி வழங்க வேண்டியதில்லை, ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம்' என்றார். இதையடுத்து நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 106 பேரில் 104 பேர் துரை வைகோவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் அவரை தலைமை நிலைய செயலாளராக நியமித்து அறிவிப்பு வெளியானது. `வாக்கெடுப்பில் எதிர்ப்பு தெரிவித்த இரண்டு பேர் யார்?' என்ற கேள்வியும் எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, `துரைக்கு பதவி வழங்கப்பட்டது என்பது வாரிசு அரசியல் இல்லை. ஒருவரை திணிப்பதுதான் வாரிசு அரசியல். தொண்டர்களின் விருப்பப்படியே அவருக்கு பதவி வழங்கப்பட்டது. பொதுவாழ்வுக்குத் தேவையான அனைத்துத் தகுதிகளும் அவருக்கு உள்ளது. தொண்டர்களின் விருப்பப்படியே அவர் தேர்வு செய்யப்பட்டார்' என்றார். விளம்பரம் வைகோவின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் மாவட்ட செயலாளர்கள்: காரணம் என்ன?
வைகோ மகனுக்கு எதிராக வாக்களித்த 2 பேர்: மதிமுக ரகசிய வாக்கெடுப்பில் என்ன நடந்தது? அதேநேரம், இந்தக் கூட்டத்தை அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, ம.தி.மு.கவின் இளைஞரணி செயலாளராக இருந்த கோவை ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் புறக்கணித்தனர். அடுத்து வந்த நாள்களில் கட்சிப் பதவியில் இருந்தும் கோவை ஈஸ்வரன் விலகிவிட்டார். சம்பவம் 2: இதன் தொடர்ச்சியாக, கடந்த 21 ஆம் தேதி ம.தி.மு.கவின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பன், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், உயர்நிலைக் குழு உறுப்பினர் அழகு சுந்தரம் என முக்கிய நிர்வாகிகள் கூடி, `கட்சியில் ஜனநாயகம் என்பது இல்லை. வாரிசு அரசியலை எதிர்த்து அரசியல் தொடங்கிவிட்டு நாமே வாரிசு அரசியலை ஊக்குவிப்பதா?' என அதிருப்தி குரல் எழுப்பினர். மேலும், ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைப்பதற்கு பேரம் நடந்து வருவதாகவும் குற்றம் சுமத்தினர். இந்தச் சூழலில் ம.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ மற்றும் இரண்டு துணைப் பொதுச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதற்கு கூட்டத்தில் இருந்த ஐந்து பேர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டதாக வைகோ தெரிவித்தார். துரை, வைகோ இந்தக் கூட்டத்தை திருப்பூர் துரைசாமி, செவந்தியப்பன், செங்குட்டுவன், அழகுசுந்தரம் உள்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் புறக்கணித்தனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ` நான் யாரையும் இழப்பதற்கு விரும்பவில்லை. என்னுடைய இதயத்துக்குள் வந்தவர்கள், இதயத்தை உடைத்து ரத்தம் கொட்ட செய்துவிட்டுப் போவார்களே தவிர, நான் யாரையும் புண்படுத்தி அனுப்பியது கிடையாது. எனவே அதிருப்தியாளர்களை நீக்குவது குறித்து தற்போது எதையும் கூற முடியாது' என்றார். தொடர்ந்து, ம.தி.மு.கவை தி.மு.கவுடன் இணைப்பது தொடர்பான பேச்சு நடப்பதாக மாவட்ட செயலாளர்கள் சிலர் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, `இந்தக் கட்சி என்றைக்கும் உறுதியாக இருக்கும்' என்றார். மேலும், பொதுக்குழுவை திருப்பூர் துரைசாமி புறக்கணித்தது தொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த வைகோ, `தற்போது அவர் தனிமரம் ஆகிவிட்டார். அவருக்குத் திருப்பூரிலேயே ஆதரவு கிடையாது. ம.தி.மு.க சட்டவிதிகளின்படி பொதுச் செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது' என்றார். இதன்பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரடியாக வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்துப் பேசியுள்ளனர். திருப்பூர் துரைசாமியிடம் 3 கேள்விகள்: பொதுக்குழுவை புறக்கணித்தது ஏன்? நான்தான் ம.தி.மு.