முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b789

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை : நிரந்தர எதிரியும் இல்லை - முன்னாள் அரசதலைவர் இலங்கையில் நிரந்தரமான அரசியல் எதிரியும் இருந்ததில்லை, நிரந்தர நண்பரும் இருந்ததில்லை என முன்னாள் அரசதலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னெடுத்த தீர்மானங்கள் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே மேற்கடண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், "அடுத்த அரசதலைவர் தேர்தலில் நான் களமிறங்குவது குறித்து இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை. நாட்டை மீட்டெடுக்க தகுதியான அணியொன்றை உருவாக்கி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே இப்போது எமது முயற்சியாகும். பதவிகள் குறித்து சிந்திக்கும் நேரம் இதுவல்ல. இன்று நாடே எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மக்களை மோசமாக பாதித்துக்கொண்டுள்ள நிலையில் தற்போது எவ்வாறு நாம் மீழ்வது என்பதே மக்களின் மனநிலையாகும். மாறாக யார் அடுத்த அரசதலைவர் , யார் பிரதமர் என நினைக்கும் மனநிலையில் மக்கள் இல்லை" என தெரிவித்துள்ளார்..

TAMIL Eelam news b788

தமிழர்களின் பிறப்பை விட இறக்கும் விகிதம் அதிகரிப்பதாக தமிழ் புத்தி ஜீவிகள் கவலையாழ்.போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவி பரிதாப மரணம்! சோகத்தில் குடும்பம் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சப்ரகமுவா பல்கலைக்கழக மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இணுவில் மேற்கை சேர்ந்த 23 வயதான சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துளார். மேலும், குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி டெங்கு காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் கண்டறியுமாறு பணிக்கப்பட்டது. காய்ச்சல் காரணமாக நேற்று (30-02-2022) ஞாயிற்றுக்கிழமை அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் குறித்த மாணவி இன்று திங்கட்கிழமை (31-01-2022) காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

TAMIL Eelam news b787

ஈஸ்டர் தாக்குதலின் உண்மையை மறைக்கும் ஊடகங்கள்:பேராயர் குற்றச்சாட்டு நாட்டின் சில ஊடகங்கள் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலின் உண்மையை மக்களுக்கு வெளியிடுவதில்லை என கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Cardinal Malcolm Ranjith) குற்றம் சுமத்தியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருக்கும் மறைக்கப்பட்ட உண்மையை ஊடகங்கள் நாட்டுக்கு வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சில ஊடகங்கள் அரசியல்வாதிகளுக்கு தேவையான விதத்தில் தமது ஊடகங்களை கையாண்டு வருகின்றன. எவ்வாறாயினும் ஈஸ்டர் தாக்குதலின் உண்மை வெளிவரும் நாளில் இநத ஊடகங்கள் அழிந்து போகும் எனவும் பேராயர் குறிப்பிட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் வார இறுதியில் கருத்து வெளியிடும் போதே பேராயர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

TAMIL Eelam news b786

இலங்கையில் ஏற்பட்ட பெரும் துயரம்! பரிதாபமாக உயிரிழந்த ஐவரின் புகைப்படங்கள் வெளியாகின (PHOTOS) பதுளை - உமா ஓயா , கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற நிலையில்,நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. காணாமல் போன ஐவரில், நால்வரின் சடலங்கள் நேற்றைய தினம் (29) கண்டெடுக்கப்பட்டிருந்த நிலையில், காணாமல்போன ஐந்தாவது யுவதியின் சடலம் பாரிய பிரயத்தனங்களுக்கு மத்தியில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான சில தகவல்களும்,புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வருடம் உயிரிழந்த ஒருவரது ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் கடந்த 28 ஆம் திகதி கலந்து கொண்ட 11 பேர் சம்பவ தினம் வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெரண்டியல்ல, உமாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் 20 தொடக்கம் 25 வரைக்குட்பட்ட இளைஞர், யுவதிகளாவர். ஆற்றில் நீராடிவிட்டு 6 பேர் அக்கரைக்குச் சென்ற வேளையில் இளைஞர் ஒருவரும், 4 யுவதிகளும் ஆற்றிலிருந்த கற்பாறையொன்றில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் இளைஞர் தவறி ஆற்றில் வீழ்ந

TAMIL Eelam news b785

ஆராதனை முடிந்து திரும்பிக்கொண்டிருந்த பாதிரியார் சுட்டுக்கொலை - பாகிஸ்தானில் துயரம் பாகிஸ்தானில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் வடமேற்கு பெஷாவர் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராதனை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிஷப் வில்லியம் சிராஜ் மற்றும் பாதிரியார் நயீம் பற்றிக் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பலமுறை சுடப்பட்ட பிஷப் வில்லியம் சிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாதிரியார் நயீம் பற்றிக் காயமடைந்தார். த கவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றவாளிகளை பிடிக்க நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். கிறிஸ்தவ சிறுபான்மையினர் மீதான இந்த சமீபத்திய தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை.

