முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news b951

இந்த 1,300KG ஏவுகணையை தான் மக்கள் மீது அடிக்கிறது ரஷ்யா: வெடித்தால் ஏரியாவே காலி … ரஷ்யா உக்கிரைன் நாட்டை கைப்பற்ற தற்போது பாவிக்கும் ஏவுகணை மிகவும் பயங்கரமானது. 3M-54 Kalibr கலிபர் என்று இதனை அழைப்பார்கள். நோவட்டோன் டிசைன் பீரே என்னும் ரஷ்ய கம்பெனி ஒன்று, 1994ல் இந்த ஏவுகணையை டிசைன் செய்தது. அன்று முதல் இந்த ஏவுகணை 2021ம் ஆண்டு வரை பல மாற்றங்கள் அடைந்து, இறுதியாக குறுந்தூற ஏவுகணையாக இருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த இந்த ஏவுகணையில் 1,300KG வெடி பொருள் உள்ளது. அது வெடித்தால் ஒரு ஏரியாவே காலியாகி விடும். அந்த வகையாக குரூஸ் மீசைல்லை தான் ரஷ்யா மக்கள் குடியிருப்பு மீது ஏவி பல கிராமங்களை அழித்து வருகிறது. மக்கள் புறப்பட்டுச் சென்று விட்டதால் மட்டும் தான், உயிரிழப்பு பல தவிர்கப்பட்டுள்ளதே தவிர, .. மக்கள் இடம் பெயராமல் அப்படியே இருந்திருந்தால், பெரும் ரத்த ஆறு ஓடியிருக்கும். தம் எதிரே இருக்கும் அனைத்து கட்டங்களையும் உடத்துக் கொண்டு தான் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது. அந்த இடத்தில் நின்று எதிர்த்து சண்டை இடுவது என்பது, இயலாத ஒரு காரியம். இருப்பினும் உக்கிரைன் ராணுவம் மிகுந்த உறுதியோடு அங

TAMIL Eelam news b950

அம்மா இங்கே நாங்கள் எல்லோரையும் குண்டு போட்டுக் கொல்கிறோம்- ரஷ்ய ராணுவம் அம்மாவுக்கு சொன்ன .. அம்மா இங்கே பெரும் போர் வெடித்துள்ளது, நாங்கள் உக்கிரைன் மண்ணில் இருக்கிறோம். ஆனால் சகல இடங்களையும் நாம் குண்டு போட்டு தாக்குகிறோம், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்று ரஷ்ய ராணுவச் சிப்பாய் ஒருவர் தனது அம்மாவுக்கு ஒரு ரெக்ஸை அனுப்பி உள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் அவர் இறந்து விட்டார். அந்த ரஷ்ய சிப்பாயின் அம்மா, குறித்த ரெக்ஸை மீடியாவுக்கு கொடுத்துள்ளார். அதனை அப்படியே ஐ.நா சபையில்… உக்கிரைனுக்காக ஐ,நா தூதுவர் அனைவருக்கும் வாசித்துக் காட்டியுள்ளார். அதில் நாங்கள் மக்கள் குடியிருப்பு, வைத்தியசாலைகள் மற்றும் பள்ளிக் கூடங்கள் என்று அனைத்து இடத்தையும் குண்டு போட்டு தாக்குகிறோம் என்று, அந்த ரஷ்ய சிப்பாய் கவலையோடு எழுதி உள்ளார். வீடியோ கீழே இணைப்பு.

TAMIL Eelam news b949

இலங்கையில் பெரும் துயரம் - பிள்ளைகளுக்கு உணவு இல்லாமையினால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை களுத்துறை வெலிபென்ன பிரதேசத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பிள்ளைகளுக்கு உணவு வழங்க முடியாமையினால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்துள்ளதாக, உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார். 3 நாட்களாக வீட்டில் உணவு ஒன்றுமே இல்லை. பிள்ளைகளுக்கு உணவு வழங்க பணம் தேடி வருவதாக கூறி சென்றார். அவர் வீட்டிற்கு வராமையினால் வீட்டில் இருந்த நாற்காலிகளை விற்று உணவு வழங்கினேன் என தற்கொலை செய்துக் கொண்ட நபரின் மனைவி தெரிவித்துள்ளார். தற்கொலை செய்துக் கொண்டவர் வெலிபென்ன பிரதேசத்தை சேர்ந்த நாகராஜா ரஞ்சன் என்ற 37 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையாகும். உயிரிழந்தவரின் மனைவியான 30 வயதான மாடசாமி மஞ்சுலா என்பவர், மரண பரிசோதனை அதிகாரிகளிடம் சாட்சி வழங்கியுள்ளார். உயிரிழந்திருப்பவர் எனது கணவர், எங்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு 12 வயதுக்குட்பட்ட நான்கு பிள்ளைகள் உள்ளனர். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். எனது கணவருக்கு வேலை தேடி தெ

TAMIL Eelam news b948

ஐநா மனித உரிமைகள் கூட்டம் ஆரம்பமானது! - 26 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதிக்க திட்டம் இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 26 அதிகாரிகளுக்கு பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையிலும் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் 4ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, ந

