முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 688

 புலம்பெயர் அமைப்பை தடை செய்யும் மற்றொரு பட்டியல் உளவுத்துறையிடம் - ச.வி.கிருபாகரன்


 


 

தனிநபர்களையும் புலம்பெயர்ந்தோர் அமைப்பையும் தடை செய்யும் கோட்டாபயவின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் நன்கு அறியப்பட்டதாகும். இதற்கிடையில், மற்றொரு பட்டியல் இராணுவ உளவுத்துறை மற்றும் ஒட்டு குழு உறுப்பினர்களான டக்ளஸ், கருணா ,பிள்ளையான் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சில முன்னாள் ஒட்டு குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதனது நோக்கம் என்ன? என பிரான்ஸிலிருக்க கூடிய கட்டுரையாசிரியர் ச.வி.கிருபாகரன் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


அவர் தனது கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,


கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ ஒருமுறை கூறினார், சர்வாதிகாரம் இயல்பாகவே ஜனநாயகத்திலிருந்து உருவாகிறது. மேலும் மிகக் கடுமையான கொடுங்கோன்மை மற்றும் அடிமைத்தனம் மிகவும் தீவிரமான சுதந்திரமெனும் தன்போகிலிருந்து எழுகிறது என்று. மக்கள் கோரிக்கை, வேண்டுகோள்களை அரசியல்வாதிகள், நாடுகளின் தலைவர்கள் புறக்கணிக்கத் தொடங்குகிறார்களோ அன்று - பிரச்சினை ஆரம்பமாகி இறுதியில் ஒரு மோதலில் முடிகிறது.


இறையாண்மை ஒருமைப்பாடு பற்றி கடுமையாகப் பேசும் நாடுகளின் தலைவர்கள் வெளிநாட்டுச் சக்திகளை தங்கள் நாட்டிற்கு அழைத்து போரை வென்ற பின்னர், நாங்கள் போரை வென்றோம், நாங்கள் போரின் கதாநாயகர்களெனப் போலியாகக் கூறுவார்கள். வெளிநாட்டுச் சக்திகள் தங்கள் நாட்டில் ஏற்கனவே இருந்தது என்பதையும், அவர்களின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் பற்றிப் பேசும் அதே அரசியல்வாதிகளால் மீறப்பட்டவை என்பதையும் தெரியாத சாதாரண மக்கள், ராஜபக்சக்களை தமது நாட்டின் தேசபக்தர்களாக, விசுவாசிகளாக நம்புகிறார்கள்.




ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கையில் பௌத்த மதத்தின் பாதுகாவலராகத் தன்னை சித்தரிக்க முயல்கிறார். அவர் நகரத்தில் உள்ள குப்பைகளைச் சுத்தம் செய்வதற்கு முன்பு, இலங்கையில் உள்ள பௌத்த மதகுருக்களின் நடத்தை குறித்து ஆராய வேண்டும். அவர்கள் மோசமான கெட்டவார்த்தைகள் பேசுவதையும், மது அருந்துவதையும், பெண்களுடன் நெருங்கி தமது காமா களியாட்டங்களில் ஈடுபடுவதையும், வாகனம் ஓட்டுவதையும் சமூக ஊடகங்களில் நாம் காண்கிறோம். நன்கு அறியப்பட்ட சமூக ஊடகங்களின் பிரகாரம் இலங்கையில் சில பௌத்த பிக்குகள் சில குழந்தைகளின் உயிரியல் தந்தையாகவும் காணப்படுகின்றனர். பௌத்த மதத்தைப் பின்பற்றும் மேற்கு நாட்டவர்கள் இலங்கையில் என்ன வகையான பௌத்த மதம் பின்பற்றப்படுகிறது எனக் குழப்பமடைந்து ஆச்சரியப்படுகிறார்கள்.


கோட்டாபய ஜனாதிபதியானது முதல், வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் தாயக பூமியை இல்லாது செய்வதில் உறுதியாக இருக்கிறார். இத்தீவுக்குப் பௌத்த மதமும் சிங்கள மொழியும் வருவதற்கு முன்பே தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தங்கள் தாயகத்தில் வாழ்த்துள்ளனர்.