TAMIL Eelam news b784

ஜெனிவாவிற்கு அறிக்கை - சுமந்திரன் வெளியிட்ட தகவல் இலங்கையின் தற்போதைய நிலைமைகளை ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்(sumanthiran) தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சனை தற்போது பூதாகரமாக மாறியிருக்கின்றது. இது தொடர்பாக சில பொதுஅமைப்புக்கள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்தவேண்டும் என கலந்துரையாடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம். எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளி

TAMIL Eelam news b783

யாழ்ப்பாணத்தில் மாபெரும் பேரணி! திலீபனின் நினைவிடத்தில் இருந்து சற்றுமுன் ஆரம்பம் - Live ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஜ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி தற்பொழுது நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து சற்று முன்னதாக ஆரம்பமானது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பிக்கப்பட்டது. இந்தப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். பேரணியானது கிட்டுப் பூங்காவிற்கு சென்று நிறைவடையவுள்ளதுடன் அங்கு பொதுக்கூட்டத்தை நடாத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TAMIL Eelam news b782

முத்துக்குமரா! முகம் தெரியாப்போதினிலும் செத்துக்கிடக்கின்றாய் எமக்காக எனவறிந்து தேகம் பதறுகிறதே திருமகனே! உந்தனது ஈகம் அறிந்து எம்மிற்தீ பற்றுகுதே நீட்டிக்கிடக்கின்றாயாம் நீ உனக்கு அஞ்சலியெழுதும் என்னைச்சுற்றி நூறு உடலங்கள் கிடக்கின்றன வரிசையில் அத்தனையும் எம் உறவுகளின் உயிரிழந்த கூடுகள். உன் மேனியில் மூண்ட நெருப்பு உன்னை எரித்ததாய் சொல்லுகின்றார் நீ எரிந்தவன் அல்லன், விரிந்தவன். சின்ன அக்கினிக்குஞ்சே! உன் நெஞ்சிலிருந்த நெருப்பால் எரிந்தாய் அந்தச்சோதிப்பெருவெளிச்சம் எமக்குச்சக்தி தரும் வையவாசலை எமக்காகத் திறக்கச்செய்யும். உன் இறுதி மூச்சு புயலாகித் தமிழ்நாட்டைப் போட்டுலுப்பும். எல்லோருக்கும் சாவு வாழ்வின் இறுதி உனக்கு மட்டுமே சாவு தொடக்கமானது. தம்பி! வாய்நிறைய உன் நாமம் உரைத்து அழைக்கின்றேன். நீ எங்களுக்கு வெறும் முத்துக்குமார் அல்ல எமக்குப்பலம் நல்கும் சக்திக்குமார் இங்கிருந்து உன் முகத்தைக்காண்கிறேன். உன் குரலைக் கேட்கிறேன். உன் மூச்சை உள் வாங்குகிறேன். இடையில் கடல்கடந்தும் வருகின்றது உன் சிரிப்பின் ஓசை. எமக்காக எரிந்தவனை எரிக்கவா போகின்றீர்? கடலிலே அனுப்பி வையுங்கள் அவன் பொ

