முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

f 757 இறுதிப் போரின் குழப்பத்தில் அமெரிக்கா!

இறுதிப் போரின் குழப்பத்தில் அமெரிக்கா! மோசமடையும் பின் விளைவுகள்  By Sheron   3 hours ago             Report விளம்பரம் ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் பலஸ்தீனத்துக்கு பெரும்பான்மை வாக்கு கிடைத்தாலும் அந்த தீர்மனம் நிறைவேற்றப்படாது என கனடாவிலிருக்கும் அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். ராபா நகர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு மத்திய கிழக்கு நாடுகளும் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பியிருக்கும் ஒரு நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

f 756 முல்லைத்தீவில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி!

  முல்லைத்தீவில் வர்த்தக பிரிவில் முதலிடம் பிடித்த மாணவி! குவியும் பாராட்டுக்கள்  By Shankar   3 hours ago             விளம்பரம் நாட்டில் 2023 (2024) ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவி இரவீந்திரராசா பிருந்தா முல்லைத்தீவு மாவட்டத்தில் வர்த்தக பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். குறித்த மாணவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

f 755 பிரித்தானியாவில் மர்மநபரால் துப்பாக்கிச்சூடு:9 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடம்

  பிரித்தானியாவில் மர்மநபரால் துப்பாக்கிச்சூடு:9 வயது சிறுமியின் நிலை கவலைக்கிடம்  By Laksi   2 hours ago             விளம்பரம் பிரித்தானியாவில்(UK) உணவகம் ஒன்றினுள் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகிய சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவமானது, பிரித்தானியா தலைநகர் லண்டனில் (London) கிங்ஸ்லேண்ட் ஹை ஸ்ட்ரீட் (Hackney) பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த உணவகத்தில் தந்தையான அஜீஷ் மற்றும் தாய் வினயாவுடன் உணவருந்தி கொண்டிருந்திருந்த கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த 9 வயதுடைய லிஸ்ஸல் மரியா என்னும் சிறுமியே பாதிப்புக்குள்ளாகியுள்ளார். உலகின் கவனத்தை ஈர்த்த 2 வயது சிறுவனின் ஓவியம்: இலட்சம் மதிப்பில் ஏலம் சிறுமியின் நிலைமை சம்பவத்தினத்தன்று, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர், உணவகத்தின் வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரை நோக்கி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உணவகத்துக்குள் உணவருந்திக்கொண்டிருந்த மரியா மீது ஒரு குண்டு பாய்ந்துள்ளது. இந்நிலையில், துப்பாக்கியால் சு

f 754 யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்று மாணவன் சாதனை

  யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்று மாணவன் சாதனை  By Laksi   4 hours ago             விளம்பரம் க.பொ.த  உயர்தர பரீட்சையில்  கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில    இலங்கை  ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார். வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் பொறியியல் பீடத்திற்கு தெரிவு அத்தோடு யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனான ம. டினோஜன் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

f 753 தனது வெற்றிக்குக் கடவுள்தான் காரணம் இடித்து உரைத்த மாணவி?

கலைப்பிரிவில் யாழ். மாவட்டத்தில் முதலிடம்: சாதனை படைத்த மாணவி  By Shadhu Shanker   7 hours ago             விளம்பரம் 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ்.மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. நான் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு  கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3ஏ சித்திகளை பெற்றுள்ளேன். நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம் சாதித்த மீன் வியாபாரியின் மகள் எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன். அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்க