முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

TAMIL Eelam news 916

 ள்ளார்.யாழ் பொது நூலக எரிப்பு தமிழர்களின் மீது நடத்தப்பட்ட ஒரு கலாச்சார தாக்குதல் , 40 ஆண்டுகள் நிறைவு   ( 31/5/1981 இரவு எரிக்கப்பட்டு – 1/6/1981 மாலை ௭ரிந்து முடிந்தது . ) தென்னாசியாவில் இந்திய துணைக்கண்டத்துக்கு அருகேயுள்ள சுமார் 2500 வருடகால பழமையுள்ள தீவுத்தேசம் இலங்கை. கடந்த கால் நூற்றாண்டகளுக்கு மேலாக உள் நாட்டு போர் நடந்த பூமி இது. வடக்கே இருக்கும் தமிழரின் நகரான யாழ்பாணத்தின் ஒரு நெடிய போரின் மௌன சாட்சியான நூலகத்தின் கதை இது. ஈழத் தமிழரின் போராட்ட வரலாற்றில் கண்ணீர் துளிகளாலும், அடக்கவொண்ணா துக்கத்தாலும் எழுதப்பட வேண்டிய சம்பவம் ஒன்று இருக்குமானால் அது நிச்சயமாக யாழ் நூலக எரிப்பாகத்தான் இருக்கும். தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் ஆயுதப் போராட்டமாக ஆரம்பிப்பதற்கு முன்னரே, தமிழ் மக்கள் மீது இலங்கை அரசாங்கத்தால் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பதற்கு யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை சிறந்த உதாரணம் ஆகும். 1958 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், யாழ் நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்டைமை இளைஞர்களை கையில் ஆயுதம் ஏந்த தூண்டியது.

TAMIL Eelam news 915

 விட்டால் சீனா எல்லோரையும் அழித்து விடும்- அனைத்து நாடுகளும் ஒன்று கூடுங்கள் … சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து பல்வேறு நாடுகளும் அந்நாட்டின் மீது விசாரணையை மேற்கொள்ள விரும்பியது. எனினும் ஆஸ்திரேலியா சீனாவிடம் விசாரணை மேற்கொள்ள வற்புறுத்தி வந்தது. எனவே தற்போது வரை இல்லாத அளவிற்கு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.  வுகான் பரிசோதனை நிலையத்தில் என்ன நடந்தது என்று, அவுஸ்திரேலிய அரசு கேட்ட கேள்விக்கு சீனா இதுவரை எந்த ஒரு பதிலையும் கொடுக்கவில்லை.   இந்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமரான கெவின் ரட், உலகின் அனைத்து நாடுகளும் சேர்ந்து சீனாவிற்கு எதிராக நிற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, சீனாவின் பொருளாதாரத்திற்கும் புவிசார் வற்புறுத்தலிற்கும் அனைத்து நாடுகளும் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.  இல்லையென்றால், ஒரு நாள் நாம் அனைவரும் சீனாவுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை தோன்றும் என்று கூறியுள்ளார். இது இவ்வாறு இருக்க, சீனா மேலும் பல வைரசுகளை தயாரித்து உலகில் பரப்பி விட வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் மேலும் எச்சர

TAMIL Eelam news 914

 இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 43 பேர் கொரோனாவால் மரணம்! நாட்டில் நேற்றய தினம் மேலும் 2912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 43 பேர் கொரோணா தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய தொற்றுநோயியல் பிரிவு கூறியுள்ளது. இரண்டாயிரத்து 912 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள். இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 86ஆயிரத்து 364ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் மேலும் 43 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது.

TAMIL Eelam news 913

 விமான நிலையங்கள் நாளை முதல் திறக்கப்படும் ! நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் நாளை (ஜூன் 01) முதல் கொரோனா கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்படும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் அமைச்சர் D.V.சானக இதைதெரிவித்தார். அந்த வகையில் ஒரு விமானத்தில் வரக்கூடிய அதிகபட்ச பயணிகளின் எண்ணிக்கை 75ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை விமான நிலையங்கள் தொடர்ந்து மூடப்படுமா? அல்லது திறக்கப்பட உள்ளதா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரனதுங்க முன்னதாக தெரிவித்திருந்தார்.

