முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b764

சிங்கள வெறியர்களோடு வாழ முடியாது என்பதை உணர்ந்த தமிழர்கள் தங்களின் பாரம் பெரிய நகரங்களின் பெயர்களை வெளிநாடுகளில் வைத்து வருவதை நாம் அறிவோம் அவ்வகையில் இவர்களின் முயிற்சியைப் பராட்டுவோம் தொடரட்டும் உறவுகளின்பணி.
இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்! உத்தியோக பூர்வ அறிவிப்பு (Videos) ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியாவில் தமிழர் பாரம்பரிய மாதமாக பிரகடணப்படுத்தியது. அதன் பிரகாரம் பிரித்தானியாவில் இம்மாதம் தமிழர் மரபுரிமை திங்கள் பிரித்தானிய பாரளுமன்றம் உட்பட பல இடங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தகவல் நடுவம் (TIC) நேற்று சனிக்கிழமை ஏற்பாடு செய்ய தமிழர் மரபு திங்கள் நிகழ்வு லண்டன் கிங்ஸ்ரன் நகர நியூ மோல்டனில் நடைபெற்றது. இந்நிகழ்வின் ஆரம்ப பிரதான நிகழ்வாக கிங்ஸ்டன் நகர பெயர்ப்பலகையில் யாழ்ப்பாண நகரத்தின் பெயரும் இணைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இரு நகரங்கள் இணைவுத்திட்ட அடிப்படையில் லண்டனின் கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரம் இலங்கையின் யாழ்ப்பாண நகரை கடந்த 2016 ஆம் ஆண்டு தனது இரட்டையராக ஏற்றுக்கொண்டது. இதற்கான ஒப்பந்தத்தை அப்போதைய வட மாகாண முதலமைச்சாராக இருந்த தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே லண்டன் கிங்ஸ்ரன் நகர பெயர் பலகையுடன் யாழ்ப்பாணத்தின் பெயரையும் இணைத்து ‘Twinned with Jaffna‘ என்ற பெயர் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. தமிழர்களின் மங்கள வாத்தியம் நாதஸ்வரம் மற்றும் பறை வாத்திய இசைகள் முழங்கள் வண்ண நிற பலூன்கள் வானில் பறக்கவிட பிர்த்தானிய பாராளுமன்ற உறுப்பிடன் எட் டேவி குறித்த பெயர் பலகையினை திறந்து வைத்தார். பின்னர் தமிழர் கலைகளான குதிரையாட்டம் கோலாட்டம் என மங்கள வாத்திய இசைகளுடன் விழா நடை பெறும் மண்டபம் நோக்கி கலாச்சார ஊர்வலம் நடைபெற்றதுடன் அங்கு பொங்கல் விழாவும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உட்பட புலம் பெயர் தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களை சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?