முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 724

 ஆஸ்துமாவை குணப்படுத்த இந்த ஒரு பொருளே போதுமாம்.. சித்தர்களின் ஆயூர்வேத ரகசியம்!   கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்த ஆயுர்வேதத்தில் வைத்தியர்கள் சித்திரத்தை பயன்படுத்துவார்கள். மேலும், சாதாரண காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்புகளுக்கு சிறிதளவு சித்திரத்தை மற்றும் சிறிதளவு கற்கண்டு ஆகியவற்றை தூளாக்கி ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் காய்ச்சல் மற்றும் சுவாச பாதிப்பு யாவும் விலகிவிடும். சிலருக்கு இரைப்பு, இருமல், ஆஸ்துமா பாதிப்பு காரணமாக மூச்சை அடைக்கும், அவர்கள் சித்தரத்தை, அதிமதுரம். தாளிசப்பத்திரி, திப்பிலி, மிளகு ஆகிய மூலிகைகளை வறுத்து அரைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வர பாதிப்புகள் விரைவில் குணமாகும். பின்னர், நன்கு உலர்ந்த சித்தரத்தை, அமுக்கிரா கிழங்கை எடுத்து இடித்து தூளாக்கி தேனில் குழைத்து இரு வேளை ஒரு மண்டலம் என்ற கால அளவில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வெகுநாட்களாக எலும்பு வலி போன்ற பாதிப்பு குறையும். எலும்பின் ஆற்றல் மேம்படும். சித்தரத்தை துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் த

TAMIL Eelam news 723

 உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க பயன்படும் உணவு வகைகள் என்னென்ன? இனியும் தவிர்க்காதீர்கள்!   கொரோனா வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. பல நோயாளிகள் ஆக்ஸிஜன் தட்டுப்பட்டால் உயிரிழந்தனர். இதனையடுத்து, நமது உடலில் ஆக்ஸிஜனை அதிகரிக்க என்னென்ன உணவு வகைகளை சாப்பிடலாம் என்பதை பற்றி தெரிந்துகொள்வோம். மனித உடலில் ஓடும் இரத்தத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தால் தான், உடலுறுப்புக்கள் சிறப்பாக இயங்கும். ஆனால், நுரையீரல் நோய், ஆஸ்துமா, இரும்புச்சத்து குறைபாடான இரத்த சோகை போன்றவற்றால், உடலில் ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் குறைவாக இருந்தால், அது பதற்றம், தலைவலி, மூச்சுவிடுவதில் சிரமம், வெளிரிய தோல், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும். மேலும், ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க ஆக்ஸிஜன் தெரபி, உடற்பயிற்சி மற்றும் குறிப்பிட்ட சில உணவுகளும் உதவும். உணவுகள் பழங்களுள் அவகேடோ, பெர்ரிப் பழங்கள், கேரட், கனிந்த வாழைப்பழம், செலரி, பூண்டு, பேரிச்சம் பழம் போன்றவற்றில் ஆக்ஸிஜன் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இந்த பழங்களில் உள்

TAMIL Eelam news 722

 யாழில் ஸ்ரீலங்கா படை தாக்குதல் நடத்தியுள்ளது! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.   இதன் போது கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் தப்பி சென்றுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பருத்தித்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலையிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் , கடத்தல்காரர்களின் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குடத்தனை பகுதியில் கடற்படையினர் சுற்றுக்காவல் (ரோந்து) பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் வந்த “கன்ரர்” ரக வாகனத்தை மறித்துள்ளனர். வாகனம் கடற்படையினரின் கட்டளையை மீறி சென்ற போது கடற்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதன் போது வாகனத்தில் பயணித்தவர்களும் , வாகனத்திற்கு வழி காட்டியாக சென்றதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒட்டிச்

TAMIL Eelam news 721

 பாதுகாப்பற்ற நாடாக மாறிவரும் இலங்கை நாடு டிப்பரை வழிமறித்து சாரதி மீது வாள்வெட்டு! வவுனியாவில் பெரும் பதற்றம்! வவுனியா சோயாவீதிக்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், தாண்டிக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர்நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சோயாவீதிக்கு அண்மையில் வழிமறித்த இருவர் அதன் சாரதி மீது வாளால் தாக்கிவிட்டு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். இதனால் படுகாயமடைந்த சாரதி அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAMIL Eelam news 720

 ஜென்டில்மேன், முத்து பட நடிகை சுபஸ்ரீ-யை ஞாபகம் இருக்கா? லட்டு மாதிரி இருந்த பொண்ணு பூந்தி மாதிரி ஆன புகைப்படம் 1993 ஆம் ஆண்டு அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஜென்டில்மேன். இது ஷங்கரின் முதல் படமும் கூட. ஏ ஆர் ரகுமான் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது. அதுபோக கவுண்டமணி மற்றும் செந்தில் காமெடியைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சங்கரின் முதல் படம் என்பதால் தன்னுடைய படத்தை பார்த்து பார்த்து செதுக்கினார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சுபஸ்ரீ.   கிளாமர் கதாபாத்திரமாக இருந்தாலும் அன்றைய கால ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக மாறினார். அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேஎஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான முத்து படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் தமிழை விட தெலுங்கில் அதிகமாக பேசப்பட்டார். அதற்கு காரணம் தெலுங்கில் கிளாமர் நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த வகையில் சுபஸ்ரீ தெலுங்கில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். அதன் பிறகு ஹீரோயினாக எங்கேய

