முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 680பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

 

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

oபிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Remembrance In Britain

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

பிரித்தானியாவில் (Britain) உணரவெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலானது புலம்பெயர் தேசமான பிரித்தானியாவில் உள்ள உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.

நந்திக்கடலை நினைவுகூரும் முகமாகவும் முள்ளிவாய்காக்கல் இறுதி போரின் போது கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் முகமாகவும் பிரித்தானியா உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் உள்ள ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் நினைவு கூரப்பட்டுள்ளது.

18.05.2024 அன்று மாலை 5.15 மணி அளவில் நினைவேந்தலில் முன்றலில் சமயப் பெரியார்கள், பொது மக்கள் என பலரின் ஒன்றுகூடலோடு முள்ளிவாய்க்கால் மண்ணில் தமது உறவுகளை இழந்தவர்களின் பொதுச்சுடர் ஏற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்

இயக்கம் இருந்திருந்தால் தமிழர் தாயகம் துயரங்களை கண்டிருக்காது : தாயின் அவலக்குரல்


இனப்படுகொலையின் சாட்சி

அதனைத்தொடர்ந்து, பிரித்தானிய கொடியினை ஏற்றி வைக்க தமிழீழ தேசிய கீதம் ஒலிக்க தமிழீழ தேசிய கொடியினை சதா ஏற்றி வைத்துள்ளார்.


அடுத்ததாக இறுதி கட்ட போரில் இறந்தோரை நெஞ்சில் நிறுத்தி அகவணக்கம் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவோசை ஒலிக்க பிரதான நினைவுச்சுடரினை முள்ளிவாய்க்காலில் தனது தந்தையை இழந்த தமிழீழ காவல்துறை துணை பொறுப்பாளர் மாதவன் மாஸ்ரர் ஏற்றி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக அங்கே குழுமி இருந்த உறவுகள் தமக்கு முன்னால் நடப்பட்டிருந்த பந்தங்களை ஏற்றி இனவழிப்பு போரில் இறந்த தம் உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

தொடர்ந்து, நினைவேந்தல் தூபிக்கு ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழர் இனப்படுகொலையில் இருந்து இனப்படுகொலையின் சாட்சியான முகிலினி தனது உணர்வுகளை அங்கே இருந்த உறவுகளுடன் பகிர்ந்து கொண்டார்

இனவழிப்புக்கு நீதி

அதன் தொடர்ச்சியாக பிரித்தானியாவில் பிறந்த சிறுவனான ஆதிசன் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு சம்பவத்தினை உரையாக தொகுத்து வழங்கினார்.

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் | Mullivaikkal Remembrance In Britain

தொடர்ந்து தொழிற் கட்சிக்கான தமிழ் அமைப்பின் தலைவர் ஆங்கில மொழியில் முள்ளிவாய்க்கால் அவலத்தினையும் அதன் நீதி கோரலையும் சென் கந்தையா வழங்கி வைக்க சம நேரத்தில் வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் மே மாதத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவப் படங்கள் வைக்கப்பட்டு அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடரும் ஏற்றப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் வாழ்க்கையை நினைவு படுத்தும் வகையில் வந்திருந்தவர்களுக்கு " முள்ளிவாய்க்கால் கஞ்சி " சிரட்டையில் பரிமாறப்பட்டதுடன் முள்ளிவாய்கால் வலி சுமந்த நினைவு பாடல் ஒன்றும் வெளியீடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் பெருமக்கள், இளையோர், முள்ளிவாய்க்கால் மண்ணில் இருந்து தப்பியவர்கள், உள்ளூர் பிரித்தானியா மக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டு, உணர்வுகளுடன் சங்கமித்தனர்.

இந்நிகழ்வானது, எமது தாயக விடுதலை அடையும் வரையும் எமது இனவழிப்புக்கு நீதி கிடைக்கும் வரையும் எமது பயணம்  தொடரும் என்பதனை சுட்டி காட்டும் வகையில் அமைந்திருந்தது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நீதிகளை பூட்டி மறைக்கும் இலங்கை அரசு: பிரித்தானிய தரப்பு குற்றச்சாட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?