முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 696 ஈரான் ஜனாதிபதி மரணத்திற்கும்

 

ஈரான் ஜனாதிபதி மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; திட்டவட்டமாக மறுக்கும் இஸ்ரேல்!

ஈரான் ஜனாதிபதி மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; திட்டவட்டமாக மறுக்கும் இஸ்ரேல்! | We Have Nothing Iran S President S Death Israel
IsraelIranIran PresidentHelicopter Crash
 8 hours ago
Sulokshi

Sulokshi

  •  
  •  
  •  
Follow us on Google News

  ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி (Ebrahim Rais) மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Rais), அஜர்பைஜான் எல்லையில் அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

ஈரான் ஜனாதிபதி மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை; திட்டவட்டமாக மறுக்கும் இஸ்ரேல்! | We Have Nothing Iran S President S Death Israel

உலக நாடுகளை உலுக்கிய ரைசி மரணம்

பல மணிநேர நீண்ட தேடுதலின் பின்னர் ரைசி உள்ளிட்ட 8 பேர் ஹெலிகாப்டர் கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசியின் (Ebrahim Rais) மரணம் உலக நாடுகளை உலுக்கி இருக்கிறது.

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

இலங்கையில் தமிழின படுகொலையில் ஈரானின் பங்கு!

இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தம் அதிதீவிரமாகி, இஸ்ரேல்- ஈரான் யுத்தமாக உருமாறிக் கொண்டிருக்கிறது. இதுவே 3-வது உலகப் போர் உருவாகவும் காரணமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.


இந்த தருணத்தில் ஈரான் ஜனாதிபதியின்  (Ebrahim Rais) மரணத்துக்கு இஸ்ரேல்தான் காரணம்; இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்புதான் ரைசியை படுகொலை செய்துவிட்டதாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் இஸ்ரேல், இந்த சந்தேகங்களை திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பேசிய இஸ்ரேல் அதிகாரிகள், ரைசி  (Ebrahim Rais) ஹெலிகாப்டர் விபத்துக்கு நாங்கள் காரணம் அல்ல; இது எங்களுடைய நடவடிக்கையும் அல்ல என திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

ஈரான் அதிபர் உயிரிழப்பால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றம்; மௌனம் காக்கும் அமெரிக்கா

ஈரான் அதிபர் உயிரிழப்பால் மேற்கு ஆசியா அரசியலில் பதற்றம்; மௌனம் காக்கும் அமெரிக்கா

கடந்த மாதம் சிரியாவில் ஈரானின் தூதரகம் மீது சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தி இராணுவ தளபதி உள்ளிட்ட 13 வீரர்களை இஸ்ரேல் படுகொலை செய்தது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தச் சூழலில் ரைசியின் (Ebrahim Rais) மரணம் நிகழ்ந்திருப்பதால் இஸ்ரேல் பக்கமே உலக நாடுகளின் சந்தேக திரும்பியுள்ள நிலையில், ஈரான் அதிபர் ரைசி மரணத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என இஸ்ரேல் மறுப்பு தெரிவித்துள்ளது. 


கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?