முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c98 பகிரங்கமாக அறிவித்தார் புடின்

உக்ரைன் மீதான படையெடுப்பு ஏன்? பகிரங்கமாக அறிவித்தார் புடின்
ரஷ்யாவில், அதிபர் விளாடிமிர் புடின், க்ரைமியாவை இணைத்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நிகழ்வில், லுஷினிகி மைதானத்தில் நிரம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான ரஷ்ய மக்கள் மத்தியில் பேசினார். மைதானம் ரஷ்ய கொடிகளாலும் படையெடுப்பின் அடையாளமான "Z" என்ற எழுத்துகளாலும் நிரம்பியிருந்தது. அப்போது, உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையை புடின் பாராட்டினார். மேலும், அதன் நோக்கம் உள்ளூர் மக்களை இனப்படுகொலையால் பாதிக்கப்படுவதில் இருந்து காப்பாற்றுவதற்காக என்று தெரிவித்தார்.பதற்றத்தில் புடின் - வெளியான அறிவிப்பு
அதிபர் விளாடிமிர் புடின் சமாதானப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக இருப்பதாகத் தான் நம்பவில்லை என்றும் உக்ரைனிய மக்களுக்கு வசதியாக இருக்கக்கூடிய எந்தத் தீர்வையும் அவர் வழங்க வாய்ப்பில்லை என்றும் ரஷ்யாவின் முன்னாள் பிரதமர் மிகைல் காஸ்யனோவ்,தெரிவித்துள்ளார். நடுநிலைமை வாக்குறுதிக்கு அப்பால், அதாவது உக்ரைன் நேட்டோ அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருக்க விண்ணப்பிக்காமல் இருப்பது உட்பட, க்ரைமியா ரஷ்யாவின் ஒரு பகுதி என்று “அதிகாரபூர்வ அங்கீகாரம்” பெற வலியுறுத்துவார் என்று காஸ்யனோவ் நம்புகிறார். “இது மிகவும் முக்கியமானது. புடின் க்ரைமியா விஷயத்தில் மிகத் தீவிரமாக உள்ளார்,” என்று அவர் பிபிசி செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார். காஸ்யனோவ், 2000 முதல் 2004-ஆம் ஆண்டுக்கு இடையில் பிரதமராக இருந்தவர். இரு தரப்புக்கும் இடையிலான தற்போதைய பேச்சுவார்த்தைகளின் விளைவாக எந்தவோர் ஒப்பந்தமும் ஏற்படாது என்றும், ரஷ்ய படைகள் மீண்டும் ஒன்று கூடுவதற்கு மட்டுமே நேரம் கொடுக்கும் எனச் சந்தேகிப்பதாகக் கூறினார். புடினும் அவருடைய நெருங்கிய அரசியல் கூட்டாளிகளும் மேற்கத்தைய நாடுகளால் விதிக்கப்பட்ட “பேரழிவுகரமான” பொருளாதாரத் தடைகளின் அளவு குறித்து “பதற்றமாக” இருப்பதாகவும் தடைகள் இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், "அவர் தொடர்ந்து அடக்குமுறை மற்றும் படையெடுப்பை அதிகரிப்பார் என்று நான் நினைக்கிறேன்,” என்று காஸ்யனோவ் மேலும் தெரிவித்துள்ளார்புடின் உரையை பாதியிலேயே துண்டித்த ரஷ்ய அரச தொலைக்காட்சி புடின் உரையை பாதியிலேயே துண்டித்த ரஷ்ய அரச தொலைக்காட்சி பல்லாயிரக்கணக்கான ரஷ்யர்களுக்கு விளாடிமிர் புடின் ஆற்றிய உரையின் முடிவு நேரத்தில், ரஷ்ய அரசுத் தொலைக்காட்சி திடீரென அவருடைய பேச்சைப் பாதியில் துண்டித்துவிட்டு, தேசபக்தி பாடலை ஒளிபரப்பத் தொடங்கியது. க்ரைமியாவை ரஷ்யா கைப்பற்றியதன் எட்டாவது ஆண்டு நிறைவை, தேசபக்தி உணர்வுடன் கோஷங்கள் எழுப்பி புடின் வரவேற்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?