முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 144 பறிபோகிறது தமிழர் தாயகப் பிரதேசம் -

பறிபோகிறது தமிழர் தாயகப் பிரதேசம் - மட்டக்களப்பில் திறக்கப்பட்டது சிங்களப்பாடசாலை(படங்கள்)
யுத்தம் நிறைவடைந்து பதின்மூன்று வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் முதலாவது சிங்கள பாடசாலை திறப்பு விழா இன்று (24) கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி. அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்றுள்ளது. சிறி சீலாலங்கார சிங்கள வித்தியாலயம் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடசாலையானது பல கிராமங்களைச் சேர்ந்த 25 மாணவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 17 சிங்களப் பாடசாலைகள் 30 வருடகால யுத்தத்தின் போது மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து சிங்கள மக்களும் தென் மாகாணத்திற்கு இடம்பெயர்ந்ததாக மாவட்ட சாசனரக்ஷக பலமண்டலத்தின் செயலாளர் வண.தேவாகல தேவலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிங்கள சமூகம் சம உரிமையும் கல்வி உரிமையும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சில அரசியல்வாதிகள் பிரிவினைவாதத்தை தூண்டி சிங்கள மக்களின் உரிமைகளை அபகரிக்க செயற்படுவதாகவும், இது அரசியல் இலாபங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மாகாணத்தில் வாழும் அனைத்து மக்களையும் சமமாக நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?