TAMIL Eelam news b781

வெற்றிகரமான தலைவரின் பண்புகள் -வெளிப்படுத்திய கோட்டாபய (படங்கள்) ஒரு தலைவர் தனக்கு கீழ் பணிபுரிபவர்களின் நல்வாழ்வு மற்றும் வெற்றிக்காக நேர்மையான அர்ப்பணிப்பை மேற்கொள்ளும் போது, ​​அந்த அதிகாரிகள் தமது மேலதிகாரிகளுக்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksha)தெரிவித்துள்ளார். அவ்வாறு செயற்படுவது வெற்றிகரமான தலைமைத்துவத்தின் முக்கிய அம்சமாகும் என தெரிவித்த அரச தலைவர், அதனை நடைமுறைப்படுத்துமாறு விமானப்படை வீரர்களை வலியுறுத்தினார். விமானப்படையின் கெடட் அதிகாரிகளின் வெளியேறும் அணிவகுப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அரச தலைவர் இவ்வாறு தெரிவித்தார். இன்று (29) காலை இலங்கை விமானப்படை கட்டுநாயக்கா முகாமில் அணிவகுப்பு நடைபெற்றது. 70 வருடங்களுக்கு மேலாக தாய்நாட்டிற்கு விமானப்படை ஆற்றி வரும் சேவை மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கும் தேசிய பாதுகாப்பை பேணுவதற்கும் ஆற்றி வரும் சேவையை அரச தலைவர் பாராட்டினார்.

TAMIL Eelam news b780

அவுஸ்திரேலியாவில் பிள்ளைகளை கொன்றுவிட்டு இலங்கையர் தற்கொலை! காரணம் வெளியானது அவுஸ்திரேலியாவில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் வசிக்கும் இந்திக குணதிலக என்று அடையாளம் காணப்பட்டுள்ள இலங்கையரான 40வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும், சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நபர் தனது மனைவியை பிரிந்து வாழ்பவரெனவும்,நேற்றைய தினம் பிள்ளைகளை அவர்களது தாயாரிடம் காண்பிக்க வேண்டியிருந்ததாகவும்,தாயார் பிள்ளைகளை பார்க்க சென்ற நிலையில் அவர்கள் வரவில்லையெனவும், இதையடுத்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதையடுத்து அவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் பின்னர் பொலிஸார் சென்று தந்தையின் சடலத்தை வீட்டிலுள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து மீட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் கடந்த டிசம்பர்

TAMIL Eelam news b779

உன்மைகளை தேடி ஒரு ஆய்வு நீதியரசர் #விக்கினேஸ்வரன் வடமாகாணசபை #முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட போது தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் இவ்வாறு தெரிவித்தார். "எமக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்குவார்கள் என்பதில் ஐயமில்லை ஆனால் 2/3 பெரும்பான்மையை மக்கள் வழங்கினால் அதனை பயன்படுத்தி ஆளுநருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றி அவரை பதவி விலக்க முடியும்" உண்மையில் விக்கினேஸ்வரனுக்கு மாகாணசபைக்கு உரிய அதிகாரங்களை பற்றி தெரியாமல்தான் அப்படி கூறினாரா ? அல்லது தெரிந்து கொண்டும் தேர்தல் நோக்கில் மக்களை ஏமாற்றினாரா என்பது அவருக்கே வெளிச்சம். பின்னர் பதவிக்கு வந்தபின் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. மாகாணசபைக்கு உரிய ஆளுனர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர். மாகாணத்தை பொறுத்தவரை அவரே பரம்பொருள். ஆளுனரை பதவி விலக்க முடியும் என்று பதவிக்கு வந்த முதலமைச்சர் விக்கினேஸ்வரனால் வடமாகாண பிரதமசெயலாளரைக்கூட கட்டுப்படுத்த முடியாது போனது பரிதாபம் வட மாகாண பிரதம செயலாளரை கட்டுப்படுத்தும் வகையில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அனுப்பிய சுற்றறிக்கை க்கு எதிராக பிரதம செயலர்

TAMIL Eelam news b778

தொடர்ந்து முயிட்சி எடுக்கும் எமது புலம்பெயர் உறவுகளிற்கு எமது பாராட்டுக்கள் சிறிலங்கா இராணுவத்துக்கு தடை - பிரிட்டன் வெளியிட்ட அறிவிப்பு சிறிலங்கா இராணுவத்தினருக்கு தடைகள் விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது. வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அமைச்சர் அமன்டா மில்லிங்(Amanda Milling) பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான விடயங்களில் பிரிட்டன் அமெரிக்கா உட்பட ஏனைய சகாக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சர்வதேச மனிதஉரிமை தடைகளின் கீழ் வரக்கூடிய அனைத்து ஆதாரங்கள் மற்றும் சாத்தியமான தடைகள் குறித்தும் பிரிட்டன் அரசாங்கம் உன்னிப்பாக ஆராய்ந்துவருகின்றது என தெரிவித்துள்ள அவர் எதிர்கால தடைகள் குறித்து பொதுவாக நாங்கள் ஊகங்களை வெளியிடுவதில்லை அவ்வாறு செய்வது அவற்றின் தாக்கத்தை குறைக்கும் என குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவை பின்பற்றி சிறிலங்கா இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு(Shavendra Silva) எதிராக யுத்தகுற்ற தடைகளை விதிப்பதற்கு பிரிட்டனிற்கு மேலும் என்ன ஆதார

