முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 732 சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம்

 

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம்

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம் | Swiss Tamil Media Center Launched In Switzerland
TamilsSwitzerlandWorld
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

சுவிற்சர்லாந்தில் (Swizerland) ஊடகத்துறை சார்ந்த மற்றும் ஆர்வம்மிக்க நண்பர்களின் சந்திப்புக்களின் வழியே தோற்றம் பெற்ற“சுவிஸ் தமிழ் ஊடக மையம்” உத்தியோகபூர்வமாக அறிமுகமானது.

குறித்த ஊடக மையமானது, நேற்று (26) சுவிற்சர்லாந்தின் பாசல் பிராந்தியத்துக்கு அருகாமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட படி நிகழ்வு மிகச் சரியாக மாலை 4 மணிக்கு சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் பொருளாளர் மயூரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

கனடாவில் வசிக்க பாதுகாப்பான நகரங்கள்: வெளியானது தரவரிசை பட்டியல்

 நிகழ்வுகள்

 விழாச் சுடரினை சுவிற்சர்லாந்தின் சோசலீச ஜனநாயக கட்சியின் சொலத்தூன் மாநில Hofstellen - Flüh பகுதியின் கலை, கலாச்சாரப்பிரிவின் உறுப்பினர் சுலோஜன் சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமானது.

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம் | Swiss Tamil Media Center Launched In Switzerland

இதுவரை காலமும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் படத்துக்கான ஈகைச்சுடரினை சுவிற்சர்லாந்தின் தமிழ் கல்விச்சேவை மற்றும் Tess Care மற்றும் தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் வினுசன் ஜெயரட்ணராசா ஏற்றி வைக்க ஊடகச் செயற்பாட்டாளர் கரன் மலர் வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து அகவணக்கமும் வருகை தந்தோரின் மலர் வணக்கமும் இடம்பெற்றது.

தலைமையுரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் தலைவர் ஊடகவியலாளர் ஜெராட் நிகழ்த்தினார். அவர் உரையில் ஊடக மையத்தின் தோற்றம் பற்றியும் தேவை பற்றியும் செயற்பாடு பற்றியும் தொட்டுச் சென்றார்.

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது :அரசின் திட்டம் குறித்து எச்சரிக்கை

ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது :அரசின் திட்டம் குறித்து எச்சரிக்கை

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள்

படுகொலை செய்யப் பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய நினைவுப் பேருரையினை சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் உபதலைவர் ஊடகவியலாளர் அசோக் நிகழ்த்தினார்.

வாழ்த்துரையினை பாசல் இந்து ஆலயத்தின் தலைவரும், பிறாத்தல்ன் நகரசபை உறுப்பினருமான குலசிங்கம் விக்னராஜா நிகழ்த்தியிருந்தார். அவர் தனதுரையில் ஊடகம் மற்றும் அரசியல் துறையில் இளைய தலைமுறையினர் தடம்பதிக்க வேண்டும்என்பதனையும் அதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தியிருந்தார்.


சுவிற்சர்லாந்தில் பிறந்து வளர்ந்து சுவிற்சர்லாந்தின் சோசலீச ஜனநாயக்கட்சியின் உறுப்பினராகி அரசியலில் தடம் பதிக்கும் சுலோஜன் சுந்தரலிங்கம் ஊடகத்துறையின் அவசியம் பற்றியும் ஊடகசுதந்திரம் பற்றியும் தனதுரையில் சுட்டிக்காட்டியுருந்தார்.

இறுதியுத்தம் வரை முள்ளிவாய்காலில் இருந்து மீண்டு வந்த ஊடகவியலாளர் அமரதாஸ் சிறப்புரை ஆற்றியிருந்தார். சுவிஸ் ஊடக மையம் அனைவரையும் ஒன்றிணைத்து பயணிக்கும் அமைப்பாக இருக்க வேண்டுமென தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கைதான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர்: வெளியான அதிர்ச்சி தகவல்

மூத்த ஊடகவியலாளர்கள்

அதனைத் தொடர்ந்து “சுவிஸ் தமிழ் ஊடக மையம்” திட்டமிட்டபடி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மூத்த ஊடகவியலாளர்கள் மதிப்பளிக்கப்படுவார்கள்.

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம் | Swiss Tamil Media Center Launched In Switzerland

அந்த வகையில் இந்த ஆண்டு மூத்த ஊடகவியலாளர் ஞானசுந்தரம் குகநாதன் அவர்கள் மதிப்பளிக்கப்படுவதற்காக தெரிவாகியிருந்தார்.

அவரது உடல் நலக்குறைவால் அவரால் சமூகமளிக்க முடியாது போயிருந்தது. அவருக்கான மதிப்பளிப்பினை ஊடகவியலாளர் அமரதாஸ் வழங்க ஊடகவியலாளர் அசோக் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து “சுவிஸ் ஊடக மையம்” அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்: இருவர் பலி

கனடாவில் விபத்துக்குள்ளான விமானம்: இருவர் பலி

ஊடகத்துறையின் சவால்கள்

இதன் தலைவராக ஜெராட், உபதலைவராக அசோக், செயலாளராக மதனராஜ், உபசெயலாளர் வின்ஸ்லோ, பொருளாளராக மயூரன் மற்றும் ஆலோசகராக ஊடகவியலாளர் கனகரவி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம் | Swiss Tamil Media Center Launched In Switzerland

அறிமுகத்தினைத் தொடர்ந்து ஊடகவியலாளர் கனகரவி அவர்களின் அறிமுக உரை இடம்பெற்றது. அறிமுக உரையில் ஊடகத்துறையின் சவால்கள் பற்றியும் சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் முன் விரிந்துள்ள பணிகள் பற்றியும் தொட்டுச் சென்றார்.

ஈரான் அதிபருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான்

ஈரான் அதிபருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜீவன் தொண்டமான்

 நன்றியுரை

சுவிஸ் தமிழ் ஊடக மையத்தின் செயலாளர் மதன்ராஜ் அவர்களின் நன்றியுரையுடன் அரங்க நிகழ்வு திட்டமிட்ட படி 5.30 மணிக்கு நிறைவு கண்டது.

சுவிற்சர்லாந்தில் சுவிஸ் தமிழ் ஊடக மையம் அறிமுகம் | Swiss Tamil Media Center Launched In Switzerland

சிறிய சிற்றுண்டி இடைவேளையை தொடர்ந்து வருகை தந்தவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று இடம் பெற்றது. இக் கலந்துரையாடலில் கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பல்வேறு கருத்துக்களையும் பல விடயங்கள் சார்ந்த தமது ஆதங்கங்களையும் முன் வைத்தார்கள்.

இவை தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட்டு அவை நோக்கி ஊடக மையம் செயற்படுமென குறிப்பிடப்பட்டது. அத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுகண்டது.

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள பகீர் தகவல்

இப்ராஹிம் ரைசியின் மரணம்: வெளியாகியுள்ள பகீர் தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?