TAMIL Eelam news 912

 இலங்கைப் பெண் ஒருவர் இத்தாலி நாட்டின் நடுவீதியில் கணவாரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்  இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வசித்து வந்த பெண் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக வீதியில் கணவாரால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலைசெய்யப்பட்ட பெண் 40 வயது மதிக்கத்தக்க இலங்கைப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரோம் நகரின் போர்ச்சுவென்ஸ் பகுதியில் கடந்த 29 ஆம் திகதி அந்த தமபதியினரி வாய் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாடு வீதியில் மனைவியை கணவர் கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் புனித காமிலோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றபோது கொலை செய்த கணவன் அங்கு கத்தியுடன் நின்றுள்ளார் அவரைப் பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.         

TAMIL Eelam news 911

 யாழில் 20 வயது இளைஞனுடன் ஓடிப்போன 38 வயது காதலி! நையப்புடைந்த இளைஞர்கள் 38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாருக்கும், 20 வயதான இளைஞனிற்கும் ஏற்பட்ட காதலால், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பெரும் களேபரம் ஏற்பட்டது. காதலர்கள் இருவரும், லொக் டவுனையும் பொருட்படுத்தாமல், செல்வச்சந்நிதி ஆலய சூழலில் லொள்ளுவிட வந்த சமயத்தில், உறவினர்களால் சுற்றிவளைக்கப்பட்டதில் களேபரம் ஏற்பட்டது. இறுதியில் வல்வெட்டித்துறை பொலிசாரே தலையிடும் அளவிற்கு, அந்த ஜோடி காதலில் உறுதியாக இருந்துள்ளது. காதல் ராணி வடமராட்சி துன்னாலையை சேர்ந்தவர். இரண்டு பிள்ளைகளின் தாய். அவரது கணவர் மேசன் தொழில் செய்து வருகிறார். மேசன் வேலையாக கொற்றாவத்தை, சமரபாகுவிற்கு சென்று தங்கியுள்ளார். சில நாட்கள் அங்கு தங்கியிருந்த போது, தனது மனைவியுடன் இரவில் உரையாடுவதற்கு, தன்னுடன் தொழில்புரிந்த 20 வயதான இளைஞன் ஒருவனின் தொலைபேசியை பாவித்துள்ளார். சில முறை மனைவியுடன் உரையாடிய அந்த அப்பாவி கணவன், அதன் பின் நடக்கவிருந்த விபரீதத்தை உணரவில்லை. தொலைபேசிக்கு சொந்தக்காரனான 20 வயது இளைஞனும், மேசன் தொழிலாளியின் 38 வயது மனைவிக்குமிடையில் தொலைபேசி அறிமுக

TAMIL Eelam news 910

  அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்   அவுஸ்திரேலியாவின் முன்னணி நிதி ஆய்வு ஊடகமான (Financial Review) பட்டியல்படுத்தியுள்ள இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் தமிழர் ஒருவர் இடம்பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மலேசியாவிலிருந்து 1970-களில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கட்டுமான துறையில் செல்வந்தராக திகழும் மகா சின்னத்தம்பி Financial Review பட்டியல்படுத்தியுள்ள அவுஸ்திரேலியாவின் செல்வந்தர்களின் பட்டியலில் 64 ஆவது நபராக இடம்பிடித்துள்ளார். Financial Review பட்டியல்படுத்தியுள்ள குறித்த நிதி ஆய்வு நிறுவனம் இருநூறு செல்வந்தர்களின் பட்டியலில் மகா சின்னத்தம்பி 64 ஆவது நபராக இடம்பெற்றுள்ளதுடன்,இவரின் சொத்துப்பெறுமதி 1.78 பில்லியன் டொலர்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது. 1980-களில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தனது பல்கலைக்கழக படிப்பை நிறைவு செய்துகொண்டு குயின்ஸ்லாந்துக்கு சென்ற மகா சின்னத்தம்பி, 2860 ஹெக்டயர் பரப்பளவுடைய மிகப்பெரிய காட்டு நிலமொன்றை இன்னொருவருடன் இணைந்து 72 லட்சம் டொலர்களுக்கு வாங்கி, அந்த நிலத்தை மக்கள் குடியேற்றத்துக்குர