TAMIL Eelam news b777

கிளிநொச்சியில் 71 மாணவர்களின் கண்களை குறிவைத்த மாபியாக்கள்! வெளிவரும் திடுக்கிடும் கிளிநொச்சி தர்மபுரம் இல.1 ஆரம்ப பாடசாலையில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்தவுடன், அதில் சந்தேமடைந்து அந்த மாணவர்களின் கணிசமான பெற்றோர்களிடம் தொடர்பு கொண்டு பேசினேன். அவர்களின் எனது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இதனை தொடர்ந்து கண்டாவளை வைத்திய அதிகாரியை தொடர்பு கொண்டேன் அவர் அப்போது தனது பணியின் பயிற்சி ஒன்றுக்காக விடுமுறையில் இருந்தார். இருப்பினும் அவருக்கு இது தொடர்பில் தெரியவில்லை என்பதோடு அவரது அலுவலகத்தில் இது தொடர்பில் அனுமதிபெறவோ அல்லது அறிவிக்கவோ இல்லை என்பதும் அறிந்துகொண்டு மேலும் சில அதிகாரிகளை தொடர்பு கொண்டு விடயத்தை ஆராய்ந்த போது இதற்கு பின்னால் வியாபார நோக்கம் இருந்ததை அறிந்து கொண்டு அதனை அம்பலப்படுத்தினேன். இதற்கு பின்னர் அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்கினார்கள் அதன் விளைவு மருத்துவ மாபியாக்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனைமேற்கொண்ட தனியார் கண் மருத்துவ நிறுவனம் ஒன்று 71 மாணவர்களு

TAMIL Eelam news b776

தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் மக்கள் தமது முடிவை அறிவிக்கக் கூடிய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தத் தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் - நெல்லியடியில் 13 ம் திருத்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களை முடக்குகின்ற தரப்புக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 30 ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு ஆதரவு கோரி பரப்புரையில் இன்று ஈடுபட்ட போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் முன்னணி உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இன்றைக்கு இலங்கை அரசு சீனா என்கின்ற விடயத்தைப் பயன்படுத்தி இந்தியாவைக் கொண்டு இந்த ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற இந்த வேலையைச் செய்விக்கின்றது. இந்த இடத்திலேயே வந்து நாங்கள் தமிழ்நாட்டு உறவுகளை உரிமையுடன் கேட்டுக்

TAMIL Eelam news b775

அவுஸ்திரேலியாவில் கின்னஸ் சாதனை படைத்த தமிழ் சிறுவன் (PHOTOS) அவுஸ்திரேலியா - சிட்னியைச் சேர்ந்த தமிழ் சிறுவன் drums வாத்தியத்தில் புதிய முயற்சியை மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பிரிதீஷ் A R என்ற 12 வயது சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார். Drums வாத்தியத்தில் ஒரு நிமிடத்தில் 2370 drumbeats-ஐ வாசித்ததன் மூலம் இந்த சாதனை நிலைநாட்டப்பட்டிருக்கின்றது. இதற்கு முன்னர் ஒரு நிமிடத்தில் 2109 drumbeats பதிவு செய்யப்பட்டமையே சாதனையாக காணப்பட்ட நிலையில் அதனை பிரிதீஷ் முறியடித்துள்ளார். கடந்த 2020 ஆண்டில் drums வாத்தியம் தொடர்பிலான Trinity College of London தரம் 8 பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அதன்பின்னர், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மேற்படி கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

