முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news 862

சாகும்வரை அட்சியில் இருப்பதற்கான திட்டத்தை தற்பொழுதே போட வெட்டுள்ளார் ஸ்டாலின்



தனது ஆட்சியில் 7 ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய ஸ்டாலின் ஏற்பாடு- ஜனாதிபதிக்கு கடிதம் !

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

 

இது தொடர்பாகத் தமிழக சட்டசபையிலும் கடந்த 2018இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்மானத்தை ஏற்றுப் பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து குடியரசுத் தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சரவை தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் ஏற்று 7 பேரை விடுதலை செய்ய அதில் கோரப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் எம்.பி டி.ஆர் பாலு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அலுவலகத்தில் அளித்தார்.


இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.


அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் அவர்களுக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று குடியரசுத் தலைவருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகத் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அந்த கடிதத்தில் ஸ்டாலின், “மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து – ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் ” என்று வலியுறுத்தியுள்ளார்.



கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?