முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b874

விடுதலை புலிகளுக்கு 42 கோடி மாற்ற முயற்சித்த பெண் விமான நிலையத்தில் அதிரடிக் கைது
விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு ரூ. 42 கோடியை மாற்ற சென்ற போது இலங்கை பெண் விமான நிலையத்தில் சிக்கியதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட் வைத்திருந்ததாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை நாட்டை சேர்ந்த லெட்சுமணன் மேரி பிரான்சிஸ்கோ(40) என்பவர் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளியாக இருந்த ஒரு இந்தியர், 3 இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள் தமிழக கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இலங்கை பெண் விடுதலை புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிதி திரட்டியது தெரியவந்தது. மேலும் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் சென்னை அண்ணா நகரில் தங்கி அந்த முகவரியை வைத்து ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு, இந்திய பாஸ்போர்ட் பெற்றதும் விசாரணையில் அம்பலமானது. தடைச்செய்யப்பட்ட இயக்கத்தினருடன் தொடர்பு இருப்பதால் டெல்லி என்ஐஏவுக்கு இந்த வழக்கானது மாற்றப்பட்டது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் நடத்திய விசாரணையில், போலி இந்திய பாஸ்போர்ட் மற்றும் பிற போலி ஆவணங்களுடன் பெங்களுரு வழியாக மும்பைக்கு இலங்கை பெண் செல்ல இருப்பது தெரியவந்தது. குறிப்பாக இங்கிலாந்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வங்கி கணக்கு ஒன்று மும்பையில் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்கில் இருந்து 42 கோடி ரூபாய் பணத்தை விடுதலை புலிகள் இயக்கத்தினருக்கு தொடர்புடைய வங்கி கணக்கிற்கு மாற்ற சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது. Kerala gold smuggling case: NIA to quizz Sivasankar again on Monday | India News – India TV குறிப்பாக மும்பையில் உள்ள வங்கி கணக்கு செயலிழந்து உள்ளதாக கூட்டாளிகள் தெரிவித்ததால், வங்கி கணக்கை ஆன்லைன் மூலமாக மாற்றுவதற்காக வங்கி கணக்கு வைத்திருந்த நபரின் பெயரில் போலியாக சிம் பெற்று மாற்ற முயன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் வங்கி கணக்கு வைத்திருப்போரின் வாரிசு போல போலி ஆவணங்களை தயார் செய்து பணத்தை எடுக்க, மும்பைக்கு சென்ற போது இலங்கை பெண் பிடிப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. வங்கியில் இருந்த பணத்தை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் இயக்கத்தினரின் ஆதவாளர்களின் வங்கி கணக்கிற்கு மாற்ற திட்டம் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மும்பையில் யார் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது எனவும், உலகம் முழுவதும் பரவி கிடக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தினர் குறித்த தகவலை பெற என்.ஐ.ஏ அதிகாரிகள் இலங்கை பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?