TAMIL Eelam news news b947

மனித குலத்திற்கு எதிரான போரில் புலம்பெயர் தமிழரின் நிலைப்பாடு? மனித குலத்துக்கு எதிராக ஓர் யுத்தம் நடைபெற்றுகொண்டிருக்கின்றது. ரசியாவின் மக்கள் நலன்களிற்கு எதிராக தமது சுயநலத்துடன் கூடிய இராணுவ ஆட்சி நடாத்தும் புட்டினால் போர் ஆரம்பிக்கபட்டுள்ளது என சுவிட்சர்லாந்தில் உள்ள சமூகச் செயற்பாட்டாளர் சுதா அவர்கள் தனது பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, போர் அதிகார ஆளுமைகளை மீட்பதற்கும் சமநிலையை பேணுவதற்காகேவே நடைபெறுகின்றது. நாட்டோ தரப்பின் விரிவாக்கம் ரசியத்தரப்பிற்கு நெருக்கடிகளை கொடுத்திருக்கலாம். அதனால் ரசியாவும் உக்கிரனை நடுநிலை நாடாக வைத்துக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுப்டிருக்கலாம். நாட்டேவில் இணைந்த நாடுகள் தம்மை ரசியாவின் தலையீடுகளில் இருந்து தவிர்த்து மேற்குலகத்துடன் கைகோர்ப்பதற்காகவே இணைந்தன. நாட்டோவின் தவறுகளும் இந்த யுத்தததி்கான ஊண்றுகோலாக அமைந்திருக்கலாம். எப்படி உலக நாடுகள் கிட்லரின் நடவடிக்களை குறைத்து மதிப்பிட்டு இரண்டாம் அதிர்ச்சியுடன் முகம்கொடுத்தனர். அதே போன்று அபாய சமிக்கைகள்வந்த போதும் மேற்குலகின் அவதானிமின்மை

TAMIL Eelam news b946

உக்ரைனில் கைதான ரஷ்ய இராணுவ வீரர்கள்; குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் ரஷ்யா - உக்ரை இடையில் தொடர்ந்து கடும் மோதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை உக்ரைன் இராணுவத்தினர் தாங்கள் கைதுசெய்துள்ள ரஷ்ய படைவீரர்களை காண்பிக்கும் பல கணொளிகளை வெளியிட்டு வருகின்றனர். உக்ரைனின் உள்துறை அமைச்சின் டெலிகிராம் சனல் ஒன்றில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் காயமடைந்த நிலையில் காணப்படும் ரஷ்ய வீரர் ஒருவர் தனது பெயரையும்,Leonid Paktishev தான் ரொஸ்டொவ் பிராந்தியத்தை சேர்ந்த சினைப்பர் படையணியை சேர்ந்தவர் எனவும் கூறுகின்றார். குறிப்பிட்ட டெலிகிராம் சனல் கைதுசெய்யப்பட்ட பல ரஷ்ய வீரர்களை காண்பிக்கும் வீடியோக்களை வெளியானதை தொடர்ந்து, கைதான வீரர்களின் ரஷ்ய பெற்றோர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். அத்துடன் உக்ரைன் மீதான படையெடுப்பில் தங்களின் பிள்ளைகளும் கலந்துகொண்டமை குறித்து தாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பக்டிசெவ்வினை தங்களிற்கு தெரியும் என்பதை கார்டியனிற்கு தெரிவித்த மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள், தங்கள் நேசத்திற்குரியவர் கைதுசெய்யப்பட்டதை காண்பிக்கும் வீடியோவை பார்த்ததும் தாங்

TAMIL Eelam news b945

நாளை இலங்கைக்கும் இந்த நிலைமை வரலாம்? இரட்டை வேடம் போட்ட உக்ரைன் இலங்கையில் விடுதலைப் புலிகள் உயிருடன் இருந்த காலத்தில் அவர்களுக்கு உக்ரைன் ராணுவம் பயிற்சி அளித்தது, இதேவேளை, 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த காலத்தில் இலங்கையின் போர் விமானங்களை அதே விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் எதிராக உக்ரைன் விமான படையினரே செயல்படுத்தினர் என இலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தேசிய இனத்துக்கும் ரஷ்ய மொழி பேசும் ரஷ்ய தேசிய இனத்தினருக்குமான நீண்ட கால மோதல் இப்போது நாடுபிடி யுத்தமாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதையும் தேசிய இனப்பிரச்சனையையும் முன்வைத்து உக்ரைன் மீது ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தை தொடர்ந்து பல லட்சம் உக்ரைனிய மக்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி உள்ளனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளை நம்பியிருந்த உக்ரைன் இப்போது நட்டாற்றில் விடப்பட்டுள்ளது. இதனால் ரஷ்யாவின் கோரப்பிடிக்குள் சிக்கி உக்ரைன் பாரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யா, உக்ரைன் இரு நாடுகளில் யாருக்கு ஆதரவு என்பது தொடர்பாக ச

TAMIL Eelam news b944

உக்ரைன் முக்கிய பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ரஷ்யாவின் நடவடிக்கை உக்ரைன் - ரஷ்யா இடையே ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்து வருகின்றது. மேலும் இந்த தாக்குதலில் இரு நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள கியின்கா (Kyyinka) எனும் கிராமத்தில், சற்றுமுன்னர் கொத்தணிக் குண்டுகளை வீசி தாக்குதல் ரஷ்யா நடத்தியுள்ளது. மேலும், இந்தத் தாக்குதல் சர்வதேச நியமங்களை மீறி நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவலை உக்ரேனிய இராணுவத்தின் The press service of the Operational Command "North" வெளியிட்டுள்ளது

TAMIL Eelam news b943

இலங்கையில் உள்ள உக்ரைன் நாட்டவர்களிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய தம்பதி உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை நிறுத்தக் கோரி காலியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள உக்ரேனிய சுற்றுலா பயணிகள் குழுவொன்றினால் காலி கோட்டையில் உள்ள தேவாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது உயிரிழந்த தமது உறவினர்களின் நினைவாக விளக்குகளை ஏற்றி அஞ்சலி செலுத்தினர். காலி, உனவட்டுன, பெந்தோட்டை, ஹிக்கடுவ, வெலிகம மற்றும் மிரிஸ்ஸ ஆகிய பகுதிகளில் தங்கியிருக்கும் உக்ரேனியர்கள் பலர் கலந்துகொண்டனர். ரஷ்ய தாக்குதல்களில் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொல்லப்பட்டதாகவும், அவர்களது குடும்பத்தினர் பதுங்கு குழிகளில் பதுங்கியிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தாங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மனிதாபிமானமற்ற செயல் என்றும், இதை தடுக்க உலக நாட்டுத் தலைவர்கள் தலையிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன்போது அவ்விடத்திற்கு வந்த ரஷ்ய நாட்டு தம்பதி உக்ரேன் நாட்டவர்களை கட்டி அணைத்து ரஷ்யாவின் செயற்பாட்டிற்கு மன்னிப்பு கோரியுள்ளனர்.