கவின் அவைத் தலைவர். என்னை அவரால் ஒன்றும் செய்ய முடியாது. பொடா சட்டத்தில் அழகுசுந்தரமும் செவந்தியப்பனும் 19 மாதங்கள் சிறையில் இருந்தனர். சிறைக்குள் தனக்குத் தேவையான வசதிகளை வைகோ செய்து கொண்டார். வேலூர் சுப்ரமணியத்தைக் கேட்டால், `என்னென்ன வசதிகள் வெளியில் இருந்து வைகோவுக்கு கிடைத்தது?' எனச் சொல்வார். ஆனால், அவர்களை மோசம் என வைகோ சொல்கிறார். கட்சி தொடங்கியபோது, ஸ்டாலினை முன்னிறுத்துவதை எதிர்த்து, `வாரிசு அரசியல் கூடாது' என்றார். அதைத்தான் செவந்தியப்பனும் அழகு சுந்தரமும் கூறுகின்றனர். இதைப் பற்றி வைகோவிடம் தெரிவித்தீர்களா? `` கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி கோவையில் உள்ள ஆடிட்டர் ஒருவரின் வீட்டில் வைத்து வைகோவிடம் ஒன்றரை மணிநேரம் பேசினேன். அப்போது, `மகனைக் கட்சிக்குள் கொண்டு வந்தால் கெட்ட பெயர் ஏற்படும். வாரிசு அரசியல் பற்றி நீங்கள்தான் பேசினீர்கள். இதனால் கட்சிக்கும் உங்களுக்கும் கெட்ட பெயர் வரும்' என்றேன். `நான் எதிர்க்கிறேன்' என்பது அவருக்குத் தெளிவாகத் தெரியும். ஆனாலும், அவர் தவறு செய்கிறார்'' என்கிறார். துரை வைகோவை தேர்வு செய்வது தொடர்பாக வாக்கெடுப்பு நடந்ததே? கட்சியின் சட்டவிதிகளின்படி வாக்கெடுப்பை நடத்த முடியாது. பொதுக்குழுவில் தலைமை நிர்வாகிகள், ஆட்சி மன்றக் குழு, தணிக்கைக்குழு ஆகியவற்றுக்குத்தான் தேர்தல் நடத்த முடியும். தலைமை நிலையச் செயலாளருக்கு அவ்வாறு வாக்கெடுப்பை நடத்த வேண்டிய அவசியமே இல்லை. பொதுச்செயலாளரே நியமித்துக் கொள்வதற்கு அதிகாரம் உள்ளது. சட்ட விதிகள் தெளிவாக உள்ளன. இந்த விவகாரத்தில் ம.தி.மு.க தலைமை எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்துத்தான் அனைத்தும் உள்ளது. வரும் நாள்களில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாகப் பேச உள்ளேன்'' என்றேன். ம.தி.மு.க நிர்வாகியிடம் 2 கேள்விகள்: திருப்பூர் துரைசாமியின் அதிருப்தி குறித்து ம.தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இதையடுத்து, ம.தி.மு.கவின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பேட்ரிக்கிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ``வைகோ குறித்தும் வாரிசு அரசியல் தொடர்பாகவும் திருப்பூர் துரைசாமி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளாரே?'' என்றோம். `` திருப்பூர் துரைசாமியின் கருத்தை, தனி நபர் விமர்சனமாகப் பார்க்க முடியாது. இதுகுறித்து எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தெளிவாகக் கூறிவிட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள் 1400 பேரில் 1300 பேர் வரையில் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்தவகையில் பார்த்தால் 99 சதவீதம் பேர் துரை வைகோவை ஏற்றுக் கொண்டதாகத்தான் அர்த்தம். அவரது பேச்சு புறம்தள்ளக் கூடிய ஒன்று. தலைமையில் இருந்து கடைக்கோடி தொண்டன் வரையில் துரை வைகோவை வரவேற்கின்றனர். பொதுக்குழுவுக்கு துரை வைகோ வரும்போது கொடுக்கப்பட்ட வரவேற்பு என்பது தொடக்ககாலத்தில் பொதுச் செயலாளர் வைகோவுக்கு கிடைத்த வரவேற்பு போல இருந்தது'' என்கிறார். ``முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது ம.தி.மு.கவுக்கு பலவீனம்தானே?'' என்றோம். `` இதனை ஏற்க முடியாது. எல்.கணேசன், கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அனைத்துப் பதவிகளையும் அனுபவித்தவர்கள். அவர்கள் செல்லும்போதுகூட, அவர்களை சங்கடப்படுத்தும்விதமாக கட்சித் தலைமை பேசியதில்லை. `அவர்கள் எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்' என்றுதான் வைகோ கூறுவார். சிலர் விமர்சனத்தை முன்வைத்தபோதுகூட, `அவர்கள் என்னோடு 28 ஆண்டுகள் பயணித்துள்ளனர்' என்றார். மேலும், சிவகங்கை மாவட்டச் செயலாளர் செவந்தியப்பனை நேரில் சந்தித்து சமரசம் செய்வதற்காக துரை வைகோவும் சென்றார். அதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் துரை வைகோ பங்கேற்ற சில நிகழ்ச்சிகளுக்கு செவந்தியப்பனும் வந்திருந்தார். அப்போதே அவர் அதிருப்தியை வெளிக்காட்டியிருக்கலாம். ஒருவரையும் இழக்கக் கூடாது என்பதுதான் கட்சித் தலைவரின் விருப்பம். கட்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரிசெய்ய வேண்டும் என்பது கடைக்கோடி தொண்டர்களின் விருப்பம். அதன் ஒருகட்டமாகவே துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது'' என்கிறார். மேலும்,`` சிறைச்சாலையில் வசதிகளை வைகோ அனுபவித்ததாகக் கூறுவது என்பது அவரைக் களங்கப்படுத்தும் நோக்கமாகவே பார்க்க முடிகிறது. சிறையில் வைகோ இருந்தது குறித்து ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி ஒருவர் எழுதிய புத்தகத்தில், `எந்தளவுக்கு அவர் கஷ்டப்பட்டார்' என்பதை விவரித்துள்ளார். மேலும், சிறையில் உணவை உருட்டி வாயில் போட்டு தண்ணீர் குடித்ததாகவும் வைகோ தெரிவித்துள்ளார். வைகோ குறித்து துரைசாமி கூறியுள்ள கருத்து என்பது காலம் முழுக்க எந்தளவுக்கு அவர் நச்சுத்தன்மையுடன் ம.தி.மு.கவில் இருந்தார் என்பதையே காட்டுகிறது'' என்கிறார் பேட்ரிக்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?