TAMIL Eelam news 719

 இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குள் நுழையத்தடை: வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகள் ஆஸ்திரேலியாவில் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு நாடுகள் வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் பயணிகள் நுழைவதாகவும் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இந்த வழிகளும் தற்போது அடைக்கப்பட்டு வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றின் பரவல் இந்தியாவில் பெருகி வரும் நிலையில், வரும் மே 15ம் தேதி வரை இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இதனால் பயணிகள் பலர் கட்டார், சிங்கப்பூர், மலேசியா வழியாக ஆஸ்திரேலியாவுக்கு நுழைய முயற்சிக்கின்றனர். கத்தார் ஏர்வேஸ் தங்களின் விமானச் சேவை வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முடியும் எனத் தெரிவித்திருந்த நிலையில், கத்தார் ஏர்வேஸூடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து, கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் வேறு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக ஆ

TAMIL Eelam news 718

 அரசியல் பழிவாங்கல்களை உடன் நிறுத்துங்கள் - கோட்டாபயவுக்கு அழைப்பு விடுத்துள்ள கரு ஜயசூரிய   நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள சவாலை வெற்றிகரமாக முகம்கொடுப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதன் தேவை குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு எதிர்கொண்டுள்ள சவால்மிக்க நிலைமைக்கு வெற்றிகரமாக முகம்கொடுப்பதாக இருந்தால் நாங்கள் அனைவரும் ஒரே தேசமாக இன மத, அரசியல் பேதங்களைவிட்டு ஒன்றாக கைகோர்த்துக்கொள்ளவேண்டியது அனைத்து தரப்பினரதும் பொறுப்பாகும். இதற்கான முன்மாதிரியை ஆரம்பமாக வழங்குவதற்கு நாட்டில் ஆளுங்கட்சி மற்றும் அரச தலைவர் முன்வரவேண்டும். அதனடிப்படையில் அரசியல் ரீதியில் மேற்கொள்ளப்பட

TAMIL Eelam news 717

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தட்டுப்பாடு! மக்களிற்கு முக்கிய அறிவித்தல்    மட்டக்ககளப்பில் கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் இன்று வெள்ளிக்கிழமை (30) மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர்இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மையிலே சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றிக்கைக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலே பொதுமக்கள் அதிகளவாக நகர்பகுதியில் நடமாடுவதாகவும் ஒரு சில இடங்களில் தனியார் வகுப்புக்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. எனவே இன்றில் இருந்து தனியார்வகுப்புக்கள் தடை விதிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் இதை மீறுவோருக்கு எதிராக சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிசாராலும் உரிய சட்டநடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையிலே வழக்கமாக ஒரு நாளைக்கு 4 த

TAMIL Eelam news 716

 திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 45 பேர் பலி... பலர் கவலைக்கிடம்: வெளிவரும் பகீர் தகவல்   வடக்கு இஸ்ரேலில் மெரோன் மலையின் அடிவாரத்தில் இடம்பெற்ற மத திருவிழாவில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் மற்றும் 150 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இடம்பெற்ற இந்த Lag B'Omer மத திருவிழாவில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த சம்பவத்தை "மிகப்பெரிய பேரழிவு" என்று தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் துணை மருத்துவர்களும் சிபிஆரை நிர்வகிக்கும் குழுக்களின் குழப்பமான காட்சிகளை விவரித்தனர், மேலும் இச்சம்பவத்தில் குழந்தைகள் உட்பட மக்களுக்கு பெருமளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு தரையில் விழுந்துள்ளனர்.

TAMIL Eelam news 715

 மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சோகம் சாய்ந்தமருதில்! சாய்ந்தமருதில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற இரு மீனவர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி ஜனாஸாவாக கரைதிரும்பிய சோகம் இன்று இரவு சாய்ந்தமருதில் பதிவானது. கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்கும் தொழிலை செய்துவந்த இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மரணித்ததாக இவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர் தெரிவித்தார். சாய்ந்தமருதை சேர்ந்த அன்ஸார் என்றழைக்கப்படும் இப்ராஹிம் இக்பால் (வயது-42), எம்.எஸ். அர்சாத் (வயது-35) ஆகியோரே மின்னலுக்கு இலக்காகி மரணித்துள்ளதுடன் இவர்களின் ஜனாஸாக்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த இப்ராஹிம் மன்சூர் (வயது- 43) மரணித்த (இப்ராஹிம் இக்பாலின் சகோதரர்) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சாய்ந்தமருதில் சோகம் நிலவிவருகிறது.

TAMIL Eelam news 714

 காலையில் வெறும் வயிற்றில் பூண்டை ஏன் சாப்பிடவேண்டும் தெரியுமா?   சமையலுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மட்டுமே பூண்டை நாம் பார்க்க கூடாது. பண்டைய மற்றும் நவீன வரலாறு மூலம் பூண்டு ஒரு முக்கிய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சளி, இருமல், உயர் ரத்த அழுத்தம், கீல்வாதம், பல் வலி, மலச்சிக்கல் மற்றும் தொற்று போன்ற பிரச்சனைகள் ஆகியவற்றிற்கு நிவாரணியாக பூண்டு பயன்படுகிறது. சுகாதார நலன்களுக்காக பூண்டை உட்கொள்ளலாம். இதற்காக தினமும் வெறும் வயிற்றில் பூண்டை உட்கொள்ளலாம். இப்படி உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.​ பூண்டை எப்படி சாப்பிடுவது? இரண்டு பல் பூண்டுகளை எடுத்து அவற்றின் தோலை உரித்து அவற்றை நசுக்கவும். பின்பு அவற்றை காலை வெறும் வயிற்றில் உண்ணவும். அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்​பூண்டு குறித்த ஆரோக்கிய நன்மைகள் பூண்டு உட்கொள்வது துர்நாற்றம் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படுவதற்கு வழி வகுக்கும். ஆனால் அதோடு உங்கள் உடல் பாதுகாப்பு முறையை அதிகரிக்க உதவுகிறது. இந்த பூண்டு பொதுவாக கலோரிகள் குறைவாகவும் வைட்டமின் சி, வைட்டமின் பி 6 மற்றும் மாங்கனீசு ஆகியவை நிற