TAMIL Eelam news b942

ரஷ்ய இராணுவத்துக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயாராகும் பெண் எம்.பி ரஷ்ய இராணுவத்தை எதிர்க்க, தேவைப்பட்டால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்த தயாராக இருப்பதாக உக்ரைன் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் இன்னா சோவ்சுன் தெரிவித்துள்ளார். ஏ.என்.ஐ.செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், துப்பாக்கியை தாம் வெறுப்பதாகவும், ஆனால் எந்த ஒரு ரஷ்ய வீரரும் தமது நாட்டிற்குள்ளும், வீட்டிற்குள்ளும் நுழைய அனுமதிக்க மாட்டேன் எனவும் கூறினார். தேவை ஏற்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் என்றும், இதற்காக தமது சகோதர் மற்றும் நண்பர்கள் மூலம் பயிற்சி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டிற்காக போரிட தயார், அதையும் சிறப்பாக செய்வேன் என்றும் இன்னா சோவ்சுன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் உக்ரைனிய நாடாளுமன்ற எம்.பி.க்கள், கிரா ருடிக் மற்றும் லெசியா வாசிலென்கோ ஆகியோர் தேசத்தை பாதுகாக்க நாடு முழுவதும் உள்ள பெண்கள், அரசியல்வாதிகள் தேவைப்படும் நேரத்தில் ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என தெரிவித்துள்ளனர்.

TAMIL Eelam news b 941

ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்துங்கள்! உக்ரைனுக்கு அதிவேக ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா ரஷ்ய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன், ரஷ்யாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளதுடன்,போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. குறித்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணைகள் இராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றது. அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களை வழங்குமாறு உக்ரைன் கேட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஏவுகணைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உக்ரைனுக்கு 3 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், மற்றும் இராணுவ டேங்கிகளை எதிர்க்கும் 200 க

TAMIL Eelam news b940

வீட்டை எரித்த ரஷ்ய வீரர்கள்...புடினுக்கு நன்றி கூறிய உக்ரேனிய பெண் உக்ரேனியப் பெண்ணின் வீடு ரஷ்ய இராணுவத்தால் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில், புடினுக்கு அவர் நன்றி தெரிவிக்கும் காணொளி வஞ்சகத்துடன் பரவலாகப் பகிரப்பட்டது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமித்ததால், மக்கள் வீடுகளை இழந்தனர். இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரின் வீடு எரிந்த நிலையில், வீட்டை இழந்த சோகத்தை வீடியோ எடுத்து புடினுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இப்போது அவர் குளிர்ச்சியாக இருக்கிறார், இந்த உதவிக்கு நன்றி, ஜனாதிபதி புடினை முரண்பாடான புகழ்ச்சியுடன் விமர்சித்தார்.

TAMIL Eelam news b939

அணுவாயுத தாக்குதல் நடத்தப்படும் - புடின் விடுத்த எச்சரிக்கை உலக நாடுகளின் கடும் அழுத்தங்களையும் மீறி உக்ரைன் - ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தம் நான்காவது நாளாகவும் தீவிரமடைந்துள்ளது. உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் முனைப்புடன் தீவிரமாக முன்னேறி வரும் ரஷ்ய படைகளுக்கு பதில் தாக்குதலை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பல ஐரோப்பிய நாடுகள் இராணுவ உதவி வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளன. இன்றையதினம் சில நாடுகளின் ஆயுத தளபாடங்கள் உக்ரைன் எல்லையை தாண்டியுள்ளன. இந்நிலையில் தமது இராணுவ நடவடிக்கைக்கு எந்தவொரு நாடும் இடையூறு செய்தால் அணுவாயு தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மீது அணு ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான போர் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், உலக நாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அணு ஆயுதம் தொடர்பான எச்சரிக்கையை ரஷ்ய அரச தலைவர் புடின் விடுத்திருந்தார். உலகின் மிக வலிமையான அணு ஆயுதங்கள் உள்ள நாட

TAMIL Eelam news b938

ஒத்துழைப்பு தராவிடின் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்! இந்தியா - சீனாவுக்கு ரஷ்யா மறைமுக மிரட்டல் 500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், தனக்கு எதிராக செயல்படும் நாடுகளை ரஷ்யா மறைமுகமாக மிரட்டி வருகிறது. குறிப்பாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலைய செயல்பாடுகளில் பிரச்சினையை ஏற்படுத்தப்படும் என்றும் உலக நாடுகளை ரஷ்யா மிரட்டியுள்ளது. இதுகுறித்து, ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் ஜெனரல் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் 4 அமெரிக்கர்கள், 2 ரஷ்யர்கள், ஒரு ஜெர்மனியர

TAMIL Eelam news b937

போர் பதற்றத்திற்கு மத்தியில் உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு சம்பள உயர்வு! உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த போர் உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன்,உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக பல தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய இராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது. எனினும் ரஷ்ய படைகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் உக்ரைன் இராணுவத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆர்வமுள்ள நபர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகின்றனர். மேலும், பொதுமக்களுக்கும் ஆயுதம் வழங்கப்பட்டு, ரஷ்ய படைகளை எதிர்ப்பதற்கு தயார்படுத்தியுள்ளதுடன்,உக்ரைன் வீரர்கள் சோர்ந்து போகாமல் இருப்பதற்காக அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகின்றார். இந்நிலையில், ரஷியாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் இராணுவ வீரர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. மாத ஊதியமாக 1இலட்ச