TAMIL Eelam news 909

 Covid-19 இற்கான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள இன்றைய நிலையில் குயின்ஸ்லாந்து Griffith பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள antiviral drug பற்றிய செய்தி ஏன் பரபரப்பாகப் பேசப்படுகிறது? Covid 19 இற்கு எதிராக, Vaccine எனப்படும் தடுப்பு மருந்துகள் பல இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. நோயை ஏற்படுத்தும் வைரஸ்கள் நமது உடலினுள் புகுந்து நிலைகொள்வதைத்தடுக்கும் ஆற்றலை - அதாவது வைரஸ்களை எதிர்த்து நிற்கும் ஆற்றலை இந்த தடுப்புமருந்துகள் நமது உடலில் ஏற்படுத்துகின்றன. இதை immunity அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி என்று நாம் சொல்கிறோம். இந்த தடுப்புமருந்துகள் பயன்பாட்டுக்கு வராத ஒரு கால கட்டம் இருந்தது. இதனால் பலர் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ள முடியவில்லை. அதேபோல இப்போது தடுப்பு மருந்துகள் இருந்தபோதும் அது எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாக இல்லை; கிடைக்கக்கூடியதாக இருந்தால் கூட பலர் தடுப்புமருந்துகளைப் போட்டுக்கொள்ள முன்வருவதில்லை - என்ற பல்வேறுபட்ட சூழ்நிலைகள் இருக்கின்றன. ஒருவரது உடலுக்குள் வைரஸ்கள் புகுந்து நிலைகொண்டுவிட்டால் அந்த வைரஸை அழிக்கும் நோயெதிர்ப்புச்சக்தி ஒருவருக்கு இல்லாத நிலையில

TAMIL Eelam news 908

 சிறைவைக்கப்பட்டிருந்த பாரிய ஈரானிய கப்பல் விடுவிப்பு; திடீரென நடந்தது என்ன? ஈரான் நாட்டைச் சேர்ந்த எம்.டி.ஹாா்ஸ் என்ற கப்பல், கச்சா எண்ணெயை கள்ளச்சந்தையில் விற்பதற்கு கொண்டு சென்றதாக குற்றம் சாட்டி, அந்த கப்பலை கடந்த ஜனவரி 24 ஆம் தேதி இந்தோனேசிய அரச சிறைப்பிடித்தது. கப்பல்களுடன் சோத்து 36 ஈரானிய பணியாளா்களையும், 25 சீன பணியாளா்களையும் இந்தோனேசிய அரசு கைது செய்தது.   இந்தோனேசிய எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக அக்கப்பல்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடா்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இரு கப்பல்களின் மாலுமிகளுக்கும் ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நிபந்தனையுடன் இரு கப்பல்களையும் விடுவித்துள்ளதாக இந்தோனேசிய அரசு நேற்று(சனிக்கிழமை) தெரிவித்தது. முன்னதாக, கைது செய்யப்பட்ட தங்கள் நாட்டைச் சோந்த பணியாளா்களை முறையாக நடத்த வேண்டும் என்று சீன அரசு இந்தோனேசியாவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க அரசு ஈரான் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீதும் பொருளாதாரத்

TAMIL Eelam news 907

 பிக்குமார்களை சமாதானப்படுத்தி சீனா பிரச்சனையில் இருந்து தப்புவதற்காக முன்னாள் போராளியின் கைது! நடைபெற்றுள்ளது இதேபோன்று கைவேலியில் இருந்து காலை இளந்த முன்னாள் போராளி வினோ என்பவர் கைது செய்யப்பட்டதாக தவகவல் வந்ததை நாம் அறிந்தோம் அது தொடர்வாக அவரின் நண்பர்களிடம் கேட்ட போது அவரிற்கு இராணுவம் மாதம் 30000 ஆயிரம் படி 3 மாதம் சம்பளம் தருவதாகவும் சிங்கள மீடிக்களிற்கு புலிப்படையை உருவாக்கிய நான் என கூற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது  பின்னர் வினோ என்பவர் சிங்கள இராணுவத்தின் றக்கில் வந்து வீட்டில் இறங்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதுதான் சிங்களவர்களின் புத்தி தமிழர்கள் தெளிவாகயிருங்கள்யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக படையினரால் வெள்ளிக்கிழமை (28) விடுதலை புலிகளின் கடல் புலி உறுப்பினர் ஒருவர் 2 கிலோ வெடிபொருட்களுடன் கூடிய சக்திவாய்ந்த கிளைமோர் குண்டை யாழ்ப்பாண நாகர் கோவில் மீன்பிடி துறைமுகத்தில் புதைத்து வைக்கப்பட்டமைக்காக கைது செய்யப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. எனினும், உறவினர்கள் அதை மறுக்கிறார்கள். இராணுவ புலனாய்வுப் படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த இடத்தில் ஒரு சோதனை நடத்தப்பட

TAMIL Eelam news 906

 ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவான மூன்றாவது இலங்கையர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் துப்பாக்கி சுடுதல் போட்டிக்காக இலங்கை சார்பில் டெஹானி எகொடவெல கலந்து கொள்ளவுள்ளார். இம்முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது இலங்கை போட்டியாளர் இவர் ஆவர். இதற்கு முன்னர் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் தெரிவு செய்யப்ப