TAMIL Eelam news b774

கண்ணை மூடிக் கொண்டு ஒப்பம்யிட்டபின்னர் கவிதை எழுதத் தொடங்கிய விக்கி ஒப்பம் இட முன்னர் இதை மறுத்து முதல்ல செய்து இருந்தால் தமிழர்களின் மனங்களில் சாகாவரம் பெற்று யிருப்பாய் நன்பா கவலையை விடு உன்னை மாற்றிக்கொள்ஜனாதிபதிக்கு மூன்று முக்கிய அறிவுரைகளை சொன்ன விக்கி! இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் முதலில் மூன்று முக்கிய விடயங்களை செய்யுங்கள் என ஜனாதிபதிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran) தெரிவித்துள்ளார். நாட்டில் இன நல்லிணக்கத்தை உருவாக்கி சாந்தியும் சமாதானமும் உருவாக ஜனாதிபதி கோட்டாபய (Gotabaya Rajapaksa) மற்றும் அவரின் அரசாங்கமும் உண்மையாக உழைக்க விரும்புகின்றார்கள் என்றால் முதலில் பின்வருவனவற்றை அவர்கள் செய்யவேண்டுமென மூன்று முக்கிய அறிவுரைகளை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தொல்பொருள் திணைக்களம், வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பல திணைக்களங்கள் தற்போது வடக்கு கிழக்கில் நடத்தி வருகின்ற இன கலாச்சார அழிப்பின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இனப் ப

TAMIL Eelam news b773

அகில இலங்கை ரீதியில் பெருமை சேர்த்த தமிழ் மாணவிகள்! (Photos) 2021ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கு இடயைில் நடைபெற்ற கறாத்தே போட்டி நிகழ்வில் 2ம் மற்றும் 3ம் இடத்தினை இரு மாணவிகள் பெற்றுள்ளனர். வாழைச்சேனை என்னும் இடத்தில் விபுலாந்தர் வீதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பிள்ளைகளே இவ்வாறு சாதித்துள்ளனர். மேலும் குறித்த குடும்பத்தில் மொத்தமாக மூன்று பெண் பிள்ளைகளும் தாயாரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தாயாரின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் இவர்கள் தங்களது அதித முயற்சியின் பயனாகவே இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளி்ன் தாயார் அன்றாடம் கூலித்தொழில் {மட்டி வியாபாரம்} செய்தே இந்த மூன்று பிள்ளைகளையும் வளர்த்து வருகின்றார். போட்டியில் வெற்றியீட்டிய இவர்களை சான்ரிதல்கள் பெறுவதற்காக தலைநகருக்கு அழைக்க பட்டார்கள் எனினும் குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக கொழும்பிற்கு செல்வதற்கு பணவசதி இன்மையால் இவர்களின் வெற்றி கேடயம் மற்றும் சான்றிதல்கள் என்பவைகள் தலைநகரிலே காணப்பட்டது. இதனை அறிந்த சகோதர இனத்தவர் தனது பணத்தில் இந்த சான்றிதல்களையும் கேடயங்களையும் கொழும்புக

TAMIL Eelam news b772

வெல்லப்போவது புலம்பெயர் தமிழர்களா அல்லது சிங்கள அரசா பொறுத்துயிருந்து பாருங்கள் ? புலம்பெயர் தமிழர்களால் சிங்களவர்களை முற்றாக அளிக்க முடியும் என்பதை சிங்களவர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். ஐரோப்பியாவில் வாழும் தமிழர்கள் பெரும் தொகை பணத்தை இலங்கை வங்கியூடாக அனுப்பி வந்தார்கள் அது திடிரென குறைவடைந்மையால் அரசு கடுமையாகக் குழப்பம் அடைந்துள்ளது. பெரும் தொகையான தமிழர்கள் உண்டியல் மூலம் முஸ்ஸிலிம்கள் ஊடாக இப்பணமாற்றத்தை செய்வதாகவும் அப்பணம் பாதுகாப்பான முறையில் பள்ளிவாசல்களில் இருக்கும் எனவும் எக்காரணம் கொண்டும் அவை வேங்கிற்கு அனுப்பப்படாது என தெரியவந்துள்ளது புலம்பெயர் தமிழர் முடிவால் தடுமாறும் இலங்கை மத்திய வங்கி! சர்வதேச விமான சேவைகள் புலம்பெயர் மக்கள் இலங்கைக்கு அனுப்பும் அந்நிய செலாவணி இலங்கையின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய மூலமாகும்.இவை கடந்த சில நாட்களாக பின்னடைவை சந்தித்துள்ளமையானது இலங்கை மத்திய வங்கிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கலாநிதி கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ஜனவரி 18 ஆம் திகதிக்கு பின்னரான