TAMIL Eelam news b936

போர் களத்தில் படையினருக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை முதன்முறையாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள ரஷ்யா உக்ரைன் - ரஷ்ய மோதல் 4 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் உக்ரைன் நாட்டிற்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக உக்ரைன் இராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4300-க்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்திருந்தது. மேலும், ரஷ்ய இராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறி உள்ளது. இதுதவிர ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியிருந்தது. இருப்பினும் தமது தரப்பு உயிரிழப்புக்கள் தொடர்பில் ரஷ்யா இதுவரை எந்த விதமான தகவல்களையும் தெரிவிக்காமல் இருந்த நிலையில்,ரஷ்ய ஆயுதப் படையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை முதன்முறையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்ச

TAMIL Eelam news m935

இந்த நபரால் தான் ரஷ்யா வரலாறு காணத அழிவை சந்தித்துள்ளது- நாட்டின் ஹேரோ எனப் பாராட்டிய அதிபர் ! வால்டமி என்ற உக்கிரைன் கடல்படை வீரர், தன்னை தானே அழித்து பெரும் பாலம் ஒன்றை தகர்த்து விட்டார். இதனால் முன்னேறி வந்த ரஷ்ய ராணும் ஒரு கட்டத்தில் அசைய முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. ரஷ்ய தலை நகர் கிவிவ் வை கைப்பற்ற பெரும் டாங்கிப் படைகள் பெலருஸ் நாட்டில் இருந்து புறப்பட்டது. அதனை இடைமறித்து உக்கிரைன் ராணுவம் தாக்கி வந்தது. இருப்பினும் அவர்கள் வேகம் குறையவில்லை. இன் நிலையில் முக்கிய பாலம் ஒன்றை கடந்து தான் ரஷ்ய படைகள் முன்னேற வேண்டி இருந்த நிலையில். அந்த பாலத்தை தகர்பது என்று முடிவு செய்யப்பட்டது. பெரும் வெடி பொருட்களோடு சென்ற கடல் படை குழு ஒன்று, அங்கே பாலத்திற்கு அடியில் குண்டுகளை பொருத்தினார்கள். ஆனால் அவர்கள் சற்றும் எதிர்பாராமல்… ரஷ்ய ராணுவப் டாங்கிகள் அங்கே வந்து விட்டது. இதனை அடுத்து தனது குழுவில் இருந்த அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிய வால்டமி என்ற கடல் படை வீரர். தூரச் சென்று பாலத்தை தகர்க்க நேரம் போதாது என்பதனால், அருகில் இருந்தவாறே பாலத்தை தகர்த்து விட்டார். அவர் கட

TAMIL Eelam news b934

இறுதி தீர்மானத்தை வெளியிட்டுள்ள ரஷ்யா ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதினின் இலக்குகளை எட்டும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய பாதுகாப்பு கவுன்சில் துணை தலைவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைன் மீதான போரை நிறுத்துவதற்கு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில்,அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் “இந்த அற்புதமான கட்டுப்பாடுகள் (பொருளாதார தடைகள்) நிச்சயமாக எதையும் மாற்றாது. அமெரிக்காவுக்கு இது தெளிவாக தெரியும். அதிபர் புதின் நிர்ணயித்த இலக்குகள் அடையப்படும் வரை போர் நடவடிக்கை தொடரும்” என ரஷ்ய தேசிய பாதுகாப்பு துணை தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது. இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு தெரிவித்ததினை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்

TAMILEelam news b933

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பெய்து வரும் கடும் மழையால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளிற்கு மேல் இப்படி ஒரு வெள்ளப் பெருக்கு ஏற்படவில்லையெனவும் இருப்பினும் இந்த ஆண்டு கடுமையான வெள்ளம் ஏற்பட்டததாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றார்கள். அனைத்து மக்களையும் பாதுகாப்பான இடங்களிற்குச் செல்லுமாறு அவ் மாநில அரசு கேட்டுள்ளது.brisbane உடக்கே உள்ளே நகரமான கிம்மி என்ற இடத்தில் பல சாலைகள் துண்டிக்கப்பட்டன. மற்றும் கூராணா என்ற இடத்தில் வெள்ள நிவாரணம் கொடுக்கச் சென்றே தன்னார்வ ஊளியர் ஒருவர் நிவாறணப்பணியின் போது வெள்ளத்தில் மூழ்கி இறந்துள்ளார். மற்றும் கற்றன் தொழில்சாலைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டன. இது வரை வெள்ளப் பெருக்கில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயிர்ந்துள்ளது. கணமழை பெய்து வருவதால் வெள்ள நிவாறணங்களை. துரிதப்படுத்துமாறு குயின்ஸ்லாந்து மாநில பிறிமியர் அனுசேசி. வலுசேர் வலியுறுத்தியுள்ளார்.