நன்கு ஆவணப்படுத்தப்பட்ட பல உண்மைகளை ராஜபக்சக்களைப் போன்ற தீவிரவாத சிங்கள பௌத்தர்கள் ஏற்க மறுக்கின்றனர். இந்த தீவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வசிக்கும் மக்கள் யார் என்பதை உலகம் புரிந்து கொள்வார்கள். இத்தீவுக்கு இளவரசர் விஜயா வருவதற்கு முன்பு நடைமுறையிலிருந்துள்ள மொழி, மதம் எதுவென்பதை உலகம் நன்கு அறியும். இத்தீவில் நான்கு ஈஸ்வரங்கள் பற்றி தீவிரவாத சிங்கள பௌத்தர்களால் என்ன கூற முடியும்? வரலாற்றாசிரியர் உண்மையான தொல்பொருள் ஆய்வாளர், மானுடவியலாளர் மற்றும் பிறருக்கு இவை பற்றிய மேலதிக பகுப்பாய்விற்கு விட்டு விடுகிறேன். அவர்கள் இறுதியில் உலகிற்கு உண்மையைச் சொல்வார்கள்.


தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்க கோட்டாபய ஓர் ஜனாதிபதி பணிக்குழுவை நியமித்தார். குறிப்பாகத் தீவின் வடக்கு கிழக்கில் பௌத்த மதம் இருந்துள்ளது என்பதை நிரூபித்து, சிங்கள பௌத்த மக்களின் ஆதரவைத் தனது அரசியல் எதிர்காலத்திற்காகப் பயன்படுத்துகிறார் என்பதே உண்மை.


தொல்பொருளியல் வரவிலக்கணம்


மேலதிக பகுப்பாய்விற்குச் செல்வதற்கு முன், தொல்பொருளியல் வரவிலக்கணத்தை பார்ப்போம். சுருக்கமாக, பொருள் கலாச்சாரத்தின் மீட்பு மற்றும் பகுப்பாய்வு மூலம் மனித செயல்பாடுகளின் ஆய்வு உயிரியல், புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்து கடந்த கால ஆய்வின் மூலம் பெறப்படுகிறது என்பதே பொருள். கோட்டாபய தொல்பொருளியல் வரவிலக்கணத்தை புரிந்து கொள்ளாது, தெற்கில் உள்ள மக்களைத் தவறாக வழிநடத்தியுள்ளார். தொல்லியல் என்பது பௌத்த மதத்தின் நலனுக்காக மட்டுமே செய்வது அல்ல.


தொல்பொருள் இடங்களைப் பாதுகாப்பதற்கான ஜனாதிபதி பணிக்குழு, வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயக பூமிக்குள் மட்டுமே ஆய்வில் உள்ளது. இந்த பணிக்குழுவின் வழிகாட்டுதலுடன், இளவரசர் விஜய வருகைக்கு முன்பே தீவு முழுவதும் பௌத்த மதத்தவர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என கோட்டாபய விரைவில் கூறவுள்ளார்.


கோட்டாபயவிடமும், அதே தொல்பொருள் பணிக்குழுவிடமும் எனது வேண்டுகோள் என்னவெனில் - அவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், அவர்கள் தெற்கில் ஒரு தொல்பொருள் பகுப்பாய்வை ஆரம்பிக்க வேண்டும். அவர்கள் இதைச் செய்யும் பட்சத்தில் தெற்கிற்கும் பௌத்த மதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். ராஜபக்சக்களின் ஊர்களான - பலடுவா, வீரகேதியா, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய இடங்கள் உட்பட தெற்கு, பண்டை தமிழர்களின் கடின உழைப்பு, வியர்வை, இரத்தம் ஆகியவற்றினால் கட்டியெழுப்பப்பட்டுள்ளது நிரூபணமாகும்.


கதிர்காமத்துக் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் என்பவை வலுவான சான்றுகள். ஆபத்தான விலங்குகளுடன் அடர்த்தியான காடாக இருந்தபோது, அப்பகுதிகள் முற்றிலும் தமிழர்களால் உருவாக்கப்பட்டன. கதிர்காமத்துக் கோயிலுக்கு அடுத்ததாக இருந்துள்ள ராமகிருஷ்ணா பணி மனைக்குச் சிங்கள பௌத்தர்கள் என்ன செய்தார்கள் என்பதை உலகம் அறியும். இதன் காரணமாகவே வடக்கு கிழக்கிற்கு மேலாக தெற்கில் தொல்பொருள் பகுப்பாய்வு மிக முக்கியமானது.


