முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b884

திம்புப் பேச்சு வார்த்தையின் போது 1985 ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மீள் வெளியீடு காலத்தின் தேவை கருதி .!
ஏமது தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று முழு உலகத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு உள்நாட்டுநெருக்கடியாகத் தோன்றிய எமது பிரச்சினை இன்று உலகத்தைஈர்க்கும் ஒரு சர்வதேச நெருக்கடியாக விஸ்வரூபம் கொண்டுள்ளது. சிங்கள அரசானது எம் முடன் தனித்து நின்று போராடவில்லை.ஏகாதிபத்திய நாசகார சகதிகள் அனைத்தையும் தனக்குப் பக்கபலமாக அனிைத்திரட்டி எமது மக்களுக்கு எதிராக ஒரு இன அழிப்பு யுத்தத்தை நடத்தி வருகிறது எமது கோரிக்கை என்ன ? எமது அரசி யல் இலட்சியம் என்ன என்பதில் நாம் மெளனமாக இருந்துவிடவில்லை . எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கிய திட்டம் ஒன்றை நாம் முன்வைத்தோம். நாம் ஒரு தேசிய இனம் என்ற ரீதியிலும், வரலாற்று ரீதியாக அமைந்த எமது பரம்பரை தாயக பூமி எமது சொத்துடமை என்பதாலும் எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் சுயநிர்ணய உரிமை எமக் குண்டு. இந்த சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலேயே எமது தனியரசுப் போராட்டம் அமைந்திருப்பதால் எமது போராட்டம் நியாயமானது என்பதைவிளக்கியிருந்தோம். தேசிய சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டம் நீண்ட வரலாற்றையுடையது. பல வடிவப் போராட்டங்களால் பரிணாமம் பெற்றது. காந்தியப்பாதையில் அமைதிவழிப் பாதையில் மொழிஉரிமை கோரி, சமஉரிமை கோரிசமஸ்டி கோரி நடைபெற்ற அகிம்சை வடிவப் போராட்டங்கள்அனைத்துமே எதிரியின்இராணுவ ஒடுக்குமுறையால்அடக்கியொடுக்கப்பட்டன. இறுதியில் சுய நிர்ணய உரிமையின் அடிப்படையிலான தனியரசுக் கோரிக்கை பிறந்து, அது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவம் பெற்றது. இப்படியாக தமிழரின் அரசியல் போராட்ட வரலாறறின் உசசககLமாகவே தமிழீழக் கோரிக்கையும் அதனை அடையும்மார்க்கமாக ஆயுதப்போராட்டமும் பரிணமித்தது என்பதை விளக்கியிருந்தோம். தமிழீழ மக்களின் தேசியத்திற்கும், தாயகத்திற்கும். தேசியசுயநிர்ணய உரிமைக்கும் உத்தர வாதமளிக்கப்படாத எந்த ஒரு தீர்வையும் நாம் அங்கீகரிக்கப்போவதில்லை என்பதே நமது உறுதியான நிலைப்பாடாக இருந்ததுஆனால், சிங்கள அரசு எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை சிங்கள இனவாத ஆட்சியாளர் ஒரு இராணுவத் தீர்வையே விரும்புகிறார்கள் என்பது அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெட்டத் தெளிவாகியுள்ளது. எமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை ஒரு பயங்கரவாதப் பூதாகரமாகத் திரித்துக்காட்டி சுதந்திரப் போராளி களை வன்முறைப்பித்தர்களாகச் சித்ரித்துக்காட்டி . இராணுவரீதியாக எம்மை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். இந்த இலக்கில் அவர்கள் முழுச்சிங்கள தேசத்தையுமே இராணுவமயமாக்கி வருகிறார்கள். பெரியதொரு இனயுத்தத்திற்கு ஆயத்தங்கள் செய்து வருகின்றன . தர்மமும் உண்மையும் எமது பக்கம் சார்ந்திருக்கின்றது. அதுவே எமது பலம் . அதர்மமும், பொய்மையும் எதிரியின் பக்கம் சார்ந்திருக்கின்றது. அதுவே அவனின் பலவீனம். ஈற்றில் வெற்றி கொள்வதுநாம். ஏனெனில் என்றும் அழியாத தர்மம் எமக்குப் பக்கபலமாக இருக்கின்றது -தமிழீழ தேசியத் தலைவர் மேதகு .வே .பிரபாகரன் அவர்கள் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?