முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b918

உக்கிரமடையும் போர்! உக்ரைன் இராணுவம் வெளியிட்டுள்ள காட்சிகள் (நேரலை)
உக்ரைனில் இடம்பெறும் முதல் நாள் ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தப்பிக்க உக்ரைன் குடியிருப்பாளர்கள் நிலத்தடி மெட்ரோ தொடருந்து நிலையங்களுக்கு சென்றனர். கிவ் மற்றும் கார்கிவ் நகரங்களில் உள்ள மெட்ரோ தொடருந்து நிலையங்களில், வயதான குடிமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட - குடியிருப்பாளர்கள் தஞ்சமடைந்தனர். ஆயிரக்கணக்கான உக்ரேனியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகரகத்தின் மதிப்பீட்டின்படி 100,000 க்கும் அதிகமானோர் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். உக்ரைனுக்கு நேர் கிழக்கே அமைந்துள்ள போலந்து அகதிகளின் வருகைக்காக அதன் எல்லையில் வரவேற்பு மையங்களையும் அமைத்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாவது நாளான இன்று காலை முதல் இடம்பெற்ற நிகழ்வுகளை தருகிறோம். உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒரு தேசிய உரையை நிகழ்த்தினார், இதன்போது வெள்ளிக்கிழமை அதிகாலை தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை பல ரஷ்ய படையினர் தாக்கியதை அவர் உறுதிப்படுத்தினார். கிழக்கு, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள உக்ரேனிய நகரங்கள் மீது முன்னேறிய பின்னர், ரஷ்யா உக்ரேனிய தலைநகர் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.. உக்ரேய்ன் கிழக்கில் பிரிந்து சென்ற பகுதிகளிலும், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிலும் கடுமையான சண்டையுடன், நாடு முழுவதும் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. படையெடுப்பின் முதல் நாளான நேற்று - குறைந்தது 137 பொதுமக்கள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. அவர்களில் 13 உக்ரேனிய காவல்துறையினர், கருங்கடலில் ஒரு சிறிய பிரதேசத்தை ஸ்னேக் தீவை பாதுகாக்கும் நடவடிக்கையின் போது மரணமாகினர். உக்ரேய்னின் வடக்கில் செர்னோபில் அணுசக்தி தளம், ரஷ்ய படைகளிடம் வீழ்ந்த நிலையில் உக்ரைன் படையினர் அங்கு பிணைக் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகியவை ரஷ்ய வங்கிகள், நிறுவனங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை புதிய பொருளாதாரத் தடைகளை வெளியிட்டன. மேற்கத்திய நாடுகளும் உக்ரேனியப் படைகளுக்கு உதவி மற்றும் இராணுவப் பொருட்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளன பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு தொலைபேசியில் அழைத்து செய்து தாக்குதலை நிறுத்துமாறு கோரியுள்ளார். இந்தநிலையில் உக்ரேய்ன் ஜனாதிபதி இன்று காலை நிகழ்த்திய உரையில், மேற்கத்திய தடைகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார், "நேற்றைய நாள் போலவே, உலகின் மிக சக்திவாய்ந்த சக்திகள் தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். உக்ரைனில் தொடரும் பதற்ற நிலை உக்ரைன் தலைநகர் கீவில் வெள்ளிக்கிழமை காலை குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. அதேநேரம் நகரின் வான் பாதுகாப்பு பல ஏவுகணையால் விமானம் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளது. இதனை உக்ரேனிய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார் இந்தநிலையில் ஏவுகணை தாக்குதல் காரணமாக கியேவில் ஒன்பது மாடி குடியிருப்பு கட்டிடம் தீப்பற்றி எரிவதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது குறைந்தது மூன்று பேர் காயமடைந்துள்ளனர் துப்பாக்கிச் சண்டையின் காட்சிகளை வெளியிட்ட உக்ரைன் இராணுவம் உக்ரைனின் வடகிழக்கு நகரமான சுமியில் உக்ரேனிய பொலிஸாருக்கும் ரஷ்ய படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையின் காட்சிகளை உக்ரைனின் இராணுவம் வெளியிட்டுள்ளது. சுமி நகரம் - 260,000 க்கும் அதிகமான மக்கள் தொகையுடன் - ரஷ்ய எல்லையில் இருந்து 30 கிமீ (19 மைல்கள்) க்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ள ஒரு பிராந்திய தலைநகரம் ஆகும். இந்தநிலையில் ரஷ்ய இராணுவத் தொடரணி மேற்காக சுமியைக் கடந்து தலைநகர் கீவ் நோக்கிச் சென்றதாகக் கூறியுள்ளார். அருகிலுள்ள கொனோடோப் நகரம் இப்போது சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புடினுடன் கலந்துரையாடிய பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் கலந்துரையாடியதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் கூறியுள்ளார். தமது அழைப்புகளுக்கு புட்டின் பதில் வழங்காமை காரணமாக, அவருடன் தொடர்பு கொள்ளுமாறு உக்ரேனிய ஜனாதிபதி கேட்டுக்கொண்டமைக்கு இணங்க புடினுடன் தாம் பேசியதாக மேக்ரொன் தெரிவித்துள்ளார். இதன்போது உக்ரெய்ன் மீதான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு புடினிடம் கேட்டுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அழைப்பு "வெளிப்படையானது, நேரடியானது, விரைவானது" என்றும் மேக்ரோன் கூறியுள்ளார். எனினும் தமது கோரிக்கைக்கு புடின் கூறிய பதில் தொடர்பாக மேக்ரோன் எதனையும் தெரிவிக்கவில்லை. கீவில் ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது – உக்ரைன் அதிகாரி உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள டார்னிட்ஸ்கி மாவட்டத்தில் ரஷ்ய ஜெட் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உக்ரைன் உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைன் தலைநகர் கீவில் இன்று அதிகாலையில் இரு குண்டு வெடிப்புகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், ரஷ்ய ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக, உறுதிபடுத்தப்படாத செய்தி வெளியாகியுள்ளது. இச்செய்தி தொடர்பாக தீ மற்றும் கரும்புகை வெளியேறும் புகைப்படம் ஒன்றை, என்டிஏ எனும், உக்ரைனிய தொலைக்காட்சி சேனல் வெளியிட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யாவுக்கிடையிலான போர் நேற்றையதினம் உக்கிரமடைந்ததை அடுத்து இன்று இரண்டாவது நாளாகவும் போர் ஆரம்பமாகியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் சில பகுதிகளில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக, சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று, வெள்ளிக்கிழமை அதிகாலையில் மத்திய கீவில் இரு பெரிய குண்டு வெடிப்புகளையும், மூன்றாவதாக தூரத்தில் பெரிய குண்டு வெடிப்பையும் கேட்டதாக, அந்நகரில் உள்ள சிஎன்என் குழு தெரிவித்துள்ளது. இரு குண்டு வெடிப்புகளை கேட்டதாக, உள்துறை முன்னாள் துணை அமைச்சர் ஆன்டன் ஹெராஷ்சென்கோ கூறியுள்ளதாக, உக்ரைனின் யூனியன் செய்தி முகமைதெரிவித்துள்ளது. மேலும், தாழ்வாகவும் குறைந்த வேகத்திலும் பறந்து சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது குறித்து உக்ரைன் இராணுவம் இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?