தடயவியல் நிபுணர்கள்


வடக்கு கிழக்கில் ஒரு தொல்பொருள் பகுப்பாய்வு செய்வதைவிட, கோட்டாபய உண்மையில் அனைவருக்கும் ஜனாதிபதியாக இருந்தால், வடக்கு கிழக்குப் பகுதிகளில் அவரது அறிவுறுத்தலின் கீழ் ஆயுதப்படைகள் என்ன செய்தன என்பதைக் கண்டறிவதற்கு சில தடயவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும். 2009ம் ஆண்டிற்குப் பின்னர் பாதுகாப்பு அமைச்சினால் வடக்கில், குறிப்பாக யாழ்ப்பாணக் குடநாட்டில் கட்டப்பட்ட ஒவ்வொரு கட்டிடங்களின் கீழ், பெரும் தொகையான மனித எலும்புக்கூடுகள் உள்ளன என்பதை மீண்டும் இங்கு கூற விரும்புகிறேன். இதை ஜனாதிபதி கோட்டாபய மறுத்தால் , அதன் உண்மையைக் கண்டறிவதற்கு சில தடயவியல் வல்லுநர்கள் அங்கு அனுமதிக்க வேண்டும். இருப்பினும், ஜனாதிபதி அதை அனுமதித்தாலும் இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் நேரம் வந்துவிட்டது. கோட்டாபய தனது ஆதரவாளர்களான சில கொலையாளிகளுக்கு எந்த சட்டத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்குகிறார் என்பது உலகிற்கு விளங்கவில்லை.


தற்போதைய அரசாங்கத்தில் அல்லது அமைச்சரவையில், உள்ள சிலர் இரட்டை நாக்கு கொண்டுள்ளவர்களாகவும், கல்வியறிவற்றவர்களாகவும் காணப்படுகிறார்கள்.


ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது அமர்வில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் - சர்வதேச சமூகத்தின் இலங்கை மீதான பார்வை. இலங்கை வெளியுறவு அமைச்சர் டினேஷ் குணவர்தன (டி.கு) மற்றும் பலர் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தனர். இருப்பினும் அவர்கள் தங்கள் மக்களிடமிருந்து உண்மையை மறைக்க அரசியல் ரீதியாக கடமைப்பட்டுள்ளனர். டி.கு ஊடகங்களுக்கு அளித்த விளக்கம் டி.கு ஓர் பொது அறிவு இல்லாத மனிதராகவும், எண்கணிதத்தில் மிகவும் மோசமானவராகவும் மற்றும் அவரது தந்தை பிலிப் குணவர்தேனாவை அவமதித்ததுள்ளதாகவும் மக்களைச் சிந்திக்க வைத்ததுள்ளது.


ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது வாக்களிப்பு குறித்து இங்கு சுருக்கமாக விளக்க கடமைப்பட்டுள்ளேன்.


தினேஷ் குணவர்தன


ஆசியா மற்றும் ஆபிரிக்காவிற்கு தலா பதிமூன்று (13) நாடுகள் உள்ளன. ஆசியர்களில் பதின்மூன்று பேரில், ஐந்து(5) நடுநிலையாக வாக்களித்தனர், மூன்று(3) தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதாவது ஐந்து(5) ஆசிய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆசிய நாடுகள் எங்களுடன் உள்ளன என்ற இலங்கையின் கூற்றுப் பொய்யென இங்கு நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஆப்பிரிக்க நாடுகளுடன், பதின்மூன்று பேரில், ஒன்பது(9) நாடுகள் நடுநிலையாக வாக்களித்தனர், இரண்டு(2) ஆதரவாகவும், இரண்டு (2) இலங்கைக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். நடுநிலையாக வாக்களித்த ஒன்பது நாடுகளில் பலர் கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக வாக்களித்தனர்.


எட்டு(8) தென் அமெரிக்க நாடுகளில், ஐந்து(5) தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, மூன்று(3) மட்டுமே இலங்கைக்கு வாக்களித்தனர். ஏழு(7) மேற்கத்திய நாடுகளில், அனைவரும் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஆறு(6) கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஐந்து(5) ஆதரவாக வாக்களித்தன, ரஷ்யா ஒன்று (1) மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தது. இதன் விளைவாக 22ஆதரவாக இருந்தது, 14 பேர் நடுநிலையாக வாக்களித்தனர், 11 பேர் மட்டுமே இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.