TAMIL Eelam news 905

 தமிழ் நாட்டைச் சேர்ந்த கீர்த்தி சேகர் என்பவர் ஒரே பால்லின திருமணத்தை அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்ணியில் இந்து முறைப்படி செய்துள்ளார். மேலும்  எல்லோரையும் போன்று தனது இரண்டு வயதில் இந்தியா இருந்து அவுஸ்திரேலியா வந்தவர்தான் கீர்த்தி சேர் தமிழகத்தில் அவர் பிறக்கும் போதே தனது இரண்டு வயதில் தனது தந்தையை இழந்தவர். பின்னர் தாய் மறுமணம் செய்தார் இருப்பினும் ஆண் பெண் என இரு சகோதரமே அவளிற்கு இருந்தது. தனது சகோதரம் குயின்ஸ்லாந்து இருந்து மெல்போன் சென்றமையால் நாங்கள் எல்லோரும் அங்கே சென்றோம். அங்கே கீர்த்தி மருத்துவப் படிப்பு முடிந்தவுடன் தனது வாழ்க்கை துணைக்காக வரன் தேடிக் கொண்டுயிருந்தார் இருப்பினும் எவ்விதமான முன் நேற்றமும் கிடைக்கவில்லை. சிறிது காலம் களித்து தான் ஒருதரை விரும்பியுள்ளதாகவும் ஆனால் அவர் ஆண் இல்லை பெண் என குறிப்பிட்டார் தனது தாய்யிடம். தான் அவர் சொன்னதைக் கேட்டு கோவம் அடையவில்லை எனது மகன் எனது இரண்டாவது கணவர் மற்றும் எனது உறவினர்களிடமும் ஆலோசனை கேட்டேன் ஒரு சிலர் இது எமது கலாச்சாரத்திற்கு முறனானது எனவும் ஒரு சிலர் 20 பேசன் உலகில் இப்படி நடப்பதாகக் குறிப்பிட்டனர். சம்மந்தபட்ட பெண்

TAMIL Eelam news 904

 அந்தரங்கமான’ ஃபோட்டோஸ் எடுத்து வச்சு மிரட்டுறாரு…! ‘முன்னாள் அமைச்சர் மீது…’ பரபரப்பை ஏற்படுத்திய ‘நாடோடிகள்’ பட நடிகை! அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தன்னை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டுவதாக நாடோடி பட நடிகை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பதவி வகித்து வந்தவர் மணிகண்டன். கடந்த சில வருடங்கள் முன்பு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர். அதன்மூலம் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மணிகண்டன் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது இந்நிலையில் தற்போது நாடோடிகள் படத்தில் அறிமுகமான நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடன் பல ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றுவதாக புகார் அளித்துள்ளார் அந்த புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதலில் அமைச்சர் என்னை பாலியல் வன்புணர்ச்சி செய்தார். அதன்பின் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் நெருங்கி பழகினார். நாங்கள் பழகி 5 ஆண்டுகள் நிறைவடைந்தத நிலையிலும், திருமணம் செய்யாமல் ஏமாற்றி வருகிறார். அதோடு நாங்கள் தனியே இருந்தபோ

TAMIL Eelam news 903

 இலங்கையில் மேலும் 38 கொவிட் மரணங்கள் பதிவு இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்று இதுவரையில் 2,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news 902

 சவேந்திர சில்வாவை தடை செய்ய பிரித்தானிய தொழில்கட்சி அதிரடி நடவடிக்கை சிறிலங்காவின் இராணுவத்தளபதியும் யுத்தக்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவருமான ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக பிரித்தானிய அரசு, தனது உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகார சபையின் (Global Sanction Regime) கீழ், பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பிரித்தானிய தொழில் கட்சி சார்பில், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரித்தானியாவின் நிழல் அமைச்சரான மதிப்பிற்குரிய ஸ் ரீபன் கினொக் அவர்கள் (Rt. Hon. Stephen Kinnoc MP) கோரிக்கை விடுத்துள்ளார். தென்னாசிய மற்றறும் பொதுநலவாய நாடுகளிற்கான அமைச்சரான மதிப்பிற்குரிய தாரிக் அஹமட் பிரபு (The Lord Ahamed of Wimbledon) அவர்களுக்கு இன்றய தினம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த கடிதத்தில் கடந்த ஏப்பரல் மாதம் ஜஸ்மின் சூக்கா தலைமையிலான ITJP இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்த 50 பக்க குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்புட்டுள்ள விடயங்களை மேற்கோள்காட்டி