TAMIL Eelam news b771

கனடா எல்லையில் பனியில் உறைந்து பலியான இந்திய குடும்பம் தொடர்பில் வெளியான புதிய தகவல் கனடா - அமெரிக்க எல்லை அருகே குழந்தை உட்பட நான்கு பேர் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அமெரிக்காவுக்குச் செல்லும் கனவில், கனடா எல்லையில் பனியில் உறைந்து பரிதாபமாக உயிரிழந்த குடும்பம் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கனடா மற்றும் அமெரிக்க எல்லை மாகாணங்கள் கடும் பனிப்புயலால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உட்பட நான்கு பேரின் உடல்களை மானிடோபா பொலிஸார் கண்டுபிடித்தனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்கள் இந்தியர்கள் எனவும், இறந்தவர்களில் 2 பேர் பெரியவர்கள்,ஒருவர் நடுத்தர வயது உடையவர்,அமெரிக்காவில் மனித கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இறந்தவர்கள் அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. உயிரிழந்தவர்கள், குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் (Jagdish 35), அவரது மனைவி வைஷாலி (Vaishali 33)

TAMIL Eelam news b770

தமிழர்கள் சாவடையும் விகிதம் அதிகரிப்பு காரனம் என்ன? யாழ் வைத்தியசாலையில் சிறுமிக்கு காத்திருந்த பெரும் சோகம் உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமி இன்று காலை சுகவீனம் காரணமாக யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். சுவாச பிரச்சினை காரணமாகக் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா என்ற 4 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

TAMIL Eelam news b769

பயங்கரவாதி என்ற பேரில் தமிழர்களை அழித்து தற்பொழுது இலங்கையில் உள்ள அனைத்து மனிதர்களின் பணத்தையும் சூறையாடும் திட்டம் அரங்கேற்றம். இலங்கை தனியார் வங்கிகள் தொடர்பில் அதிரடி அறிவிப்பு இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களில் மூன்றில் ஒரு பங்கை இலங்கை மத்திய வங்கி (Cenral Bank of Srilanka) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Udaya Gammanpila)அரசுக்கு பெற்றுக்கொள்ளும் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். மருந்து, மருத்துவ உபகரணங்கள், எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்ய இந்த பணத்தை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குமாறு அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக அத்தியசிய உணவு, மருந்து, எரிபொருள் போன்றவற்றை இறக்குமதி செய்வதில் பெரும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து கைமாற்று உடன்படிக்கை மூலம் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது

TAMIL Eelam news b768

யாழில் சிங்களக் கைக்கூலிகள் அட்டகாசம் பெரும் தொகையான சொத்து சேதப்படுத்த பட்டுள்ளது தமிழர்களிற்கு ஒரு நிரந்தரமானதீர்வு கிடைக்கும் வரை ஐக்கிய நாடுகளின் படையை பாதுகாப்பிற்கு கோருவது பொருத்தமாகயிருக்கும் தற்பொழுது சீனா அமெரிக்கா போன்ற நாடுகளிற்கு இடையே ஏற்பட்டுக் கொண்டுயிருக்கும் பொருளாதர பாதுகாப்பு பிரச்சனைகளை முன்னிட்டு அமெக்கா சார்ந்த ஐரோப்பியா யூனியன் போன்ற நாடுகள் தமிழர்களின் கோரிக்கையை ஏற்பதற்கு நூறு வீத வாய்ப்பு யுள்ளது என்பதை தமிழர்கள் மறந்து விடக் கூடாது. அப்படி செய்வோமானால் தமிழர்களின் உடமை உயிர் இருப்பிடம் இவற்ரை எம்மால் பாது காற்க முடியும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்வான ஆற்பாட்டங்களை முன்னெடுக்க வேண்டும். யாழ் கோண்டாவில் பகுதியில் பதற்றம் கோண்டாவில் அம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இனந்தெரியாத வன்முறைக் கும்பலொன்று பெட்ரோல் குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் தெரியவருகையில், கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை

TAMIL Eelam news b767

இருபரும் கோத்வாய செல்லப்பிள்ளைகள் யார் பக்கம் நீதி வளங்கப்படும் பொறுத்துயிருந்து பாருங்கள் மக்களே? வியாழேந்திரன் வீட்டிற்கு முன் இளைஞன் படுகொலை - விசாரணை செய்ய சுமந்திரன் நீதிமன்றில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னாள் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட போது அமைச்சர் தனது வீட்டிலே இருந்தார் என்றும் அதற்கு பின்னர் தான் அவர் அங்கிருந்து வெளியேறி சென்றார் என்ற சாட்சியங்கள் சம்மந்தமாகவும் சம்பவம் தொடர்பாக அவருடைய தொலைபேசியிலிருந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தது தொடர்பாக விசாரிக்வேண்டும் என நகர்த்தல் பத்திரம் மூலம் இன்று திங்கட்கிழமை (24) நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.சுமந்திரன் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி இராஜாங்க அமைச்சரின் வீட்டு வாசலில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் மாகாலிங்கம் பாலசுந்தரம் தொடர்பான வழக்கு இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுக்கொள்ளப்பட்டது. இதில் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் சார்பில் சட்டத்தரணி கமலாநாதன், ஜனாதிபதி