ஐ.நா மனித உரிமைகள் சபையின் வாக்களிப்பு எவ்வாறு நடந்தது என்பதை டி.கு மற்றும் அவரது அமைச்சும் இப்போது புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறேன். அண்டை நாடான இந்தியா நடுநிலையாக வாக்களித்தமையே டி.கு தமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதினார். அப்படியானால், அது எங்களுக்கும் பெரிய வெற்றி என்றும் கூறலாம். தற்போதைய அரசாங்கம் இந்தியாவை முட்டாளாக்கியவிதம் , இந்தியா எப்படியாக இலங்கையை ஆதரவளிப்பார்களென எதிர்பார்க்க முடியும்.


தீர்மானத்தைச் செயல்படுத்த இரண்டு மில்லியன் எட்டு ஆறாயிரம் டாலர்கள் ஐ.நா. செலவு செய்ய இருக்கும் பணத்தில், இலங்கையில் வீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என டி.கு ஊடகங்களுக்குத் தெரிவித்தார். டி.கு உண்மையிலேயே பணத்தை வீணாக்குவது பற்றி நினைத்தால், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழ் ஆர்வலர்களைப் பிளவுபடுத்தவும், படுகொலை செய்யவும் ஒட்டு குழுவிற்கும் மற்றவர்களுக்கும் பாதுகாப்பு அமைச்சு செலவு செய்யும் கோடிக்கணக்கான பணத்தையும் ,வீடுகளைக் கட்ட பயன்படுத்தலாம் என்பதை டி.கு உணர வேண்டும்.


வெளியுறவு செயலாளர் மற்றும் தூதுவர்


வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பேஜ் ஆங்கில பேட்டி ஒன்றில் இனவெறி அடிப்படையில் தீர்மானத்தின் பின்னணியிராக நின்ற நாற்பது(40) நாடுகளில் ஒன்று தவிர்ந்த மற்றைய நாடுகள் யாவும் வெள்ளை இனத்தவரின் நாடுகளெனக் கூறியுள்ளார்.


வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெள்ளை நாடுகள் மட்டுமே பின்னணியிராக நின்றபதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். அப்படியானால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை பற்றி என்ன கூறப்போகிறார்? இந்தத் தீர்மானத்திற்கு பின்னணியிராக நின்ற பெரும்பாலான நாடுகளால் விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டனர் என்பது அவருக்குத் தெரியுமா? வெள்ளை நாடுகள் பின்னணியில் நின்றதைத் தவறு என ஜெயநாத் கொலம்பேஜ் அல்லது அவரது அரசாங்கம் நினைத்தால், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையும் பெறுமதியற்றது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?


ஜெனீவாவில் தற்போதைய தூதுவர் ஒரு மேதை - ஐ.நா அவரைப் போன்ற ஒருவரை இதுவரை பார்த்ததில்லை. 1980களின் பிற்பகுதியில் ஜே.வி.பி எழுச்சியின் போது, அவர் சிங்கள ஒட்டு குழு நடவடிக்கைகளை மேற்கொண்டார் என்பதுடன், தெற்கில் இவர் பலரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.


தமிழீழ விடுதலைப் புலிகள் பல மேற்கத்திய நாடுகளால் தடைசெய்யப்பட்டபோது, அந்த நாடுகள் மனிதக்குலத்திற்காகவும், அவர்களின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மதிக்கின்ற நாடுகளாக ராஜபக்சக்கள் கருதினர். துரதிஷ்டவசமாக அதே நாடுகள் தங்களுக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்ததும், அவர்கள் வெள்ளை நாடுகள் நமது உள்நாட்டு விடயங்களில் தலையிடுகின்றன, எமது நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் மீறுகின்றனவென அழுகின்றனர்.


ஜனாதிபதியின் ஜனாதிபதி


சரத் வீரசேகரவை சிவில் சமூகத்தின் உறுப்பினர்கள், இலங்கையின் ஜனாதிபதியின் ஜனாதிபதி என்று அழைக்கின்றனர். ஏனெனில் அவரது அறிக்கைகள் இவர் இலங்கையின் ஜனாதிபதி போன்று ஆள்மாறாட்டம் செய்கின்றர். சரத் வீரசேகர, ரம்புகல்லா, பேராசிரியர் பிரிஸ், விமல் வீரவன்சா மற்றும் இன்னும் சிலரை ராஜபக்சக்கள் தங்கள் எஜமானரின் குரலாகப் பயன்படுத்துகின்றனர்.


இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா. தலையீட்டை,1990ம் ஆண்டில் மகிந்த ராஜபக்ச தான் அழைத்தவர் என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை போலும்.