TAMIL Eelam news 901

 இனவாதத்தை இடைநிறுத்தி நாட்டை தாருங்கள். முன்னேறிய நாடாக திருப்பி தருகிறோம்-மனோ கணேசன்    இந்த நாட்டில், சிங்கள-பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்து பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாக திருப்பி தருகிறோம் என  தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார். தனது டுவீடர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ எம்பி இதுபற்றி மேலும் கூரியுள்ளதாவது,    உங்கள் நண்பர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு கூட நீங்கள் பிரதமர் பதவியை தர மறுத்தீர்கள். ஜேவிபி மட்டுமே அவருக்கு பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது. இலங்கை, இயற்கை வளமில்லாத வள-ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் த

TAMIL Eelam news 900

 பயணத்தடை அமுலிலுள்ள போதும், யாழில் சிறிலங்கா புல நாங்கள் அட்டகாசம் வீதியில் சென்ற இளைஞன் மீது வாள்வெட்டு!   நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலிலுள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை, மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று(27) நண்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதில் கையில் காயமடைந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

TAMIL Eelam news 899

 50 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு AstraZeneca தடுப்பூசி வழங்கப்பட்டுவரும் நிலையில் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு Pfizer தடுப்பூசியே சிறந்தது என பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அறிமுகமாகும் கொரோனாவுக்கான Moderna தடுப்பூசி பிற தடுப்பூசிகளைவிட வித்தியாசமானதா? அத்துடன் 50 வயதுக்கு குறைந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலேயே Pfizer தடுப்பூசி வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை முதல் 40-49 வயதுக்குட்பட்ட எவரும் முன்னுரிமை அடிப்படையில் அல்லாமல் சாதாரணமாகவே Pfizer தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடியுமென விக்டோரிய அரசு அறிவித்துள்ளது. Pfizer தடுப்பூசி விக்டோரியாவின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கையிருப்பில் இல்லை என்பதால் இதனைப் போட்டுக்கொள்ள விரும்பும் 40-49 வயதுக்குட்பட்டவர்கள் 1800 675 398 என்ற இலக்கத்தை அழைத்து முன்பதிவு செய்வது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் AstraZeneca தடுப்பூசியை தொடர்ந்தும் தடுப்பூசி வழங்கும் மையங்கள் ஊடாகவும் இத்திட்டத்தில் பங்கேற்கும் மருத்துவ மையங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். விக்டோரியாவிலுள்ள பல தடுப்பூசி மையங்கள் முன்

TAMIL Eelam news 898

 இலங்கைக்குள் ஊடுருவியுள்ள 3 நபர்கள்- அமெரிக்க பெண்டகன் விடுக்கும் சிவப்பு எச்சரிக்கை ! அமெரிக்காவால் பிடிக்க முடியாத, மேலும் கண்கானிப்பில் உள்ள முக்கிய தீவிரவாதிகளின் நண்பர்கள் சிலர் இலங்கை சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் இவர்கள் இந்தியா சென்று பின்னர் அங்கிருந்து இலங்கை சென்றுள்ளதாக அமெரிக்க பெண்டகன் மற்றும் CIA நிறுவனங்கள் நம்புகிறது. இதனை அடுத்து அமெரிக்க அரசுக்கு வழங்கப்பட்ட ஒரு ரகசிய தகவலை மையமாக கொண்டு. அமெரிக்க அரசு இலங்கையில் உள்ள தனது அமெரிக்க தூதுவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக அறியப்படுகிறது.   இலங்கையில் சில வேளைகளில் தாக்குதல் நடத்தப்பட கூடும் என்றும். இதனால் அமெரிக்க தூதுவர்கள் வெளியே செல்வது நல்லது அல்ல என்ற தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை மிகவும் சூசகமாக கையாண்டுள்ள அமெரிக்க அரசு. தனது குடி மக்களை கொரோனாவைச் சாட்டி எச்சரித்துள்ளதே தவிர. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக குடி மக்களுக்கு எந்த ஒரு எச்சரிக்கையையும் அமெரிக்கா விடுக்கவில்லை. அமெரிக்கா கண்காணித்து வரும் சில முஸ்லீம் பயங்கரவாதிகளின் , நண்பர்கள் எவ்வாறு இந்தியா சென்று ஊடுருவினார்கள் என்பத