TAMIL Eelam news b766

புலம்பெயர் தமிழர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பகிரங்க குற்றச்சாட்டு குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை தற்போதும் முன்னெடுத்து செல்வதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே(Jayanath Colombage) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப்புலிகள் இராணுவரீதியாக உள்நாட்டில் தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் வெளிநாடுகளில் செயற்படுகின்றனர். அவர்களது ஆயுதங்கள் தற்போது தற்கொலை குண்டுகளும் ஆட்டிலறிகளும் இல்லை மாறாக பரப்புரை நீதிமன்ற நடவடிக்கைகள் -பிரசாரமே தற்போது அவர்களின் ஆயுதங்கள். ஆனால் அவர்களின் கொள்கை மாறவில்லை- தமிழீழம் என்ற தனிநாடு.குறிப்பிடத்தக்க அளவு புலம்பெயர்தமிழர்கள் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னெடுப்பதால் வாக்குகளை பெறுவதற்காக அவர்களுக்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுக்கும் நிலையில் உள்ளவர்களின் ஆதரவை அவர்களால் பெறமுடிகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news b765

கொரோனாவிலிருந்து மீண்ட பிறகு கர்ப்பம் தரித்தால் ஆபத்தா? எவ்வளவு காலம் எடுத்துக்கொள்ள வேண்டும்? எச்சரிக்கை கோவிட்-19 இலிருந்து மீண்ட உடனேயே கருத்தரிக்க முயற்சித்தால், நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன், கோவிட்-19 இலிருந்து மீண்ட பிறகு எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். கோவிட்-19 லிருந்து மீண்ட உடனேயே கருத்தரிப்பது புதிதாகப் பிறக்கும் குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால், கொரோனா வைரஸ் தொற்று நமது சுவாச மண்டலத்தை மட்டும் பாதிக்காது. ஆனால் அதன் தாக்கம் உடலின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகிறது. மேலும், சில சந்தர்ப்பங்களில் ஆரம்ப நோய்த்தொற்றுக்குப் பிறகும் கூட ஒருவர் கோவிட்-19 இன் அறிகுறிகளை அனுபவிக்கலாம். கர்ப்பத்தின் ஒன்பது மாத நீளமான பயணம் சவாலானது மற்றும் கடுமையான மாற்றங்களைக் கையாள உங்கள் உடல் தயாராக இல்லை என்றால், விஷயங்கள் இன்னும் சிக்கலானதாகிவிடும். இந்த எல்லா காரணங்களுக்காகவும், கர்ப்பத்தைத் திட்டமிடுவதற்கு முன்பு சிறிது காலம் காத்திருப்பது

TAMIL Eelam news b765

13 ஆவது திருத்த சட்டத்தை இனப்படுகொலை நடந்த பின்னர் கோருவது எந்த வகையில் நியாயம்? - கஜேந்திரகுமார் கேள்வி 34 வருடங்களுக்கு முன்னர் நிராகரித்த 13ஆவது திருத்தச் சட்டத்தை இனப்படுகொலை நடந்த பின் கோருவது எந்த வகையில் நியாயம் எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் பின் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தம் என்பது 1987 ஆம் ஆண்டே அடியோடு நிராகரிக்கப்பட்ட ஒரு ஆவணம். 13 ஆவது திருத்தமும் மாகாணசபை சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட போது இன்றைக்குக் கூட்டமைப்பின் தலைவர் எனச் சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகிய மூன்று பேரும் இணைந்து இந்த 13 ஆவது திருத்த வரைபை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றாது தடுத்து நிறுத்துங்கள் என ராஜீப் காந்திக்குக் கடிதம் எழுதினார்கள். அது ஒரு ஆரம்பப் புள்ளியாகக் கூட கருத முடியாத

