முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 634

 நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வறிக்கை 2021 – சிட்னி



நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு சிட்னியில் இன்று 18-04-2021 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இன்று சிட்னியில் நடைபெற்றுள்ளது. பெண்டில்கில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வை, தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் அவர்களின் சகோதரன் யோகநாதன் அவர்கள் மாலை 5.15 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி ஆரம்பித்துவைத்தார்.



தொடர்ந்து, அவுஸ்திரேலிய தேசியக்கொடியை நவேந்திரா காளிராசா ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை அருணகிரிநாதன் கிருஷ்ணபிள்ளை ஏற்றிவைத்தார். அதனைத்தொடர்ந்து நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.



அனைவரும் வரிசையாக சென்று நாட்டுப்பற்றாளர்களினதும் மாவீரர்களினதும் திருவுருவப்படங்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அன்னை பூபதியின் தியாக வரலாற்றை பதிவுசெய்யும் உரையை தமிழிலும் ஆங்கிலத்திலும் பிறைக்குமரன் பேரின்பராசாவும் கவிவேந்தன் பாலகுமாரும் வழங்கினர்.



அடுத்ததாக, தாயகத்தாய் இறுவட்டிலிருந்து தாயவளே உன்னை போற்றுகின்றோம் என்ற பாடலுக்கு சகோதரிகள் துளசி செல்வராசா, நிதுர்சி செல்வராசா, மோகிதா செல்வராசா மற்றும் திவாசினி சிவராசா ஆகியோர் வழங்கினர். இந்நடனத்திற்கான நெறியாள்கையை குறுகிய காலத்தில் ஆசிரியர் சிவசோபா தர்சன் அவர்கள் செய்திருந்தார்.



அடுத்து, மறைந்த மன்னார் மறைமாவட்ட வணக்கத்துக்குரிய ஆண்டகை இராயப்பு யோசப் அவர்களின் நினைவான நினைவுப்பகிர்வை சோனா பிறின்ஸ் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில் ஒரு ஆண்டகையாக இருந்தவாறு பல்வேறு நெருக்குதல்களுக்கும் மத்தியில் நேர்மையான முறையில் செயற்பட்டு தமிழ்மக்களின் நீதிக்காக எப்போதும் குரல்கொடுத்துக்கொண்டிருந்தார் என்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை உணர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக கடுமையாக உழைத்துநின்றார் எனவும் நினைவுகூர்ந்தார்.



தொடர்ந்து, நாட்டுப்பற்றாளர்கள் தொடர்பான நினைவுப்பகிர்வை சுதர்சன் அவர்கள் வழங்கினார். அவுஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவை கட்டமைத்து நெறிப்படுத்திய மாமனிதர் ஜெயகுமார், தாயகம் சென்று சர்வதேச அரசியல் கட்டமைப்புகளுக்கு உதவிபுரிந்த நாட்டுப்பற்றாளர் கிருஸ்ணமூர்த்தி, வெளிநாட்டுக்கிளைகளின் கணக்காய்வுகளை மேற்கொண்டு அர்ப்பணிப்போடு செயற்பட்ட தமிழ்த்தேசியப்பற்றாளர் பத்மநாதன் ஆகியோர்களின் நினைவுகளை பதிவு செய்தார்.



அடுத்து, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ்ஒளி தாயக உதவித்திட்டம் தொடர்பான விளக்கத்தை அருணகிரிநாதன் வழங்கினார்.



இறுதியாக தேசியக்கொடியிறக்கலோடு நினைவு நிகழ்வு நிறைவடைந்தது.



இன்றைய நிகழ்வை யாழவன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.














கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?