TAMIL Eelam news 897

 பைடனின் உத்தரவால் சிக்கலில் சீனா? கொரோனா தொற்று பரவலின் தோற்றுவாய் குறித்த விசாரணைகள் அரசியல் மயப்படுத்தப்படும் பட்சத்தில் அது கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளை பாதிக்கும் என சீனா தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றானது எவ்வாறு எங்கு தோற்றம் பெற்றது என்பது குறித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கையிடுமாறு அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களுக்கு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அமெரிக்காவில் உள்ள சீனத் தூதரகம் இதனைக் கூறியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்றின் தோற்றுவாய் குறித்து உலக சுகாதார ஸ்தாபனமும் தனது இரண்டாம் கட்ட ஆய்வுகளை ஆரம்பிப்பதற்கு தயாராகியுள்ளது. இந்த நிலையில் சீனாவின் ஆய்வுகூடத்தில் இருந்து இந்த வைரஸ் தொற்று பரவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணையாளர்களுக்கு மேலதிக அணுகலை உறுதிப்படுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு சீனா உள்ளாகியுள்ளது.

TAMIL Eelam news 896

 இது கதையல்ல நிஜம்: நான் சாகலாம் நாங்கள் சாகக் கூடாது… வன்னிக்களத்தில் கடைசியாக நிகழ்ந்தவை…ஒரு போராளியின் சாட்சியம் ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது. போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது. தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது. சிறிய பகுதிக்குள் மக்கள் அனைவரும் குவிந்திருந்தமையால் இழப்புக்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உணவு, குடிநீர், மருத்துவம் கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. சிங்களத்தின் படைகளின் எண்ணிக்கையும், உலக நாடுகளின் பலத்த ஆதரவும், எதிரியின் புதுத் தொழில்நுட்பமும் எமக்குப் பாதகமாக அமைந்து,

TAMIL Eelam news 895

 ஆயிரத்து 300 ஐ நெருங்கியது இலங்கையின் கொவிட் பலி இலங்கையில் மேலும் 29 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,298 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்றைய தினம் 2,325 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

TAMIL Eelam news 894

 நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ள அறைகூவல் தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்தியசக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயக மக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். கடந்த மே 22,23ஆம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, 'சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய் நீதியிலான பிரிந்து செல்லலும்' , 'இந்தியப் பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்', 'தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்' ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர்பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன. இதில் ஈழத்தில் சீனாவின் காலப்பதிப்பு பற்றியும், ஸ்ரீலங்காவில் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்துப்பட்டிருந்தது. தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வல

TAMIL Eelam news 893

 யாழில் 6 வயது சிறுவன் பரிதாபகரமாக பலி யாழ் போதனா வைத்தியசாலையில் திடீர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். உடுபிட்டி நாவலடியைச் சேர்ந்த பஜிதரன் சப்திகன் (வயது-6) என்ற உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த மூன்று நாட்களாக சிறுவனுக்கு காய்ச்சலுடன் கடும் உடல் சோர்வு ஏற்பட்டதால் நேற்று இரவு 9.30 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு காய்ச்சலே காரணம் என மருத்துவக் குறிப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பரிசோதனைக்கு பின்னர் சிறுவனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் சிறுவனின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

TAMIL Eelam news 892

 வௌிநாட்டு பயணிகள் நாட்டிற்கு வருவதற்கான தடை நீக்கம் வௌிநாட்டு   பயணிகளுக்காக தற்போது மூடப்பட்டுள்ள இலங்கை சர்வதேச விமான நிலையங்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 1 முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபாலி தர்மதாச அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் கடந்த 14 தினங்களுக்குள் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த பயணிகளை அனுமதிப்பது தொடர்பான கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

TAMIL Eelam news 891

 கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்கனுமா? சாப்பிட்டு குப்பையில் வீசும் இந்த கொட்டை போதும்! கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோர் பண்டைய கால உணவு முறைக்கு மாறி வரும்கின்றனர்.   நாம் இழந்த உணவுகளை மீட்டெடுக்க இது மிகச் சிறந்த காலம். பலாப்பழ கொட்டைகளை கொண்டு ருசியான உணவு வகைகளை செய்யலாம். இதில் துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இதனால் உங்கள் திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது என கூறியுள்ளார். இதன் நன்மைகள் குறித்து அவர் கூறிய தகவல்களை நாம் இங்கு தெரிந்து கொள்வோம். செரிமானத்தை மேம்படுத்தவும் பலாப்பழ கொட்டைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. நிபுணர்களின் கூற்றுப்படி, பலாப்பழ விதைகள் மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கும் என அறியப்படுகிறது. எனவே பலாப்பழ கொட்டைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி வயிற்றுப்போக்கு பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும். பார்வை திறன் அதிகரிக்கும்  பலாப்பழ கொட்டைகளில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது, இது பார்வை திறனை அதிகர