TAMILEelam news b932

உக்கிரைன் மீதான படை எடுப்பு தோல்வியில் முடியப் போகிறதா ? பணம் இல்லாமல் திண்டாடும் ரஷ்யா ! உக்கிரைன் மீது படை எடுத்தால் 2 தினங்களில் படை எடுப்பு முடிந்து விடும் என்று தப்புக் கணக்கு போட்ட புட்டினுக்கு தற்போது மேலும் மேலும் தலை வலி வர ஆரம்பித்துள்ளது. இதுவரை என்ன எல்லாம் நடந்திருக்கிறது என்று பார்க்க முன்னர், 15B பில்லியன் டாலர்களை சுமார் 4 நாட்களில் இழந்துள்ளார் புட்டின். அத்தனையும் ராணுவ தளபாடங்கள் தான். போருக்கான ஆயுதங்கள், இது வரை விழுந்து நொருங்கிய 6 ஹெலி, நூற்றுக் கணக்கான டாங்கிகள் மற்றும் கவச வாகனங்கள், துருப்புகள், விமானங்கள் என்று சொல்லிக் கொண்டு போகலாம். இது போக ரஷ்யாவில் உள்ள பல செல்வந்தர்கள், அதுவும் புட்டினுக்கு மிக நெருங்கியவர்களின் சொத்துகள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. அதிலும் புட்டினின் மருமகனுக்கு சொந்தமான வங்கி அதில் உள்ள பணத்தையும் சேர்த்து பிரித்தானியா ஏப்பம் விட்டது… தற்போது… மேலும் சில நாட்கள் யுத்தம் நீடித்தால் அதற்கான செலவு, ஆயுதங்கள் என்று பார்த்தால். இந்த யுத்தத்தில் ரஷ்யா பெரும் அழிவை சந்தித்துள்ளது தெரியவரும். ஒட்டு மொத்ததில் ரஷ்யா ராஜ தந்திர ரீத

TAMIL Eelam news b931

செஞ்சோலை வளாகம் மீதி குண்டு வீசியது உக்ரைனை சேர்ந்த பெண் விமானியா? உக்ரேனிய பெண் விமானியான நீங்கள், மைக் போர் விமானத்தை ஓட்டி, மீள்குடியேற்ற வெள்ளைப் புறா மற்றும் பிற மனித சமூகங்கள் மீது குண்டு வீசியதை நாங்கள் மறக்கவில்லை. உக்ரேனிய மிக் போர் விமானத்தை ஓட்டிய உக்ரேனிய பெண் விமானிகள் மீள்குடியேற்ற வெள்ளை புறா மீது குண்டு வீசினர். உக்ரைனுக்கு எங்கள் மீது குண்டுவெடித்தது நியாயமானது என்றால், இப்போது ரஷ்யா உக்ரைனைத் தாக்கி ஆக்கிரமிப்பது நியாயமானது. அமெரிக்க ராணுவ தளம் ஒன்றின் மீது குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. எப்படி சதையில் முள்ளு பசி பசி போதாமை கஞ்சி ஒடுக்கப்பட்ட உள்ளத்தின் சாபம் கடவுளின் தண்டனை. கர்மா. செம்படை வளாகத்தில் வெடிகுண்டு வீசிய MiG-27 விமானத்தை ஓட்டிய உக்ரேனிய பெண் பின்னர் வருந்தினார்

TAMIL Eelam news b930

உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்துங்கள்! ரஷ்ய படைகளுக்கு உத்தரவு உக்ரைன் - ரஷ்ய மோதல் 3 ஆவது நாளாக தீவிரமடைந்துள்ளதுடன்,வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், உக்ரைன் மீது அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதல் நடத்த படையினருக்கு ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ்வை ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு உக்ரைனுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ள நிலையில் அதனை உக்ரைன் மறுத்துள்ளது. இந்நிலையில், பேச்சு வார்த்தைக்கு வர உக்ரைன் மறுப்பு தெரிவித்ததினை தொடர்ந்து உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைனை சுற்றி வளைத்து அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நடத்த ரஷ்ய படையினருக்கு அந்நாட்டு இராணுவம் உத்தரவிட்டுள்ளதுடன், தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய இராணுவம் உத்தவிட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAMIL Eelam news 929

ரஷ்ய தாக்குதல் வேகம் குறைந்தது - பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு “கடுமையான தளபாட சிக்கல்கள் மற்றும் வலுவான உக்ரைனிய எதிர்ப்பின் விளைவாக, ரஷ்ய படைகளின் முன்னேற்ற வேகம் தற்காலிகமாகக் குறைந்துள்ளது,” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ரஷ்ய படைகள் உக்ரைனிய மக்களின் தங்குமிடங்களைக் கடந்து செல்லும்போது, அவர்களைச் சுற்றி வளைத்து தனிமைப்படுத்த படைகளை விட்டுச் செல்கின்றன,” என்று பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் தலைநகரான கீயவைக் கைப்பற்றுவதே ரஷ்யாவின் முக்கிய நோக்கமாக உள்ளது என்றும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது. வெடியோசைக்கு மத்தியில் பிறந்த குழந்தை -'சுதந்திரம்' என பெயரிட்ட உக்ரைன்(Photo) உக்ரைன் தலைநகரான கிவ்வில் ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு பயந்து பொதுமக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அவ்வாறு தஞ்சமடைந்திருந்த 23 வயதான பெண் ஒருவருக்கு அங்கேயே போருக்கு மத்தியில் வெடிகுண்டுகளின் சத்தத்தில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற

TAMIL Eelam news b928

ஐபிசி தமிழின் ஊடகவியலாளர் மீது தாக்குதல்! மட்டக்களப்பில் ஐபிசி தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமனன் தேவபிரதீபன் என்ற ஊடகவியலாளரே இன்று காலை தாக்குதலுக்கு இலக்காகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், பேருந்து நிலையம் அகற்றுவது தொடர்பாக வந்தாறுமூலை பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மீது கிழக்கு பல்கழலைக்கழகத்தில் பணிபுரியும் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் தேவபிரதீபன் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக இலங்கையில் ஊடக சுதந்திரமும் ஊடகவியலாளரின் சுதந்திரமும் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்களும் பதிவாகிக் கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news b927