ஜெனீவாவில் சரத் வீரசேகரவை பார்த்த தூதர்கள், அவர் இலங்கையில் என்ன வகையான பொதுப் பாதுகாப்பு பராமரிக்கிறார் என்று ஆச்சரியப்படுகிறார்கள்.


தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளைப் பற்றி நிறையப் பேசும் சரத் வீரசேகர, புலிகளைப் பற்றிய உண்மையான தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்பினால், அவர் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவைச் சந்தித்த இவரது சகோதரர் , ஆனந்த வீரசேகரவிடம் அறியலாம். தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவிடம், யாழ்ப்பாணக் கோட்டையை நோக்கிய தாக்குதல்களை நடத்த வேண்டாம் என்று வேண்டியவர். அத்துடன் தமிழர்களின் அரசியல் பிரச்சனைகளை, தெற்கில் உள்ள சிங்கள மக்கள், அறியாது தெரியாதுள்ளனர் என்பதையும் ஆனந்த வீரசேகர விடுதலைப் புலிகளிடம் கூறினார். ஆனந்த வீரசேகர இப்போது ஒரு பௌத்த துறவி என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கை -இந்தியா ஒப்பந்தம் மிகவும் பழமையானதா?


சரத் வீரசேகர, ரம்புகலா மற்றும் இன்னும் சிலர் இலங்கை-இந்தியா ஒப்பந்தம் மிகவும் பழமையானது என்றும், அது தற்போதைய நாட்களில் பொருந்தமற்றதுவெனவும் கூறுகிறார்கள். அப்படியானால், கச்சதீவு ஒப்பந்தம் மற்றும் ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தங்களும் இலங்கை-இந்தியா ஒப்பந்தத்தை விட மிகவும் பழமையானவை. அவ்வாறான நிலையில், இந்தியக் கடற்படை கச்சதீவுக்குள் செல்ல முடியுமா? ஸ்ரீமாவோ- சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் திருப்பி அனுப்பப்பட்ட தமிழர்களும் திரும்ப வந்து மலையகத்தில் குடியேறலாமா?.


தனிநபர்களையும் புலம்பெயர்ந்தோர் அமைப்பையும் தடைசெய்யும் கோட்டாபயாவின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் நன்கு அறியப்பட்டதாகும். இதற்கிடையில், மற்றொரு பட்டியல் இராணுவ உளவுத்துறை மற்றும் ஒட்டு குழு உறுப்பினர்களான டக்ளஸ், கருணா ,பிள்ளையன் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் சில முன்னாள் ஒட்டு குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம். இதனது நோக்கம் என்ன? 


கதிர்காமரும் விமானப்படை உதவி தளபதி


இராணுவத் தளபதியான சவேந்திர சிலவாவுக்கு என்ன நேர்ந்தது? அவர் இன்று கோவிட் -19 இல் நிபுணராக உருவாக்கப்பட்டுள்ளார். எந்த நேரத்திலும், சில பெரிய சக்திகளின் ஆதரவுடன், சவேந்திர சில்வா அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடும் என்று ராஜபக்சக்கள் சந்தேகிக்கின்றனர். எனவே கோட்டாபய சவேந்திர சில்வாவை ஒரு கோவிட் -19நிபுணராக ஆக்கியுள்ளதுடன், இவரைச் சகல இராணுவ நடவடிக்கைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.


கோட்டாபய விமானப் படையின் உதவி தளபதியான தமிழர் பி.பி. பிரேமச்சந்திராவை தனது வான்கார்ட் வணிகத்திற்காகப் பயன்படுத்தியது போன்று, இப்போது விஜயலேந்திரன், சுரேன் ரஹவன் ஆகியோரை சர்வதேசத்தில் தனக்குப் புகழ் கீர்த்தி ஏற்படுத்துவதற்காகப் பயன்படுத்துகிறார். தமது எண்ணங்கள் சிந்தனைகளிற்கு மனசாட்சிக்கு எதிரானதாகக் காணப்பட்டாலும் – விஜயலேந்திரன், சுரேன் ரஹவன், கருணா, பிள்ளையான் டக்ளஸ் ஆகியோர் தமது பிழைப்புக்காகப் பேசுகிறார்கள். இவர்கள் அனைவரும் கோட்டாபயவின் வலையில் சிக்கியுள்ளனர் என்பதே உண்மை.