TAMIL Eelam news 890

 இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை! - அமெரிக்கா இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த திங்களன்று தமது நாட்டவர்களுக்காக இலங்கைக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை வெளியிட்டது. அதில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவிட் காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம். அத்துடன் தீவிரவாதம் காரணமாக இலங்கையில் அதிக எச்சரிக்கை உள்ளது என்று அந்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ள இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், நாட்டில் நிலவும் கோவிட் நிலைமை தொடர்பிலேயே இலங்கைக்கான பயண ஆலோசனை நிலை 3 இல் இருந்து நிலை 4 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளது. இதனை தவிர ஏற்கனவே உள்ள தீவிரவாத அச்சுறுத்தல் மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று தூதரகம் தெரிவித்துள்ளது. கோவிட் காரணமாக இலங்கைக்கான 4ம் நிலை பயண சுகாதார அறிவிப்பை அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டிர

TAMIL Eelem news 889

 கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் கப்பல்! வெளியாகியுள்ள புதிய தகவல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் தீப்பற்றி எரியும் எம்.வி எக்ஸ்பிரஸ் கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த மேற்கொள்ளப்பட்ட திட்டம் தற்போதைக்கு சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவரும் வரை கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த முடியாது என இலங்கை கடற்படை அறிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடற்படை பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) அடங்கிய அதிகாரிகள், கப்பலை 50 கடல் மைல் தூரத்திற்கு கொண்டு செல்வதற்கு திட்டமிட்டிருந்தனர். எனினும், தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், கப்பலை ஆழ்கடலுக்கு நகர்த்த முடியாது என கடற்படை பேச்சாளர் இந்திகா டி சில்வா தெரிவித்துள்ளார். கப்பலில் ஏற்பட்டுள்ள தீப்பரவலை கட்டுக்குள் கொண்டு வர கூட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் உதவியும் கோரப்பட்டுள்ளது. இந்திய கடலோர காவல்படையின் கப்பல்களான வைபவ், வஜ்ரா மற்றும் சமுத்ரா பிரேஹரி அத்து

TAMIL Eelam news 888

 ஈழத் தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தொடரை தடை செய்க - தமிழக அமைச்சர் அவசர கடிதம் சென்னை அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் ஒளிபரப்பாக உள்ள, 'தி பேமிலி மேன் - 2' தொடரை தடை செய்யும்படி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தி பேமிலி மேன் - 2' என்ற, ஹிந்தி தொடரின் முன்னோட்டம், ஈழத் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும், இழிவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. தமிழ் பண்பாட்டை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகளைக் கொண்ட தொடரை, எந்த வகையிலும் ஒளிபரப்புக்கு ஏற்ற மதிப்புகளை கொண்டது எனக் கருத முடியாது. இதுபோன்ற விஷமத்தனமான பரப்புரையை, யாராலும் சகித்துக் கொள்ள முடியாது. இந்த தொடரின் முன்னோட்டம், ஏற்கனவே தமிழகத்தில் வாழும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இடையே, பெரும் எதிர்ப்பை உண்டாக்கி உள்ளது. இத்தொடரானது, ஈழத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்லாது,

TAMIL Eelam news 887

 ராஜிவ்காந்தியின் சுயவாக்குமூலம்…! மது அறிவுசீவிகள், சாய்வுநாற்காலி சிரஞ்சீவிகள் எல்லோரும்… ராஜிவ் அப்போது கொண்டுவந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் இந்த அழிவு வந்திருக்காது அது இது என்று….! இந்த தோல்விக்கான காரணங்களை கண்டுபிடித்து பதிவதில் தமது மேலான பெயர்களும் வரலாற்றில் இருந்துவிட வேணுமென்ற பெரும் எத்தனத்தில் அவரவர் தத்தமது நிறைகளுக்கேற்ற தராசுகளில் இவற்றை எடைபோட்டு காரணங்களை எழுதி குவிக்கிறார்கள். பல்லாயிரம் காரணங்கள்.. மாட்டுக்கறி சாப்பிட்டதால்தான் தோற்றார்கள் என்பது முதல் பூகோளஅரசியல் வகுப்புகள் வரை இந்த காரணங்கள் நீளுகின்றன. எல்லா காரணங்களிலும் ஒரு காரணம் அதிகமாக சொல்லப்பட்டு இருக்கும். அதுதான் ராஜிவ் கொண்டுவந்த ஒப்பந்தத்தை ஏற்றிருந்தால் இந்த அழிவு ஏற்பட்டிருக்காது.. இந்தியதேசத்தின் உள்நாட்டுஅமைச்சர், நிதிஅமைச்சர் போன்ற பெரும் பொறுப்புகளில் இருந்த ப.சிதம்பரம் முதல் புலிக்காய்ச்சல் புனைவு எழுத்தாளர்வரை கொட்டித்தீர்க்கும் காரணம் இதுவே. ஏதோ ராஜிவ்காந்தி கொண்டுவந்த ஒப்பந்தம் தமிழர்களுக்கு எல்லாவித நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்று என்பதுபோல இவர்கள் கதைப்பதற்கு அதே ராஜிவ்காந்தியின் ஒ