ரஷ்ய அதிபர் புதின் உலகை ஆளுவதை யாராலும் தடுக்க முடியாது; வைரலாகும் பாபா வாங்கா கணிப்பு! உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ரஷியாவை யாராலும் தடுக்க முடியாது என்றும், அதிபர் புதின் (Vladimir Putin)உலகை ஆளுவார் எனவும் கண் தெரியாத பாபா வாங்காவின் (Baba Wanga) கணிப்பு தற்போது வைரலாகி உள்ளது. பல்கேரியன் நாட்டை சேர்ந்த பெண் பாபா வாங்கா (Baba Wanga) . கண் தெரியாத இவர் 1996 ஆம் ஆண்டு தனது 85 வயதில் காலமானார். அங்கு, பாபா வாங்கா பல்கேரிய நாஸ்டர்டாமாக மதிக்கப்படுகிறார். பாபா வாங்கா (Baba Wanga) 50 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு தகவல்களை முன் கூட்டியே கணித்து கூறி உள்ளார். அவர் கூறியதில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்டவை பலித்தும் உள்ளன, நடந்தும் உள்ளன. அவரது கணிப்பில் அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீது விமான தாக்குதல் நடைபெறும் எனக் கூறினார். அதேபோன்று அந்த தாக்குதல் நிகழ்ந்து உலகையே அதிர வைத்தது. அத்துடன் அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என பாபா வாங்கா (Baba Wanga) கணித்தார். அதே போல், ஒபாமா ஜனாதிபதியாக பதவியேற்றார். அத

TAMIL Eelam news b926

ரஷ்சியாவில் இருந்து பிரிந்த அனைத்து நாடுகளையும் இணைக்கும் போராகமாறலாம். பதட்டத்தில் அமெரிக்கா ? 6 அமெரிக்க F35 விமானங்கள்: 90,000 ஆயிரம் படைகள் EU நாடுகளுக்குள் நுளைந்தது : கடும் படை நகர்வு ரஷ்யாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ளது ! உக்கிரைன் நாடு மீது ரஷ்யா படை எடுத்ததை அடுத்து, அருகில் உள்ள நாடுகளான போலந்து, எஸ்டோனியா, லத்வியா றொமேனியா மற்றும் பல்கேரிய ஆகிய நாடுகள் பெரும் நடுக்கத்தில் உள்ளது. ரஷ்ய அதிபர் புட்டின் இனி என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனால் இந்த படை எடுப்பு நீண்டு , வேறு நாடுகளையும் ரஷ்யா கைப்பற்றக் கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இன் நிலையில் நேட்டோ நாடுகள் இணைந்து ஒரு காத்திரமான முடிவை எட்டியுள்ளது. இதனை அடுத்து 90,000 ஆயிரம் நேட்டோ துருப்புகள் உடனடியாக ரஷ்யாவை எல்லையாக கொண்டுள்ள பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவின் அதி நவீன மற்றும் உலகின் முதல் தர தாக்குதல் விமானமான F35, போலந்தில் உள்ள தளத்தில் இறங்கியுள்ளது. அமெரிக்கா 6 F35 போர் விமானங்களை உடனடியாக போலந்திற்கு அனுப்பி வைத்துள்ளார். உக்கிரைன் படையெடுப்பால்… ஐரோ

TAMIL Eelam news b925

ரஷ்யர்கள் தலைநகரை தாக்குவார்கள்! - உக்ரைன் ஜனாதிபதியின் எச்சரிக்கை ரஷ்யர்கள் தலைநகர் கிவ்வை இன்னும் சில மணிநேரங்களில் தாக்குவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்தநிலையில் ரஷ்யப் படைகள் அருகிலுள்ள விமானத் தளத்தைக் கைப்பற்றிய நிலையில் கிவ்வில் புதிய வெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிவ் மீதான வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில், குடியிருப்பாளர்கள் நகரின் நிலத்தடி மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். ரயில்கள் திறந்த நிலையில் உள்ளன மற்றும் அவற்றின் நடைமேடைகளில் மக்கள் தங்குவதற்கும், வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ளவும் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி சில மணி நேரங்களுக்கு முன்னர் மெட்ரோவில் ஒரு பெண் தனது குழந்தையைப் பெற்றெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி போதைக்கு அடிமையானவர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், மற்றும் அவர் தலைமையிலான குழுவினர் "போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் நவ நாஜிகளின் குழுவினர்" என்று உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் ஜனாத

TAMIL Eelam news b924

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் - உக்ரைன் அறிவிப்பு! போர் நிறுத்த, அமைதி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யப் படைகள் தாக்குதலை மூன்றாவது நாளாக தீவிரமாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் பெரும்பாலான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. இதேவேளை, உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு எதிராக போராடி வருகின்றது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் நிழவி வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் அதனையை ந்சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் அமைதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) செய்தித்தொடர்பாளர் கூறுகையில், போர் நிறுத்தம், அமைதி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் தயாராக உள்ளது. பேச்சுவார்த்தையை எங்கு, எ

TAMIL Eelam news b923

இந்தத் திருமணம் தான் விடுதலை புலிகளின் அழிவிற்கும் பின்னணிக்காரணியாக இருந்தது எவளவு உயர்ந்த கரும்புலிகளின் தியாகத்தையும்(0) சிறோ நிலைக்குக் கொண்டு வந்தது. திருமணம் முடிந்த கையோடு துப்பாக்கியுடன் போருக்கு தயரான உக்ரைன் தம்பதி! (Photos) உக்ரைன் தலைநகர் கிவ்வில் போருக்கு மத்தியில் ஒரு தம்பதியினர் திருமணம் செய்துக்கொண்டுள்ளனர். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 24 வயதான ஸ்வயடோஸ்லாவ் பர்சின், 21 வயதான யரினா எரிவா என்ற இருவரும் எதிர்வரும் மே மாதம் தலைநகர் கிவ்வில் உள்ள ஒரு உணவகத்தின் மேல்தளத்தில் டினிப்பர் ஆற்றை பார்த்தவாறு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வந்த நிலையில் நேற்றைய தினம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை அறிவித்தார். இதனால் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்றும் உக்கிரமாக தாக்குதல் நடந்து வருகிறது. இதேவேளை, அமைதியான நதி, அழகான விளக்குகள், உணவகத்தின் மேல்தளம் என்று அமைதியான முறையில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த பர்சின், யரினா தம்பதி தற்போது போருக்கு நடுவே