தமிழரான விமானப் படையின் உதவி தளபதி பி.பி. பிரேமச்சந்திரா, போரின்போது அரசாங்கத்திற்கு மிகவும் விசுவாசமாகவும், கடுமையாக உழைத்து, பல பாராட்டுதல்களையும் விருதுகளையும் பெற்றவர். போர் ஆரம்பமாகியதைத் தொடர்ந்து, இலங்கை விமானப்படையில் காயப்பட்ட முதல் விமானப்படை அதிகாரி பிரேமச்சந்திரா என்பதை கோட்டாபய தெரிந்திருக்கவில்லையா?


இச்சம்பவம் கிழக்கு மாகாணத்தில் கரடியனாறு பகுதியில் ஏற்பட்டது. ஆனால் இவரது சேவை, அனுபவத்தின் அடிப்படையில் பிரேமச்சந்திராவிற்கு கிடைக்கப்பட வேண்டிய விமானப் படையின் தளபதி பதவியை, இவர் ஓர் தமிழன் என்ற காரணத்திற்காக மறுக்கப்பட்டு, இவரிலும் மிகக் குறைந்த சேவை அனுபவம் கொண்ட ஒரு சிங்களவருக்கே அப்பதவி கோட்டாபயவினால் வழங்கப்பட்டது. இவ்விடயத்தை விஜயலேந்திரன், சுரேன் ரஹவன், கருணா, பிள்ளையன், டக்ளஸ் போன்றோர் மனதில் கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பிரேமச்சந்திரா 2021 ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ம் திகதி பிரித்தானியாவில் காலமாகினர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


டக்ளஸ் தேவானந்தாவிற்கு ஏன் மீன்வளத்துறை அமைச்சு வழங்கப்பட்டது என்பதை இவர் ஒருபோதும் உணரவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் மிக நீண்டகாலமாக இருந்து வரும் மீனவர் பிரச்சினைகளை, இறுதியில் தமிழர்கள் மீது சுமத்தப்படவுள்ளது. இதற்காகவே டக்ளஸ் தேவானந்தா மீன்வளத்துறை அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.


2004ல் ஜே.வி.பியின் ஆதரவுடன் சந்திரிகா குமாரதுங்கா லக்ஷ்மன் கதிர்காமரை பிரதமராக நியமிக்க விரும்பியபோது, லக்ஷ்மன் கதிர்காமருக்கு என்ன நடந்தது என்பதை இந்த தமிழ் கைக்கூலிகள் எப்போதாவது உணர்ந்திருக்கிறார்களா? மகிந்த ராஜபக்ச தனது சிங்கள பௌத்த அடையாளத்தைச் செல்வாக்கையும் பாவித்து, கதிர்காமரை புறம் தள்ளினர் என்பது சரித்திரம். இன்று அதே கதிர்காமரின் பெயரை தமது சர்வதேச புகழிற்கும் கீர்த்திக்காவும் ராஜபக்சக்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.


மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரை, அவரது மூத்த மகன் நாமல் ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிக்க வேண்டும். கோட்டாபய இதற்கு உடன்படாத கட்டத்தில், ராஜபக்சக்களின் குடும்ப சர்ச்சை உச்சக் கட்டத்தை அடையும்.


என்னவானாலும், தயான் ஜெயதிலகா, பேராசிரியர் ராஜீவா விஜேசிங்க இன்னும் சில கல்விமான்கள் இலங்கையில் இன்றைய சர்வாதிகார பாதைக்கு அடித்தளம் அமைத்தவர்கள். கடந்த காலங்களில், குடும்ப செல்வாக்கு மோசடிகள் கொண்ட சிறிய மரத்தை, நன்றாக பசளையிட்டு நீர் ஊற்றி வளர்த்த பெருமை இக் கல்விமான்களையே சாரும். இன்று அது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒரு மாபெரும் மரமாக வளர்த்து யாவரையும் ஒதுக்கும் நிலைக்கு உருவெடுத்துள்ளது. இந்த கல்விமான்களின் கையிலும் இரத்த காறை உள்ளது என்பதை யாரும் மறக்க முடியாது.


கொள்கை, கண்ணியம், சுய மரியாதை போன்றவற்றிற்கு என்னிடம் முதலுருமை உண்டு. அதற்காக நான் தியாகம் செய்வேன். இருப்பினும், நான் அனாதை அல்ல! ஒரு தமிழ்ப் பாடல் கூறுகிறது: “அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை தமிழர் உடமையடா, ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா”.


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?