TAMIL Eelam news 713

 வெளியில் தெரியாத வேர் கேணல் மனோகரன் அண்ணா (மனோ மாஸ்டர்) அவர்களின் 12ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். கதிரவேல் சந்திரகாந்தன்-திருகோணமலை- கேணல் மனோமாஸ்டர் 1983 இல் தமிழீழ விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டவர்.இந்திய மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சிபெற்ற அவர் அங்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறைச் செயலகத்தில் பணியாற்றினார்.இந்திய படையினரின் ஆக்கிரமிப்பு நாட்களில் மணலாற்றில் பயிற்றுவிப்பு செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.1989 இல் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியங்களில் படைத்துறை பயிற்சி நடவடிக்கைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.   போராளிகளை சிறந்த போரிடும் ஆற்றல் கொண்ட வீரர்களாக வளர்த்தெடுப்பதில் மட்டுமன்றி அவர்களை அறிவியல் ரீதியிலும் வளர்க்க வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டார்.போராளிகள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிக்கவர்களாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த இறுக்கமான கொள்கையுடையாவராக இருந்தார்.மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பெறப்பட்ட பல்வேறு போரியல் வெற்றிகளுக்கு மட்டுமன்றி தமிழீழப் பரப்பெங்கும் களமாடிய ஜெயந்தன் படையணியின் வெற்றிகளுக்குப் பி

TAMIL Eelam news 713

 இந்தியாவிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்” – அமெரிக்கா அறிவுரை சற்றுமுன் வழங்கியது ! கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் அமெரிக்கர்கள் விரைவில் இந்தியாவை விட்டு வெளியேற அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது.   அமெரிக்கா தூதரகத்தை சேர்ந்த சுமார் 100 பேருக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்த அறிவுரையை வழங்கியுள்ளது. கொரோனா பேரலையாக பரவி வருவதால் அதற்கேற்ற மருத்துவ வசதிகள் இந்தியாவில் இல்லை. எனவே அமெரிக்கர்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என அமெரிக்கா அரசு கூறியுள்ளது. பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஹாங்காங் ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டவர்கள் இ்ந்தியா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள தங்கள் மக்கள் கூடிய விரைவில் தாயகம் திரும்ப வேண்டும் என்றும் அவை அறிவுறுத்தியுள்ளன

TAMIL Eelam news 712

 யப்பா சாமி, அது நா இல்ல, சினிமா வாழ்க்கைக்கே வேட்டு வச்சிடுவீங்க போல.. புலம்பும் ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்(aishwarya rajesh) சமீபத்தில் கிளம்பிய வதந்தியால் தன்னுடைய கேரியர் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் போகிற பக்கமெல்லாம் அது நானில்லை நானில்லை என்று கூப்பாடு போட்டு கத்திக் கொண்டிருக்கிறாராம்.   தமிழில் காக்கா முட்டை படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதன் பிறகு தற்போது கவனிக்கப்படும் நாயகியாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். அனுஷ்கா மற்றும் நயன்தாரா போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களிலும் முதல் சாய்ஸாக உள்ளார். நயன்தாரா கால்சீட் இல்லை என்றால் நேரடியாக அந்த கூட்டம் அப்படியே ஐஸ்வர்யா ராஜேஷ் பக்கம் வந்து விடுகிறது. இப்படி கேரியர் நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த படம் ஹிட்டானதில் ஐஸ்

TAMIL Eelam news 711

 மே18 2009 “நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது இத்தனை பேரின் உழைப்பும் மிககுறுகிய நேரத்தில் எனக்கு கிடைத்தபடியால் தான் நான் இன்று உயிரோடு இருக்கின்றேன். என் உயிரை காப்பாற்ற துடித்தவர்கள் அனைவரும் ஏற்கனவே போர்க்காலங்களில் வலிகளைச் சுமந்தவர்களே! ஒரு பத்திரிகையாளனான என் உயிரை மீட்டதற்காக என்ன நன்றிகடன் செய்யப்போறனோ தெரியவில்லை. ………….. முந்தைய தொடர்ச்சி….. “நான் கீழே விழுந்தவுடன் நெஞ்சில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறிக்கொண்டு இருந்தது. கடற்கரை மணல் எடுத்து நெஞ்சில அடைத்தேன். அதன் பிறகுதான் அப்படியே மூக்காலயும் வாயாலயும் இரத்தம் வந்தபடியே மயங்கிவிட்டேன். …………… சிறிது நேரத்தில் “சுரேன் முடிஞ்சா ஓடிவா ஆமி உங்கால தான் அடிக்கிறான்” என்று மோகன் அண்ணையின் குரல் கேட்கிறது. அரைமயக்கம் ஒன்றுமே தெரியல்ல. குரல் வந்த திசையை நோக்கி ஓடினேன்.(மோகன் அண்ணை சொல்லித்தான் தெரியும்)…… ………… அரைமயக்கம், சத்தங்கள் கேட்கிறது. நான் சாகப்போறன் போல இருந்தது. “சுரேன் கொஸ்பிட்லுக்கு போவம்” என்று மோகன் அண்ணை சொல்லிக்கொண்டுஇருக்கிறார். நான் “கறுப்பு கொம்பூட்டர், கறுப்பு கொ

