முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 736 தொடரும் ஈழத்தமிழர்களின் ஐனநாயகவளிப் போராட்டம்?

 

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள்

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள் | Two Petitions To British Prime Minister
Missing PersonsSri Lankan TamilsUnited Kingdom
 3 hours ago
  •  
  •  
  •  
Join us on our WhatsApp Group

 இலங்கையில் நடந்த ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையின் உச்சமான மே 18 அவலத்தின் 15 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வுகளின்போது, பிரித்தானிய பிரதமரிடன் இரு அமைப்புக்களால் இருவேறு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முதல் மனு

முதல் மனு, இலங்கை அரசால் தமிழ் மக்களுக்கு எதி்ராக நடாத்தப்பட்டது மற்றும் நடாத்தப்பட்டுக் கொண்டிருப்பது திட்டமிட்ட இனப்படுகொலையே என்பதைப் பிரித்தானிய அரசு உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இனப் படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் என்ற அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.


இதனைச் செயற்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டவர்களுமான மனுமயூரன் கிருபானந்தா மனுநீதி, சசிகரன் செல்வசுந்தரம், கஜானன் சுந்தரலிங்கம், றோய் ஜக்சன் ஜேசுதாசன், துஷானி இராஜவரோதயம் மற்றும் சுபமகிஷா வரதராஜா ஆகியோர் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த மனுவில், கனடாவில் இடம்பெற்றதைப் போல், பிரித்தானிய நாடாளுமன்றமும்  இலங்கையில் இழைக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை என்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அவ்வாறு ஏற்றுக்கொள்வதற்குத் தீர்ப்பாயமொன்று அவசியமெனில், அதனை உள்ளக ரீதியிலோ அல்லது ஏனைய நாடுகளுடன் இணைந்தோ நிறுவ வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளமை தென்னிலங்கை அரசியலின் சதி : பொ .ஐங்கரநேசன்

கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளமை தென்னிலங்கை அரசியலின் சதி : பொ .ஐங்கரநேசன்

இரண்டாவது மனு

இரண்டாவது மனுவானது,  இலங்கையில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் புலம்பெயர் உறவுகளின் சங்கத்தினரால் கையளிக்கப்பட்டது.

இம் மனுவிலும் இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கும்படியும், இலங்கை பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, முன்னாள் இலங்கை ஐனாதிபதிகள் மகிந்த ராஜபக்‌ச மற்றும் கோட்டாபய ராஜபக்‌ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளைப் பின்பற்றி பிரித்தானிய அரசு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானிய பிரதமருக்கு இருவேறு மனுக்கள் | Two Petitions To British Prime Minister

இம்மனுவை இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரித்தானிய வாழ் உறவுகள் கையளித்துள்ளனர்.

குறிப்பாக, இலங்கையின் இறுதிப் போரின் நிறையில் வெள்ளைக்கொடியுடன் பிரான்சிஸ் தலைமையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களான தமிழீழ காவல்துறையின் இரண்டாவது பொறுப்பாளரான மாதவன் மாஸ்டரின் மகனான கோகுலன் சிவசிதம்பரம், தளபதி ஜெரியின் மகனான புகழினியன் விக்டர் விமலசிங்கம், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பராவின் பேரனாகிய ஈஸ்வரன் ஜெனார்த்தனன், கேணல் கண்ணனின் மகனான உதயராஜா பவசுதன், போராளியான யூக்சின் வினோஜினி அந்தோனிப்பிள்ளையின் சகோதரியான மேரி யூலியானா சசிகரன் மற்றும் அஹிதர் பாலசுப்பிரமணியத்தின் தம்பியான அனுஷன் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேரடியாகப் பிரதமர் அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?