முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b883

புலம்பெயர் தமிழர்கள் என்றாலே சிறிலங்கா அரசுக்கு வகுத்தோட்டம்.
ஜெனிவாவில் கூட்டம் கூட முன் கூச்சல்யிடத் தொடங்கி விட்ட அரச கூலிக்கள்.வெளிநாடுகளில் வீணாக கூப்பாடு போட வேண்டாம் - புலம்பெயர் தமிழர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் விடுத்துள்ள அறிவுரை ஜெனிவாவில் காட்டமான அறிக்கை வெளிவந்தாலும் இலங்கையில் ஒன்றும் நடக்கப்போவதில்லை .தமிழ் மக்களை பாதுகாக்கும் உண்மையான நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு உள்ளது என்றால் அங்கிருந்து வெறுமனே கத்திக் கொண்டு இருக்காது இங்கு வாருங்கள் என அழைப்பு விடுத்துள்ளார் நீதி அமைச்சர் அலி சப்ரி. ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.அதில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு, ஈழம், தனிநாடு என்று பேசிப்பேசி இனியும் தமிழர்களை அழித்துவிட வேண்டாம். 30 ஆண்டுகால யுத்தத்தில் ஒரு பரம்பரையே அழிந்துபோய்விட்டது. ஜெனிவாவில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்க முடியும். அதனால் இங்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை. இவ்வளவு காலமும் இவ்வாறான அறிக்கைகள் வெளிவந்துகொண்டு தானே இருந்தன. இனியும் அறிக்கை வெளியிடப்படும். அது கடுமையாக இருக்கும் என்பதற்காக இங்கு எதுவுமே மாறப் போவதில்லை. மாறாக மக்கள் மத்தியில் வைராக்கியமும் கோபமும் அதிகரித்துக் கொண்டு அதில் சிலர் அரசியல் செய்து கொண்டிருக்க முடியுமே தவிர வேறு எதுவும் நடக்கப் போவதில்லை. எனவே இந்த பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். நல்லாட்சியில் செய்ய முடியாத பல விடயங்களை நாம் செய்துள்ளோம். விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பலர் விடுவிக்கப்பட்டனர். பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்துள்ளோம். சிங்கள மக்களின் ஆதரவுடன் ஆட்சியமைத்தபோதிலும் கூட இந்த விடயங்களை கருத்திற் கொண்டு செயற்படுகின்றோம். வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்கள் ஜெனிவாவை இலக்கு வைத்து கூப்பாடு போட்டுக் கொண்டிருக்க முடியும். ஆனால் இங்கு மக்களுக்கு சகல அடிப்படை வசதிகளையும் அரசாங்கமே செய்து கொடுக்கின்றது. மாறாக அங்கிருந்து கூச்சல் போடும் நபர்கள் அல்ல. சர்வதேச அமைப்புகள் மூலமாக இவர்கள் என்ன செய்தாலும் அதனால் இங்குள்ள தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காது. இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் இங்கிருந்து தான் பேச வேண்டும். தமிழ் மக்களை பாதுகாக்கும் உண்மையான நோக்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு உள்ளது என்றால் அங்கிருந்து வெறுமனே கத்திக் கொண்டு இருக்காது இங்கு வாருங்கள். தமிழர் பகுதிகளில் முதலீடுகளை செய்யுங்கள். வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுங்கள். தரமான பாடசாலைகளை உருவாக்கி இங்குள்ள தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?