முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b909

எதற்காக இந்த யுத்தம்? ரஷ்யாவின் நோக்கம் தான் என்ன?
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற நிலைக்கு காரணம் ரஷ்யா உக்ரைன் மீது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்து உள்ளமைதான். உண்மையில் இது மூன்றாம் உலகப் போர் ஆக வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உள்ளன. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஒரே நாளில் பங்குச் சந்தைகள் முதல் எரிபொருள் விலை ஏற்றம் வரையில் மொத்த உலகத்தையும் பாதிக்கும் விதமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் காரணமான ரஷ்யாவின் படையெடுப்பின் நோக்கம் என்ன? உண்மையில் ரஷ்யாவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை பார்க்கலாம். ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விதமாக நேட்டோ நாடுகள் அவற்றின் இராணுவ பரவலாக்கத்தை கிழக்கு நோக்கி அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டே முதலாவதாக ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை நிறுத்தியது. இதற்கான அடித்தளம் கடந்த வருடம் ஜனவரி மாதமே ஆரம்பமாகி இருந்தது. 2021 ஜனவரி மாதம் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் புடின், (Vladimir Putin) ஸிலேன்ஸ்கி, (Volodymyr Zelenskyy) உக்ரைனை நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் இணைத்துக் கொள்ளுமாறு அமெரிக்காவிடம் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்திருந்தார். கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன், இப்போது அமெரிக்காவின் நட்பு கூட்டான நேட்டோ நாடுகளுடன் இணைய முற்படுவதை ரஷ்யா விரும்பவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், (Vladimir Putin) ரஷ்ய படைகளை பயிற்சிக்காக கடந்த வருடம் ஆரம்பப் பகுதியில் உக்ரைன் எல்லைக்கு அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடத்தின் பிற்பகுதியில் மேலதிக படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. டிசம்பர் மாதம் அளவில் ரஷ்யாவின் படை அதிகரிப்பைக் கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்கும் என கூறியிருந்தார். இதற்குப் பதிலாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான நேட்டோ நாடுகளும் கிழக்கு ஐரோப்பா மற்றும் உக்ரைனில் போர் பயிற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என எழுத்து ரீதியான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட வேண்டும் என கேட்டிருந்தார். மேலும் அவர் குறிப்பிடும் போது, உக்ரைன் மேற்கு நாடுகளுக்கு பொம்மை போல் செயல்படுவதாகவும் சுய நாடாக தீர்மானங்களை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார். ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்படுவது இது முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆதரவு பெற்ற போராட்டக்குழு கிழக்கு உக்ரைன் மீது போர் தொடுத்து கிரீமியா தீவை ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது. அன்று முதல் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத கும்பல்கள் உக்ரைன் ராணுவத்துடன் தொடர்ந்து முரண்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளன. முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் உக்ரைனில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். மற்றும் ரஷ்யாவுடன் கலாச்சார, சமூகத் தொடர்புகளை அதிகளவில் கொண்டுள்ளனர். ஆனால் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆக்கிரமிப்பின் பின்னர் பலரும் ரஷ்யா மீது வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டுள்ளதோடு, உக்ரைன் தனி நாடாக இறையாண்மையுடன் இருப்பதையே விரும்புகின்றனர். 2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்ட தாக்குதலில் 14,000 பேர் அளவில் பலியாகி இருந்தனர். டான்பாஸ் பகுதி, அதாவது இப்போது மோதல்கள் உருவாகியுள்ள பிரதேசம், உட்பட கிழக்கு உக்ரைனில் ஆயுத மோதலை நிறுத்த ரஷ்யாவும் உக்ரைனும் 2014ஆம் ஆண்டில் மின்ஸ்க் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன. ஆனால் இந்த பகுதியில் முரண்பாடுகள் நீடித்து வருவதால்,’அமைதிகாப்பாளர்களை’ அனுப்புவதாக ரஷ்யா கூறி படைகளை அனுப்ப ஆரம்பித்தது. இறையாண்மை உடைய பிரதேசம் ஒன்றின் மீது ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யா கூறும் போலி காரணமாக இது சர்வதேச சமூகத்தால் பார்க்கப்படுகிறது. இப்போது ரஷ்யா உக்ரேன் இடையே உருவாகியுள்ள மோதல், பொருளாதார ரீதியிலும் இராணுவ, பாதுகாப்பு ரீதியிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கக் கூடியது. இதன் காரணமாகவே அமெரிக்காவும் உக்ரைனும் ரஷ்யா மீது தடைவிதிக்கும் போது, ஏனைய நேட்டோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இணைந்து ரஷ்யா மீது தடை விதிக்க முன்வந்துள்ளன. பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்கிரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸிலேன்ஸ்கி ஆகியவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு இருந்த போதும் இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இப்போது இந்தியா உட்பட மேலும் பல நாடுகள் ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?