இரண்டாம் கல்யாணம் எப்போது எனக் கேட்டு ரசிகர்.?
வீடியோ வெளியிட்டு உறுதி செய்த
விஜய் டிவியின் செல்லப் பிள்ளையாக இருப்பவர் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றன. காபி வித் டிடி, அன்புடன் டி டி மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென ஒரு பெரிய சின்னத்திரை ரசிகர் வட்டாரத்தை உருவாக்கினார்.
இவரது முதல் திருமணம் நிலைக்கவில்லை. திருமணம் நடந்த வேகத்திலேயே விவாகரத்தும் ஆகி விட்டது. அதன் பின்னர் DD தனிமரமாகவே வாழ்ந்து வந்தார். இன் நிலையில் ரசிகர் ஒருவர், உங்களுக்கு 2ம் காதலில் நம்பிக்கை உள்ளதா என்று கேள்வி கேட்டு ஒரு வீடியோவை வெளியிட. அதற்கு பதில் தரும் வகையில் DD ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் தனக்கு 2ம் காதலில் நம்பிக்கை உண்டு என்றும், அது விரைவில் நடக்கலாம் என்பது போலவும் பேசி இருந்தார். ஆனால் திடீரென அந்த வீடியோவை DD அகற்றி விட்டார். ஏன் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
வீடியோவின் ஸ்கீர் ஷாட் மட்டுமே எங்களிடம் தற்போது உள்ளது.
கருத்துகள்