TAMIL Eelam news b922

சரணடைய மறுத்த உக்ரைன் வீரர்களின் இறுதி நிமிடங்கள் ரஷ்ய போர்க்கப்பலின் கேப்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர் உக்ரைன் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யப் படைகள் ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான், கடல் மற்றும் தரை மார்க்கமாக நடத்தப்பட்ட முப்படைத் தாக்குதலில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டது. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தன. அதேபோல் உக்ரைனும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்கிறது. அதனால் எப்போதும் பதற்றமான சூழல் நிலவும். உக்ரைன் தலைநகர் கியேவை ரஷ்யப் படைகள் சுற்றி வளைத்து தாக்கின. இதனிடையே கருங்கடலில் உள்ள உக்ரைன் பாம்பு தீவில் உக்ரைன் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, ​​அப்பகுதிக்கு வந்த ரஷ்ய போர்க்கப்பல், உக்ரைன் படையினரை சரணடையச் செய்தது. ரஷ்ய போர்க்கப்பலின் கேப்டன் தீவில் இருந்த உக்ரேனிய வீரர்களிடம் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு கூறினார். இது தொடர்பான ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ரஷ்ய போர்க்கப்பலின் கேப்டன் ஸ்னேக் ஐலேண்ட், இது ரஷ்ய போர்

TAMIL Eelam news b921

உக்ரைன் இராணுவத்திற்கு புடின் விடுத்த அழைப்பு உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு இராணுவத்தினருக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன. இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுக்குமாறு அந்நாட்டு இராணுவத்தினருக்கு புடின் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் இராணுவம் அதிகாரத்தை கைப்பற்றும் நிலையில், பேச்சுவார்த்தை மூலம் எளிய தீர்வு எட்ட முடியும். உக்ரைனில் தற்போதுள்ள ஆட்சியை அகற்றிவிட்டு இராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும்” என புடின் தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news b920

என்னை உயிருடன் பார்ப்பது கடைசி முறையாக இருக்கும் - உக்ரைன் அரச தலைவர் உருக்கம் நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும் என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேசிய ஜெலன்ஸ்கி, நீங்கள் என்னை உயிரோடு பார்ப்பது இது தான் கடைசி முறையாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

TAMIL Eelam news b919

தாயகத்தில் இளைய தலைமுறையினரின் தற்கொலை அதிகரிப்பு? யாழில் பரிதாபமாக உயிரிழந்த 22 வயது யுவதி; நடந்தது என்ன? நேற்றாஇயதினம் யாழ்.கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்த ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவலகள் வெளியாகியுள்ளது. யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்று குளிரூட்டப்பட்ட புகையிரதம் மீது மோதியே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம்பெண்ணே உயிரிழந்துள்ளார். அதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் , காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே வேளை யுவதி தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ரயிலில் பாய முற்பட்ட போது தந்தை கத்தியபடி தடுக்க முற்பட்டேகாயமடைந்ததாகவும் நேரில் பார்த்த சிலர் கூறியதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

TAMIL Eelam news b918

உக்கிரமடையும் போர்! உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள காட்சிகள் (நேரலை) உக்ரைனில் இடம்பெறும் முதல் நாள் ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உக்ரைன் குடியிருப்பாளர்கள் நிலத்தடி மெட்ரோ தொடருந்து நிலையங்களுக்கு சென்றனர். கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையங்களில், வயதான குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட - குடியிருப்பாளர்கள் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகத்தின் மதிப்பீட்டின்படி 100,000 க்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். உக்ரைனுக்கு நேர் கிழக்கே அமைந்துள்ள போலந்து அகதிகளின் வருகைக்காக அதன் எல்லையில் வரவேற்பு மையங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாவது நாளான இன்று காலை முதல் இடம்பெற்ற நிகழ்வுகளை தருகிறோம். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு தேசிய உரையை நிகழ்த்தினார், இதன்போது வெள்ளிக்கிழமை அதிகாலை தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை பல ரஷ்ய படையினர் தாக்கியதை அவர

TAMIL Eelam news b917

தன் வினை தன்னைச் சுடும் தமிழ் பழமொழி தமிழர்களை வெட்டுவதற்காக ஆவா என்ற பெயரில் தமிழ் கைக்கூலிகளை உருவாக்கியது சிங்கள அரசு அதைப் பார்த்து கொப்பி அடித்த சிங்களவர்கள் தங்களை தாங்களே வெட்டும் தூர்ப்பாக்கிய நிலை ஏற்ப்பட்டுள்ளது.சரத் வீரசேகரவின் பாதுகாப்பு அதிகாரி மீது வாள் வெட்டுத் தாக்குதல்! சிறிலங்காவின் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த உதவி காவல்துறை அத்தியட்சகர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரே வாள் வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான உதவி காவல்துறை அத்தியட்சகர் வசித்து வரும் மகரகமை பிரதேசத்தில் உள்ள வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக மகரகமை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உதவி