TAMIL Eelam news 886

 இலங்கைக்கு செல்ல வேண்டாம்! அமெரிக்க மக்களுக்கு அறிவிப்பு இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் இலங்கைக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.  அதில் தற்போதைய நிலையை கவனத்திற்கொண்டு 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் இலங்கையை அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது. இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இலங்கையை ஆபத்தான நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news 885

 இலங்கையில் மேலும் 33 பேரை பலியெடுத்த கொரோனா இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் 33 பேரால் அதிகரித்துள்ளது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,243ஆக அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சு இதை உறுதிப்படுத்தியுள்ளது. இதேவேளை நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,970 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

TAMIL Eelam news 884

 நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும்- ரணில் விக்கிரமசிங்க கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், தொற்றால் மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துச் செல்கின்றது. எனவே, நாட்டை அரசு முழுமையாக உடன் முடக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான  ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்னர் நாட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு அரசு முன்வர வேண்டும் எனவும் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “நாட்டில் ஒவ்வொரு பகுதிகளாக முடக்குவதால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை நாம் இப்போது உணர்கின்றோம். எனவே, நாட்டை முழுமையாக முடக்கி, தேவையான மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். ஜனாதிபதியும் அமைச்சரவையும் அரசமைப்பால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி கொரோனா நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தத் தேவையான திட்டங்களை எடுக்க வேண்டும். அரசு தொடர்ந்து நாட்டு மக்களுக்குத்

TAMIL Eelam news 883

 விடுதலைப்புலிகளை இழிவுபடுத்தி வெளியிடவுள்ள தொடர் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவுபடுத்தி வெளியிடவுள்ள தி பேமிலி மேன்-2 வெப் தொடரை தயாரித்து வெளியிடும் அமேஷான் பிரேம் நிறுவனத்திற்கு தமிழர் நலப் பேரியக்கத்தின் தலைவர் மு.களஞ்சியம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழீழ மண்ணின் விடுதலைக்குப் போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பை இழிவு செய்து , தி பேமிலி மேன் 2 என்கிற வெப் சீரியல் ஜூன் நான்கில் அமேசான் பிரேமில் வெளியாக உள்ளது. இந்த தொடரின் இயக்குநரும், தயாரிப்பாளர்கள் ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டி. கே.ஆகியோர் ராஜபக்சவின் பினாமிகள். ஆகவே திட்டமிட்டே விடுதலைப் புலிகளை ஒரு தீவிரவாத அமைப்பு என்று நிறுவ முயலுகின்றார்கள். இதற்கு முன் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்ச பெரும் தொகை கொடுத்து இந்தி திரைப்பட நாயகன் மலையாளி ஜான் ஆப்ரஹாம் மூலமாக “மெட்ராஸ் கபே” என்று ஒரு படமெடுத்து புலிகளையும் அதன் தலைமையையும் இழிவு செய்தான். அதை அறிந்து தமிழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.மும்பை உயர்நீதி மன்றத்தில் எமது “தமிழர் நலப் பேரியக்கம்” வழக்குத்

TAMIL Eelam news 882

 தொப்புள் தெரிய புகைப்படம் வெளியிட்ட ராட்சசன் பட நட்சத்திரம்.. குழந்தை பொண்ணு செய்ற வேலையா இது! ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா. அந்தப்படத்தில் பள்ளியில் படிக்கும் ரவீனா தாஹாவ்விடம் ஆசிரியர் ஒருவர் கையில் கில்லி தகாத முறையில் நடந்து கொள்வார். அந்த காட்சி மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார் ரவீனா தாஹா. அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.   இந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானதால் தற்போது பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெற்றி அடைந்துவிட்டால் தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா. தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது அதேபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் விரைவில் பெரிய