TAMIL Eelam news 711

 பொறுப்பை மஹிந்தவிடம் கையளியுங்கள் - கோட்டாபயவுக்கு ஆலோசனை   இலங்கையின் வீழ்ச்சிடைந்துள்ள அரச இயந்திரத்தையும் நாட்டையும் கட்டியெழுப்பும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அபயராமை விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் ஆலோசனை வழங்கியுள்ளார். அபயராமை விகாராயில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், பிரதமரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பதால் கோட்டாபய ராஜபக்சவிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அரச சேவை இன்று வீழ்ச்சியடைந்துள்ளது. அரச இயந்திரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு ஜனாதிபதியிடம் கேட்கின்றேன். இது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்கு சிறந்த ஒருவரான பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்கின்றேன். அண்ணனும் தம்பியும் இணைந்து செயற்பட முடியும். அரச இயந்திரம் செயலிழந்துள்ள விடயம் குறித்து அவருடன் இணைந்து ஆராய்ந்து பாருங்கள். அமைச்சர்கள் தொடர்பில் நான் பேசவரவில்லை.

TAMIL Eelam news 710

 குடும்பத்தகராறில் தாயொருவரின் விபரீத முடிவு; பரிதாபமாக பலியான குழந்தைகள்   தமிழகத்தில் இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பாக, பல்லடம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் பிரபு (35). கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (28). இந்தத் தம்பதியருக்கு பிருந்தா (7) மற்றும் பிரசந்தா (5) ஆகிய இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதற்கிடையில் தம்பதியரிடையே கருத்துவேறுபாடு எழுந்ததால், இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். தமிழ்ச்செல்வி தனது அண்ணன் மற்றும் தாயுடன் திருப்பூர் மாவட்டம், பல்லடம் குப்புசாமி நாயுடுபுரத்தில் கடந்த 9 மாதங்களாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி குடும்பத்தினர், மீண்டும் பிரபுவுடன் சேர்ந்து வாழப் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் தமிழ்ச்செல்விக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்த பிரபுவை குப்புசாமி நாயுடுபுரத்துக்கு தமிழ்ச்செல்வி குடும்பத்தினர் அழைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், இதில் விருப்பம் இல்லாத தமிழ்ச்செல்வி, த

TAMIL Eelam news 709

 தொடர்ந்து நடக்கும் பேர் அழிவுகள் பின்னால் இருப்பவர்கள் யார் தேடும் தமிழர்கள். முல்லைத்தீவில் பாரிய தீ விபத்து சம்பவம்: 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம்   முல்லைத்தீவு முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் இடம்பெற்ற தீ பரவலில் மூன்று கடைகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முத்தையன்கட்டு இடதுகரை பகுதியில் சற்று முன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் முற்றாக எரிந்து சேதம் அடைந்துள்ளன. இதையடுத்து குறித்த தீ பரவல் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news 708

 இந்தியா நரகமா? ஆஸ்திரேலிய ஊடகத்தை மன்னிப்புக்கோருமாறு வலியுறுத்தல்! கொடூரமான கோவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான பயணங்களை இடைநிறுத்துவது குறித்து The West Australian ஊடகம் செய்தி வெளியிடுகையில், இந்தியாவை 'நரகம்' எனத் தலைப்பிட்டமைக்கு மன்னிப்புக்கோரவேண்டும் என்று Indian Society of Western Australia குறிப்பிட்ட ஊடகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட சுமார் 80 அமைப்புக்களைச்சேர்ந்த முப்பதினாயிரம் உறுப்பினர்களுக்கு தாய் சங்கமாக விளங்கும், Indian Society of Western Australia அமைப்பு இந்த கடிதத்தினை West Australian ஊடகத்துக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவில் தற்போது இடம்பெற்றிருப்பது பாரிய மனிதப்பேரழிவு. இதனைப்புரிந்துகொள்ளாமல் இந்தியாவையும் இந்தியர்களையும் புண்படுத்தும்வகையில் செய்தி வெளியிடுவது, ஊடக ரீதியாக பொறுப்பற்றதனம் மாத்திரமல்லாமல், குறிப்பிட்ட சமூகத்தின் உணர்வுகளை புண்படுத்துவதாகும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 707

