முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b853

இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டாம்
விடுதலைப் புவிகளை அழிக்க வன்னியில் பரவலாக கிழைமோர் தாக்குதல் நாடாத்தப்பட்டதை நாம் அறிவோம் அது போல் சிங்களவர்கள் வெளிநாடுகளில் சுகந்திரமாக நடமாட முடியாதவாறு உளவியல்ரீதியான தாக்குதல் நாடத்தப்படுவதை இப்பொழுது நாம் பார்க்கின்றோம்.தமிழர் இனவழிப்பை மறைக்கும் சிறிலங்காவின் கிரிக்கெட் - இரண்டாவது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 13-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்ற போட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒன்று இரண்டாவது நாளாக நடைபெற்றது. துடுப்பாட்டம் (கிரிக்கற்) எனும் விளையாட்டுக்கூடாக தமிழர் மீதான இனவழிப்பை மூடிமறைக்கும் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்தும் வண்ணம் பதாகைகளை தாங்கியவாறு இந்நிகழ்வு நடைபெற்றது. Don't Let Sri Lankan Cricket Hide Tamil Genocide என்ற பதாகையுடன் Tamil Lives Matter என்ற பதாகையும் வைக்கப்பட்டிருந்தன. Stop Stop - Genocide, Shame Shame - Sri Lanka, Our Nation - Tamil Eelam, Cricket Cricket - Dont Hide Genocide என்ற கோசங்களும் எழுப்பப்பட்டன. அத்தோடு கிரிக்கெட் தொடர்பான கவனயீர்ப்பின் நோக்கம் மற்றும் தமிழர் இனவழிப்பு தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் கிரிக்கெற்றுக்கு வருகைதந்த ரசிகர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை 11-02-2021 அன்றும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்ற நிலையில் இன்றைய நிகழ்வும் பல ஆயிரக்கணக்கான கிரிக்கெற் ரசிகர்களின் கவனத்தை பெற்றதாக நடைபெற்றது. இது தொடர்பாக தமிழ் ஏதிலிகள் கழகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெப்ரவரி 11 வெள்ளி மற்றும் பெப்ரவரி 13 ஞாயிற்றுக்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக தமிழ் ஏதிலிகள் கழகம் போராட்டம் நடத்தவுள்ளது. 2009 இல் 100,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்ட போரின் போது வேண்டுமென்றே ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி இலங்கை அரசாங்கத்துடன் வலுவாக பிணைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இன்றும் ஈழத்தமிழர்களை கொலை, கடத்தல், சித்திரவதைகள், அத்துடன் தீவின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஈழத் தமிழர் தாயகப் பகுதிகளை இராணுவமயமாக்குவதன் மூலம் தொடர்ந்து துன்புறுத்துகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு நேரடியாகப் பொறுப்பான இலங்கை கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் அரசாங்க அமைச்சர்களாக உயர் பதவிகளை வகித்துள்ளனர். முன்னாள் கப்டன் சனத் ஜயசூரிய கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு சென்று எம்.பி.யாக தொடர்ந்து விளையாடினார். மற்றொரு முன்னாள் கப்டனான அர்ஜுன ரணதுங்க, 2009 படுகொலைகளை மேற்பார்வையிட்ட அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினராகவும், தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராகவும் உள்ளார். அணியின் முன்னாள் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டிஸ், 'கிரிக்கெட் வீரர்' என்று அழைக்கப்படுபவர், 2009 இல் இலங்கை இராணுவத்தில் இரண்டாவது லெப்டினன்ட் ஆவார். “சிறிலங்கா அரசாங்கம் ஈழத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை மறைக்க கிரிக்கெட்டைப் பயன்படுத்துகிறது என்று தமிழ் அகதிகள் பேரவை ஆழ்ந்த கோபத்தில் உள்ளது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் இனப்படுகொலையை கிரிக்கெட் மறைக்கக் கூடாது” என்று தமிழ் ஏதிலிகள் கழகத்தின் அரன் மயில்வாகனம் கூறுகின்றார். "இலங்கை அரசின் கொடுமைகளுக்கு ஆளான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களுக்கு எங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில் தமிழ் ஏதிலிகள் கழகத்தினால் கிரிக்கெட் அரங்கில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தும்" என்று அரன் மயில்வாகனம் தெரிவிக்கின்றார். - என்று உள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?