முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

“c 102 நாங்க இனி இருக்கமாட்டோம்..

“நாங்க இனி இருக்கமாட்டோம்..” குழந்தைகளை கொன்று தற்கொலை செய்துகொண்ட ‘தாய்’ எதற்கு தெரியுமா ?
சேலத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது ஏன் ? என்பது பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சேலம் அருகே சின்னவீராணம் ஈச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (44). லாரி அதிபர். இவருடைய மனைவி குறிஞ்சி தமிழ் (29). இவர், நேற்று முன்தினம் இரவு தன்னுடைய 2 மகன்களையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குறிஞ்சி தமிழின் கணவர் ராஜேஷ், மாமியார் முத்தம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதற்கிடையே குறிஞ்சி தமிழ், அவருடைய குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குறிஞ்சி தமிழ் தற்கொலை செய்து கொண்டதற்கான உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன. மாமியார், மருமகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை ராஜேசிடம் கூறும் போது அவர், அதனை பெரிதாக எடுத்து கொள்வதில்லை. நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து ராஜேசிடம் குறிஞ்சி தமிழ் கூறி உள்ளார். அதற்கு அவர் மனைவி மற்றும் தாயை சமாதானப்படுத்தினார். பின்னர் மாலை 5 மணி அளவில் மனைவியிடம் வெளியில் சென்று வருவதாக கூறி உள்ளார். அப்போது குறிஞ்சி தமிழ் கணவரிடம், நீங்கள் திரும்பி வரும் போது நானும், குழந்தைகளும் உயிருடன் இருக்கமாட்டோம் என்று உருக்கமாக கூறி உள்ளார். இவ்வளவு விபரீதம் நடக்கும் என்று தெரியாத அவர் அம்மா இனி சண்டை போடமாட்டார் என்று மனைவியை சமாதானம் செய்து விட்டு வெளியில் சென்று விட்டார். கணவரின் சமாதானத்தில் திருப்தி அடையாத குறிஞ்சி தமிழ், மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர். இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மற்றும் வீராணம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?