 நான்கு கோடி டொலர் செலவில் சிட்னியில் உருவாகும் இந்து ஆலயம்! ஆஸ்திரேலியாவின் மற்றுமொரு மிகப்பெரிய இந்து ஆலயம் சிட்னியில் சுமார் நான்கு கோடி டொலர்கள் செலவில் நிர்மாணிப்பதற்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. Bochasanwasi Akshar Purushottam Sanstha (BAPS)-ஆல் சிட்னி Kemps Creek, Adlington வீதியில் அமைக்கப்படும் இந்த ஆலயம், முழுமையாக நிர்மாணித்து நிறைவுபெறுவதற்கு ஒன்பது வருடங்களாகலாம் என்றும் முதல்கட்ட வேலைகள் 2023 இல் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை வடிவமைப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள DDC Architecture and Interior Design நிறுவனம், ஆலய நிர்மாணத்துக்கான வடிவத்தை இந்தியாவுக்கு சென்று நுட்பமாக ஆராய்ந்துவந்ததாகவும், இதன்பிரகாரம் ஆலய வரைபடத்தை வடிவமைப்பதற்கு மூன்று வருடங்கள் எடுத்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 25 மீற்றர் உயரத்தில் அமையவுள்ள இந்த ஆலயத்துடன், இரண்டு மாடிகள் கொண்ட இரண்டு சமூக மண்டபங்களும் கட்டப்படவுள்ளன என்றும் அவற்றுடன் வாகன தரிப்பிடம் மற்றும் பூங்காவும் ஆலயத்துடன் இணைந்துகொள்ளும் என்றும் தெரிக்கப்பட்டுள்ளது. சமூ

TAMIL Eelam news 706

 கடந்த 24 மணிநேரத்தில் 3 ஆயிரம் பேர் பலி.. இந்தியாவை ஆட்டிப்படைக்கும்    உலகமெங்கும் கொரோனா வைரஸ் ஆட்டிபடைக்கும் நேரத்தில், இந்தியாவிலும் அதன் வீரியம் அதிமாகி கொண்டிருக்கிறது. அன்றாடம், 3 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கி வந்தது. நேற்று முன்தினம் கொரோனா பரவல் சற்றே குறைந்து 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 ஆக பதிவாகியுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 960 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 2,771 பேர் பலியாகி இருந்தனர். நேற்று பலி மேலும் எகிறியது. 24 மணி நேரத்தில் 3,293 பேர் பலியாகி உள்ளனர். ஒரு நிமிடத்துக்கு 2 பேருக்கு மேல் இறந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கொரோனா உயிரிழப்பில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளைத் தொடர்ந்து 4-வது இடத்தில் இந்தியா இருக்கிறது.   

TAMIL Eelam news 705

 கொரோனாவுக்கு போராடும் இந்தியாவிற்கு 74 கோடி நிதியுதவி அளித்த கனடா பிரதமர்- குவியும் வாழ்த்துக்கள்   கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல நாடுகள் உதவிக்கரம் செய்து வருகிறது. அந்த வகையில், கனடா இந்தியாவுக்கு 10 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, “கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 10 மில்லியன் டாலர்களை வழங்குகிறோம். இது நிச்சயம் ஆம்புலன்ஸ் சேவைக்கும், பிற பாதுகாப்பு உபகரணங்களுக்கும் உதவும்” என கூறியுள்ளார். மேலும், எங்களால் முடிந்த எந்த வகையிலும் இந்தியாவுக்கு ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.    

TAMIL Eelam news 704

 விஜய், அமலாபால் வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய தனுஷ்.. ரகசிய வெளிநாட்டு பயணத்தால் வந்த வினை! இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் ஆசை ஆசையை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த ஒரு வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட சம்பவம் தற்போது வரை கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இயக்குநர் விஜய் தயாரிப்பாளர் தேனப்பன் என்பவரின் மகன். விஜய் மற்றும் அமலாபால் இடையே விவாகரத்து நடைபெறுவதற்கு காரணம் தனுஷ் தான் என முதலில் சொன்னதே தேனப்பன் தான்.   மொட்டையாக தனுஷ் தான் காரணம் என்று சொன்னாரே தவிர இருவருக்கும் எதனால் பிரச்சினை வந்தது என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. இயக்குனர் விஜய் முதலில் திருமணத்துக்கு பிறகு நடிக்கக்கூடாது என்று சம்மதம் வாங்கிக் கொண்டுதான் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகும் சினிமா வட்டாரங்களில் உள்ள நட்பினால் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தொடர்ந்து விஜய்யிடம் கூறிவந்துள்ளார் அமலாபால். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில்தான் அமலாபாலுக்கு ஆறுதல் ச

TAMIL Eelam news 703

 முகக்கவசம் வாங்க பணமில்லை… பறவை கூட்டினை மாஸ்க்காக அணிந்து வந்த முதியவர்! இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு மாநில அரசுகளும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. அதிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசங்களை காட்டாயம் அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளன. விதிகளை மீறினால் கடுமையான அபராதங்களையும் மாநில அரசுகள் விதித்து வருகின்றன.   அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் பொது வெளியில் வருபவர்கள் முகக்கவசங்களை காட்டாயம் பயன்படுத்துமாறு இந்த மாத தொடக்கத்தில் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஆடு மேய்ப்பவர் ஒருவர், தன்னிடம் முகக்கவசம் வாங்குவதற்கு காசு இல்லை என்பதாலும், முகக்கவசம் அணியாமல் போனால் விதிக்கப்படும் அபராத தொகையை கட்டாயம் செலுத்த முடியாது என்பதாலும் அதற்கு ஒரு புதுமையான தீர்வை கண்டறிந்தார். தெலுங்கானாவின் மக்புப்நகர் மாவட்டத்தில் உள்ள சின்னமுனு