TAMIL Eelam news b916

படையெடுப்பைத் தவிர வேறு வழியில்லை - புடின் ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உக்ரைன் மீது படையெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்புடன் சேர்வதற்கான அனைத்து பணிகளையும் உக்ரைன் செய்து வருகிறது. இது தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி ரஷ்யா தாக்குதல் நடத்தத் தொடங்கி உள்ளது. முன்னதாக கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் டோனட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் ஆகிய பகுதிகளை சுதந்திர பகுதியாக ரஷ்யா அறிவித்தது. கடந்த ஒக்டோபர் மாதத்திலிருந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளைக் குவித்து வரும் நிலையில் தற்போது தாக்குதல் நடத்ததத் தொடங்கி விட்டது. அங்குள்ள பாதுகாப்பு படை வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடந்து வருவதாகவும், ரஷ்ய இராணுவத்திற்கு பொதுமக்கள் இலக்கு அல்ல என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் உக்ரைன் மீது படையெடுப்பதை தவிர, ரஷ்யாவை காக்க வேறு வழியில்லை என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வணிக பிரதிநிதிகளுடனான தொலைக்காட்சி சந்திப்பின் போது பேசிய அவர், “ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிப்படு

TAMIL Eelam news b915

ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் இத்தனைப்பேர் பலியாகியுள்ளனரா? உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் ரஷ்ய கூட்டமைப்பு ஏவுகணைகளை வீசுகிறது. இதன் விளைவாக, Luhansk, Sumi, Karkiv, Chernihiv மற்றும் Zytomir ஆகிய பகுதிகளில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. ரஷ்ய ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. தரை மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து உக்ரைன் துருப்புக்கள் ஏற்கனவே ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்ததாக ரஷ்யா கூறுகிறது. உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 50 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர். உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ், உக்ரைன் குடிமக்களுக்கு பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்புப் படைகளில் சேர அழைப்பு விடுத்தார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஐரோப்பாவில் நடந்த போருக்கு ஐரோப்பிய ஆணையத்தை குற்றம் சாட்டினார். ஐரோப்பிய ஒன்றியம் (EU) உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக நிற்கிறது என்றும், சுதந்திர நாட்டுக்கு எதிரான ரஷ்ய தலைமையின் முன்னோடியில்லாத ஆக்கிரமிப்பைக் கண்டிப்பதாகவும் அவர் கூறினார். இதனிடைய

TAMIL Eelam news b914

செர்னோபில் அணுமின் நிலையத்தை ஆக்கிரமித்தது ரஷ்யா உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்யா கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைன் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆலோசகர் ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தைக் கைப்பற்றியதாகக் கூறினார். இது இன்று ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. கீவ் அருகே உள்ள செர்னோபில் பகுதி தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் இன்று இரவு நடந்த தொடர் குண்டுவெடிப்புகளால் நகரம் தீப்பிடித்து எரிந்தது. முன்னதாக, தென்கிழக்கு நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

TAMIL Eelam news b913

இனி உலக அரங்கில் ரஷ்ய அதிபர் புதின் தனிமைப்படுத்தப்படுவர்! ஜோ பைடன் உக்ரைன் மீது திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்யா மற்றும் அதிபர் விளாதிமிர் புதின் (Vladimir Putin), இனி உலக அரங்கில் தனிமைப்படுத்தப்படுவர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட ரஷ்யா, தலைநகர் கீவுக்குள் நுழைந்து பீரங்கி தாக்குதல் மற்றும் வெடிகுண்டுகளை வீசியதுடன் பல நகரங்களில் உக்ரைனிய இராணுவ தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா மீதான அமெரிக்காவின் நடவடிக்கைகளை விவரித்தார். அப்போது அவர் ரஷ்யாவின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்தார். அதன் விவரம், ரஷ்யா திட்டமிட்ட உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. ரஷ்ய ராணுவம் ஆத்திரமூட்டல் அல்லாமல் நேரடியாகவே யுக்ரேன் மீது கொடூர தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் திடீரென நடந்ததாக தோன்றவில்லை. இது பல மாதங்களாக நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது. 1,75,00 துருப்புக்கள் மற்றும் ராணுவ உபக

TAMIL Eelam news b912

ரஷ்ய படைகளை உயிருடன் சிறைப்பிடித்த உக்ரைன் இராணுவ படை! உக்ரைன் மீது ரஷ்யா போரை தீவிரப்படுத்தியுள்ள நிலையில் முதல் நாளான இன்று இரு நாட்டு தரப்பினருக்கும் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இருப்பினும் உக்ரைன் படைகளுடன் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சி படையின் தாக்குதலில் ரஷ்யா பெரும் இழப்புக்களை சந்தித்துள்ளதாக தெரிய வருகிறது. தலைநகர் கீவ்வின் சில பகுதிகளை ரஷ்ய படைகளால் கைப்பற்றப்பட்ட போதும், பதிலடி காரணமாக மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் உக்ரைன் படைகள் கொண்டு வந்துள்ளன. தீவிரமான படை நடவடிக்கையின் போது ரஷ்ய துருப்புக்களை உக்ரைன் படையினர் உயிருடன் சிறைப்பிடித்துள்ளனர். இதேவேளை உக்ரைனில் பதிலடி காரணமாக ரஷ்யாவின் 8 வானூர்திகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரேன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ரஷ்ய படைகளின் தாக்குதலில் 50 உக்ரேன் இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 10 பொது மக்களும் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்க

TAMIL Eelam news b911

அமெரிக்க ஜனாதிபதியாக நான் இப்போ இருந்திருந்தால் - டிரம்ப் வெளியிட்ட கருத்து! தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் (Donald Trump) கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த் நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலை ஒருபோதும் வந்திருக்காது. எனக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நன்றாக தெரியும். அவர் தற்போது செய்யும் செயலை (உக்ரைன்