முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b948

ஐநா மனித உரிமைகள் கூட்டம் ஆரம்பமானது! - 26 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதிக்க திட்டம்
இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 26 அதிகாரிகளுக்கு பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய அறிக்கையிலும் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பான மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் 4ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் இலங்கை தொடர்பான விவாதமும் இடம்பெறவுள்ளது. இதேவேளை, இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆகியோர் அமர்வுகளில் பங்கேற்கின்றனர். இலங்கை நேரப்படி இன்று காலை 11 மணிக்கு அமர்வில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உரையாற்ற உள்ளார். இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து வெளிவிவகார அமைச்சர் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் இன்று இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். இதனிடையே, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்செலெட்டை சந்திக்க உள்ளார். இதேவேளை, ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா உரையாற்றினார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?