TAMIL Eelam news 702

 குடும்ப தகறாறு- மோபைல் போனில் படம் எடுத்த சிறுவன் கன்னத்தில் அடித்த நபரை அந்தச் சிறுவனே கொலை செய்தான் ! மட்டக்களப்பு நகர் பகுதியில் குடும்ப உறவினரின் குடும்ப பிரச்சினையை தீர்ப்பதற்கு சென்றவரை, 15 வயதுச் சிறுவன் அடித்தே கொலை செய்த விடையம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குடும்ப பிரச்சனையை தீர்க்கச் சென்ற நபர் முன் நாள் பொலிஸ் அதிகாரி என்பது அதனை மிஞ்சிய அதிர்ச்சி ஆகும்.   மட்டக்களப்பு இரண்டாம் குறுக்கு வீதியிலுள்ள தனது சகோதரியின் மகளின் குடும்ப பிரச்சனையை தீர்க்க சென்றுள்ளார் 56 வயதாகும் மனோகர ராஜா. அவர் குடும்பப் பிரச்சனையை தீர்க்க, கணவன் மனைவியோடு பேசிக் கொண்டு இருக்கும் வேளையில். அதனை வீடியோ எடுத்துள்ளான் குறித்த 15 வயதுச் சிறுவன். இதனை தற்செயலாக பார்த்த மனோகர ராஜா, அவன் கன்னத்தில் ஓங்கி அறை ஒன்றை விட்டு. கையில் உள்ள மோபைல் போனைப் பறித்துள்ளார். இதனை அடுத்து ஆவேசமடைந்த சிறுவன், சற்றும் எதிர்பாரா வண்ணம் அவரை சரமாரியாக தாக்கியுள்ளான். இது போக அச் சிறுவனின் அப்பா(அந்த கணவர்) இணைந்து மனோகர ராஜாவை தாக்கிய நிலையில். ஊர் மக்கள் கூடி விலக்கு பிடித்துள்ளார்கள். இவர்கள் இருவரையும் தள்

TAMIL Eelam news 701

 குவியும் சடலங்கள்! இந்தியத் தலைநகரில் விறகுத் தட்டுப்பாடு   இந்தியத் தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றால் மரணமடையும் மக்களது சடலங்கள் இடைவிடாது தகனம் செய்யப்பட்டு வருதால் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விறகுகளின் விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு டெல்லிநகர முதல்வர் ஜெய்பிரகாஷ் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்துள்ளார். இதனையடுத்து டெல்லிக்கு அருகில் உள்ள வனங்களில் இருந்து அவசரகால ரீதியில் விறகுகள் வெட்டப்பட்டுவருவதாக அறிவிக்கபட்டுள்ளது. டெல்லியில் உடல்களை எரிக்க இடமில்லாததால் திறந்த வெளிகளில் தற்காலிக தகன மேடைகள் அமைக்கப்பட்டு உடலங்கள் எரியூட்டப்பட்டுவரும் நிலையில் 24 மணிநேரமும் உடலங்கள் குவிவது வேதனையும் அவலமும் நிறைந்தகாட்சிகளாக பதிவாகியுள்ளன.

TAMIL Eelam news 700

 இலங்கை விரையும் ரஷ்ய ஹெலிகொப்டர்கள் ? கசிந்தது தகவல்   ரஷ்யாவின் உற்பத்திகளில் ஒன்றான எம்.ஐ-171 ரக 04 ஹெலிகொப்டர்களை அரசாங்கம் விரைந்து கொள்வனவு செய்ய தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையணிக்கு வாடகைக்கு விடுவதற்காகவே இலங்கை அரசாங்கம் இந்த ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்னிலங்கை ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த செய்திக் குறிப்பில், இந்த ரக ஹெலிகொப்டரின் விலை ஏறக்குறைய 18 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ரோஸ்பரோன் எக்ஸ்போர்ட் என்ற (Rosoboron export) ரஷ்ய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை செய்து ஹெலிகொப்டர் கொள்வனவை செய்ய பாதுகாப்பு அமைச்சின் கவனம் திரும்பியிருக்கின்றது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் குறித்த ரஷ்ய நிறுவனத்தின் உள்நாட்டு பிரதிநிதியாக எம்.டி.வி நிறுவனத்தின் சொந்தக்காரரான கிலி மஹராஜாவின் மஹாராஜா நிறுவனமே இயங்கிவந்தது. 2400 கோடி அமெரிக்க டொலர்களை செலுத்தி மேற்படி ரஷ்ய நிறுவனத்தின் ஊடாக பயன்படுத்தப்பட்ட கப்பலொன்றை கொள்வனவு செய்யவும் இரகசிய கொ

TAMIL Eelam news 699

 இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற பெண்ணிண் மரணத்தின் சோக கதை!   இலங்கைக்குச் செல்லும்படி கூறப்பட்டபோது கொலை செய்யப்பட்ட ஒரு இலங்கை பணிப்பெண், வறுமை காரணமாக வெளிநாடு சென்றிருந்தாலும் உயிருக்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு உதவியற்ற பெண் குறித்து மகாவோ பகுதியில் இருந்து ஒரு அறிக்கை வந்தது. ஒரு குழந்தையின் தாயான ஸ்வர்ணாவதி, 39, மகாவா மொடலகேதரா கிராமத்தில் வசித்து வருகிறார். அவர் தனது குடும்பத்தை தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் 2018 ம் ஆண்டில் குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்குச் செல்கிறார். இம்முறை க.பொ.த சாதாரண நிலைத் தேர்வுக்கு அமர்ந்திருக்கும் தனது மகளைப் பார்க்கவும், சிங்கள புத்தாண்டுக்கு விரைவில் தனது நாடான இலங்கை தீவுக்குத் திரும்பவும் ஆவலுடன் காத்திருக்கிறாள். ஆனால் ஸ்வர்ணாவதி இலங்கை வர வீட்டு உரிமையாளர் அனுமதிக்கவில்லை, ஏனெனில் அவர் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர் மனைவி கர்ப்பமாக இருந்தார். இறுதியில் அது ஒரு வாய்த்தர்க்கத்தில் தொடங்கி மோதலாக வளர்ந்தது. இம்மாதம் 13 ஆம் தேதி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர் ஸ்வர்ணாவதியின் கணவரை அழைத்து ஸ்வர்ணாவதி இறந்துவ