TAMIL Eelam news b764

சிங்கள வெறியர்களோடு வாழ முடியாது என்பதை உணர்ந்த தமிழர்கள் தங்களின் பாரம் பெரிய நகரங்களின் பெயர்களை வெளிநாடுகளில் வைத்து வருவதை நாம் அறிவோம் அவ்வகையில் இவர்களின் முயிற்சியைப் பராட்டுவோம் தொடரட்டும் உறவுகளின்பணி. இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு (Videos) ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியது. அதன் பிரகாரம் பிரித்தானியாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை திங்கள் பிரித்தானிய பாரளுமன்றம் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தகவல் நடுவம் (TIC) நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்ய தமிழர் மரபு திங்கள் நிகழ்வு லண்டன் கிங்ஸ்ரன் நகர ந

TAMIL Eelam news b763

யாழ்ப்பாணம் வந்த வான் கொக்காவில் பகுதியில் விபத்தில் சிக்கியது (படங்கள்) வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வான் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கொக்காவில் பகுதியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று(22) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வான் கொக்காவில் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து குறித்து மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news b762

சீனாவுக்கு பதிலடி கொடுத்தது அமெரிக்கா கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பாதிப்பு அதிகரிக்கும்போது, சூழ்நிலைகளுக்கு ஏற்ப வெளிநாடுகளுக்கான விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்காவிலிருந்து சீனாவுக்குச் செல்லும் 44 விமான சேவைகளை அமெரிக்க அரசாங்கம் இரத்து செய்துள்ளது. 4 சீன விமான நிறுவனங்களைச் சேர்ந்த சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 30 மற்றும் மார்ச் 29-க்கு இடைப்பட்ட காலகட்டங்களில் அமெரிக்காவில் இருந்து ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜியாமென் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களால் 44 விமானங்கள் இயக்கப்படவிருந்த நிலையில், அந்த விமானங்கள் தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா பரவல் காரணமாக சீன அரசு, அண்மையில் அமெரிக்க விமான சேவைகளை இரத்து செய்த நிலையில், அதற்கு பதிலடியாக அமெரிக்காவும் சீன நிறுவனங்களின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b761

பத்து நாடுகள் பங்குபற்றிய கிக்பொக்சிங் போட்டியில் வெற்றிவாகை சூடிய வடமாகாண தங்க மங்கைகள்! சர்வதேச ரீதியாக பத்து நாடுகள் பங்குபற்றிய கிக்பொக்சிங் போட்டியில் வடமாகாணத்தில் இருந்து முதல் முறை பெண்கள் கலந்துகொண்டுள்ளனர். அந்தபோட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கங்களை வவுனியாவைச் சேர்ந்த வீராங்கனைகள் வெற்றி கொண்டனர். இந்நிலையில் தங்கப்பதக்கங்களை வென்ற தங்கமங்கைகளுக்கு பலரும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறி வருகின்றனர். தொரட்டும் தங்களின் வெற்றிகள்

TAMIL Eelam news b760

வடிகட்டின முட்டாள் சிங்கக் கொடியை போர்த்தி தமிழர்களின் வீரத்தை ஏலத்தில் போட்டுவித்துள்ளார் ஐம்பதினாயிரம் மாவீரர்கள் இந்தக் கொடியை எதிர்த்துப்போராடி வீரச்சாவு அடைந்தார்கள் என்பதை இந்தத் தருதலைக்கு தாய் தகப்பன் சொல்லிக் கொடுக்கவில்லையா? அல்லது இணையத் தளங்களை பார்க்கும் பளக்கம் இல்லையா? என்பதை எண்ணி உலகத் தமிழர்கள் கவலையடைத்தனர் இத்தச் செய்தியை பிரபலியப்படுத்த வேண்டாம் என 5016 தாயக உறவுகள் தெரிவித்து தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். யொஹானி டி சில்வாவிற்கும் சிங்கக் பிடிக்கத் தெரியும் ஆனால் 8 கோடி தமிழர்களின் மனதை புண்படுத்தக் கூடாது என்றே ஒரே காரணத்திற்காகத்தான் அவர்கள் அதை பெரிது படுத்தவில்லையென்பதை உலக வாழ் தமிழர்கள் விளங்கியுள்ளனர். மீடியாக்களும் அவரின் செய்திக்கு முன்னுருமை கொடுத்தன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இருவரும் பெண்கள்... இருவரும் இலங்கையர்கள்!! ஆனால் ஏன் இந்த வேறுபாடு? இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசா