முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b757

போரில் வெற்றிபெற நாங்களே இலங்கைக்கு உதவினோம்! - சீனா பெருமிதம்
இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியதாக சீனா தெரிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கைக்கு உதவ ஏனைய நாடுகள் தயக்கம் காட்டினாலும், சீனா இலங்கைக்குகு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து பல தசாப்தங்களாக நீடித்த போரை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக தெரிசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார். இலங்கையின் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின்போது, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், இலங்கையில் சீனாவுடன் போட்டிபோடும் இந்தியாவும் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலை கொண்டுள்ளது என்ற பிரச்சாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்து செய்யப்படுவதால் இலங்கை பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் விலைமனுகோரல் விடுக்கப்பட்டு, சீன தனியார் துறையால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதற்கும் சீனத் தூதரகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த கடன் நெருக்கடியை இலங்கை வெற்றிகொள்ளும் என தான் நினைப்பதாகவும், இந்த சிரமங்கள் தற்காலிகமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், சீன- இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்குகு நீண்டகால சலுகையாக அமையும் எனத் தெரிவித்துள்ள செங்ஹோங், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?