TAMIL Eelam news 698

 திருகோணமலையில் தமிழ் பெண் கொலை: மக்கள் போராட்டம்   திருகோணமலை – கிண்ணியா, ஆலங்கேணி பகுதியில் இளம் குடும்பப் பெண் எரியூட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்து இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.  இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். கடந்த 9 ஆம் திகதி ஆலங்கேணி பகுதியில் உள்ள வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த பெண்ணை இனந்தெரியாதவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, தீக்காயமடைந்த பெண் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 25 ஆம் திகதி அவர் உயிரிழந்துள்ளார்.  சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியே கிராம மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸாரிடம் வினவியபோது, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் கூறினர். குறித்த பெ

TAMIL Eelam news 697

 ஆண்களே ஜாக்கிரதை! இந்த அறிகுறிகள் இருந்தால் சர்க்கரை நோய் சீக்கிரம் வந்துவிடுமாம்   பொதுவாக உயிரை குடிக்கும் கொடிய நோய்களுள் நீரிழிவு நோயும் ஒன்றாகும். இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம். நீரிழிவு நோயை ஏற்படுத்தும் காரணிகளில் மிக முக்கியமானது, குடும்பப் பாரம்பரியம். பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்தால், வாரிசுகளுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு கருதப்படுகின்றது. அதிலும் இதில் அதிகம் பாதிப்படைவது பெண்கள் தான் என்று கூறப்படுகின்றது. ஆனால்பல ஆய்வுகள் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களில் நீரிழிவு நோய் அதிகம் என்று கூறுகின்றன. டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தந்தைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தாயுடன் ஒப்பிடும்போது குழந்தைக்கு இந்த நிலையை பரப்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மற்றொரு ஆய்வு காட்டுகிறது. இருப்பினும் ஆண்களுக்கு ஏற்படும் நீரிழிவு ஒரு சில அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம்.   சிறுநீரகங்கள் வடிகட்ட முடியாமல் போ

TAMIL Eelam news 696

 பெருங்காயத்தை சமையலில் சேர்ப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னென்ன தெரியுமா?   பெருங்காயத்தில் எண்ணற்ற பயன்கள் அடங்கியுள்ளது. தினசரி சமையலில் பெருங்காயத்தைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தை பெறலாம். மேலும், நரம்புக் சம்பந்தமான பிரச்னைகளுக்கு பெருங்காயம் நல்ல மருந்தாக விளங்குகிறது. சமையலில் பெருங்காயத்தை அதிகம் சேர்த்துக் கொண்டால் அது நரம்புகளையும், மூளையையும் இயல்பாக்கி பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும். பல் வலி அதிகம் உள்ளவர்கள், பெருங்காயப் பொடியை வாணலியில் போட்டு வறுத்து, வலி உள்ள சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால், பல்வலி நொடியில் பறந்துவிடும். உடலில் வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தும், உடலில் உள்ள நச்சுக்களை, அழிக்கும் ஆற்றல் மிகுந்தது. மலச்சிக்கல் பிரச்சனை தீர்க்கும். அளவுக்கு அதிகமாக உபயோகித்தால், உடலில் பித்தம் அதிகமாகும். வாயு பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான தலைவலி மற்றும் நோய்களுக்கும், இருமலுக்கும் சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. தினமும் பெருங்காயத்தை உணவோடு சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள்

TAMIL Eelam news 695

 ஹீரோவுக்கு அம்மா மாதிரி இருக்கீங்க, எப்படி வாய்ப்பு கொடுக்க.. 39 வயது நடிகையை  தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பட்டையை கிளப்பிய நடிகை ஒருவர் சமீபகாலமாக ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் அவலம் தான் பார்ப்பவர்களை எல்லாம் கண் கலங்க வைக்கிறது.   உயர்ந்த நடிகையாக இருந்தாலும் கிளாமரில் குறை வைக்காத அந்த நடிகை தற்சமயம் வயது முதிர்வின் காரணமாக இயக்குனர்கள் மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டார்கள் என தன்னுடைய வட்டாரங்களில் கூறி புலம்பி வருகிறாராம். ஒரு காலத்தில் இந்த நடிகையை பார்த்து மோகம் கொள்ளாத நடிகர்களே கிடையாது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இந்த நடிகையை பார்த்து ஜொள்ளு விடாத தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இருக்க வாய்ப்பே இல்லை என அடித்துக் கூறுகிறது கோலிவுட் வட்டாரம். அப்படி மப்பும் மந்தாரமுமாக இருந்த நடிகை ஒரே ஒரு படத்திற்காக உடல் எடையை கூட்டினார். அதற்கு காரணம் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்த படம் வெற்றியைப் பெற்றதால் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு ரிஸ்க் எடுக்க முடிவு செய்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டார். தற்போது உடல் எடையை குறைக்க முடியாமல் தடுமா

TAMIL Eelam news 694

 தாய்லாந்தில் முக கவசம் அணியாத பிரதமருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 4 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. கொரோனா வைரசின் புதிய அலையை கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் பாங்காக்கில் மக்கள் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முக கவசம் அணியாதவர்களுக்கு 20 ஆயிரம் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46 ஆயிரத்து 610) வரை அபராதம் விதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தலைநகர் பாங்காக்கில் தடுப்பூசி கொள்முதல் குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் பிரய

TAMIL Eelam news 693

 இலங்கையில் ஒரே நாளில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!     இலங்கையில் மேலும் 422 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார். இதற்கமைய இன்றைய தினம் இதுவரையில் 1096 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்முறையாக ஒரே நாளில் 1000ம் தொற்றாளர்களை கடந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதனடிப்படையில் இலங்கையில் 103,472 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 276 பேர் இன்று (27) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94,856 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 647 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள் இலங்கையில் மேலும் 422 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ள

TAMIL Eelam news 692

 யாழில் புதுமனைப் புகுவிழாவில் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டு! மூவருக்கு நேர்ந்த நிலை        யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கெற்பெலி கிராமத்தில் நடைபெற்ற புதுமனைப் புகுவிழாவில் வழங்கப்பட்ட அன்பளிப்புப் பணத்தால் உறவினர்களுக்கு இடையில் வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்று மூவர் காயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கெற்பெலி கிராமத்தில் நேற்று முன்தினம் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றின் புதுமனைப் புகுவிழா நடைபெற்றிருக்கின்றது. மறு நாள் வீட்டின் உரிமையாளர் அந்தக் கிராமத்தின் விற்பனை நிலையம் ஒன்றுக்குச் சென்றிருக்கின்றார். அங்கு அவர் வழங்கிய பணம் கள்ளப் பணம் என்று விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில் குறித்த பணத்தினை முதல் நாள் நடைபெற்ற புதுமனை புகுவிழாவிற்கு வந்திருந்த தன்னுடைய சகோதரியின் மகனே குறித்த பணத்தினை தனக்கு வழங்கியதாக புது வீட்டின் உரிமையாளர் தெரிவித்திருக்கின்றார். இதனை அடுத்து இரண்டு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலையில் கடந்த இரவு புதுமனைப் புகுவிழா நடைபெற்ற வீட்டிற்குச் சென்ற பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர

TAMIL Eelam news 691

 கொரோனா: இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா வரும் விமானங்களுக்கு இடைக்காலத்தடை! இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்ற பின்னணியில் அங்கிருந்து விமானங்கள் ஆஸ்திரேலியா வருவது தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக  பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார். இது மே 15ம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். இன்றையதினம் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு குழு கூட்டத்தில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளது. அதேநேரம் இந்தியாவில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு oxygen supplies, ventilators மற்றும் personal protective equipment உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை ஆஸ்திரேலியா அனுப்பிவைக்கவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் தெரிவித்தார். மேலும் இந்தியாவில் சிக்கியுள்ள சுமார் எட்டாயிரம் வரையான ஆஸ்திரேலியர்களுக்கு நெருக்கடி நிலை தொடர்பிலான விசேட செயற்றிட்டம் ஊடாக உதவி வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

TAMIL Eelam news 690

 விக்டோரியாவில் தமிழ் அகதி ஒருவர் மரணம்! நிர்க்கதியான நிலையில் குடும்பம்!! விக்டோரியாவின் Geelong பகுதியைச் சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் அண்மையில் கார் விபத்தொன்றில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைப் பின்னணி கொண்ட 38 வயதான நிக்சன் என்பவரே கடந்த 20ம் திகதி மரணமடைந்துள்ளதாக விக்டோரிய தமிழ் சங்கத்தைச் சேர்ந்த திரு.பரமநாதன் SBS தமிழிடம் தெரிவித்தார். Geelong-இல் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த இவருக்கு இரண்டு, ஐந்து, எட்டு மற்றும் பதின்மூன்று வயதுகளில் நான்கு பெண் பிள்ளைகள் உள்ளனர். முழுக்குடும்பமும் நிக்சனின் வருமானத்தில் தங்கி வாழ்ந்ததாகவும் திடீரென இவர் மரணமடைந்துள்ளதால் குடும்பத்தினர் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் திரு.பரமநாதன் குறிப்பிட்டார். படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய நிக்சன் குடும்பத்தினரின் அகதி தஞ்ச விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களுக்கு Centrelink கொடுப்பனவும் கிடைக்காது என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நிக்சனின் இறுதி நிகழ்வு எதிர்வரும் மே 8ம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ளதாகவும், இறுதிநிகழ்விற்குக் கூட பணமில்லாத நிலையிலேயே அவரத

TAMIL Eelam news 689

 மாடர்ன் லுக்கில் ரசிகர்களை மயக்கிய நடிகை சினோகா- வைரலாகும் ஒற்றை புகைப்படம்!   தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினோகா. இவர், தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்தார். இருப்பினும் திருமணத்திற்குப் பிறகு சினேகா திரைப்படங்களில் பெரியதாக நடிக்கவில்லை. தற்போது சில படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இதனிடையே, தற்போது மாடர்ன் உடையில் செம மாஸ் ஆன புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.