முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அனைவரையும் வரவேற்கின்றோம்.

c 493 இலங்கை விமான நிலையங்கள்திடுக்கிடும் தகவல்

31 ஆம் திகதியுடன் மூடப்படுகின்றதா இலங்கை விமான நிலையங்கள் நாட்டில் நிலவும் எரிபொருள் பிரச்சினை காரணமாக தற்போது விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இம்மாதம் 31ஆம் திகதி வரை மாத்திரமே விமானங்களுக்கான எரிபொருள் இருப்பதாக விமான நிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேசமயம் சில விமானங்கள் சென்னைக்கு சென்று அங்கு எரிபொருளை பெற்று போக்குவரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது குறித்து விமான நிலையம் உத்தியோக பூர்வமாக எவ்வித அறிவித்தலையும் விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய இடுகைகள்

c 492 அகதிகளை அனுப்புவது சிறிலங்கா புலநாய்வாளர்கள் உறுதிப்படுத்திய மக்கள

அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோத நுழைவு - இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலை அவுஸ்திரேலியாவின் கடல் எல்லைப் பகுதியில் தேர்தல் தினமான கடந்த சனிக்கிழமை பிரவேசித்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் மீண்டும் இலங்கைக்கு திரும்பி அனுப்பட்டுள்ளனர். இதேவேளை இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய கப்பல் நாட்டிற்கு அண்மித்த கடல் பரப்பில் பிரவேசித்தமை தொடர்பில் அவுஸ்திரேலிய அரசாங்கம் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் வாக்களிப்புக்கு மத்தியில் படகு எவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு மிக அருகில் வந்தது என்பது குறித்தும் கப்பல் பிரவேசித்தமை தொடர்பான தகவல் வெளியிடப்பட்ட நேரம் குறித்தும் மீளாய்வுகள் இடம்பெறும் என அவுஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சியின் மூத்த தலைவர்களை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெறால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கிறிஸ்மஸ் தீவின் மேற்கு கரையோரத்தில் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்ட படகில் இலங்கையைச் சேர்ந்த 15 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவுக்குள் சட்ட விரோத நுழைவு - இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நில

c491 அமெரிக்காவில்,18 குழந்தைகள்கொலை நடந்து என்ன?

டெக்சாஸ் துப்பாக்கி சூடு: 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் டெக்சாஸ் துப்பாக்கி சூடு அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நடந்தது என்ன? என்ன நடந்தது அமெரிக்காவில், தெற்கு டெக்சாஸின் யுவால்டே நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 18 வயது துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். பின் இவர், காவல்துறையால் கொல்லப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் கைத்துப்பாக்கி ஒன்றையும் AR-15 ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டின் தொடக்கத்தில் வாலிபர் தனது பாட்டியை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அவர் அப்பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவராக இருக்கலாம் என்றும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில், 18 குழந்தைகள், ஓர் ஆசிரியர் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். கொல்லப்பட்ட ஆசிரியையின் பெயர் ஈவா மி

c 490 இலங்கை தமிழர்களை இலக்குவைப்பவர்கள்யார் ?

கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட அரவின் சபேசன்: ஓடும் காரில் இருந்த அரவின்னை சுட்டுக் கொன்றவர்கள் யார் ? கனடாவின் டியூரஹாம், நகரில் இந்த வருடத்தில் நடக்கும் 6வது கொலை இது. அதுவும் ஒரு ஈழத் தமிழர் இளைஞர் சுடப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. கடந்த வியாழன்(19) அன்று, சாலையில் ஒரு ஹொண்டா காரில் பயணித்துக் கொண்டு இருந்துள்ளார் 20 வயது நிரம்பிய அரவின். பிக்கரிங் என்னும் இடத்தில் உள்ள, Taunton Road சாலை வழியாக அவர் சரியாக 11.30 காரை ஓட்டிச் சென்றுள்ளார். திடீரென அவரது கார் பாதையை விட்டு விலகி இடிபட்டு நின்றுவிட்டது. முதலில் இதனை அவதானித்த மக்கள், இது ஒரு விபத்து என்று நினைத்து பொலிசாரை அழைத்துள்ளார்கள். அங்கே வந்த பொலிசாருக்கு முதலில் புரியவில்லை. பின்னரே அரவின் உடலில் உள்ள துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் பற்றி அம்புலன்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனவே அரவின் காரை ஓட்டிச் செல்லும் வேளையில், எதிர் திசையில், அல்லது அவருக்கு அருகில் வந்து யாரோ துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக… பொலிசார் நம்புகிறார்கள். இதனால் குறித்த சாலையில்(Taunton Road) காலை 11.30 தொடக்கம்

c 489 இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை

இலங்கையில் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும், எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும் இன்று முதல் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்கப்படுத்தப்படவுள்ளது. நிறுவனத் தலைவரின் வழிகாட்டுதலின் பேரில் இன்று முதல் பொதுத்துறை பணியாளர்கள் பணிபுரிய அழைக்கப்படுவார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிபொருள் நெருக்கடியை நிர்வகிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தியாவசியமற்ற ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்குமாறு அரச நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

c 498 உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை நோய்

உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குரங்கு அம்மை தொற்று உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது. இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இந்த வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குரங்கு அம்மை தொற்றுக்கு எதிரான தடுப்பூசி இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பேராசிரியரான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை தொற்று! இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை நோய் பாதுகாப்பு இந்த வைரஸின் தற்போதைய மாறுபாடு தீவிரமற்ற மாறுபாடாகும் என பேராசிரியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கான தற்போதைய சுகாதார நடவடிக்கைகள் குரங்கு அம்மை தொற்றிலிருந்தும் பாதுகாப்பதற்கான முக்கியமான நடைமுறையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்குள் நுழைகிறதா குரங்கு காய்ச்சல்? தற்போது பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தொற்று நோய் தொடர்பில் இலங்கை வைத்தியசாலை அமைப்பு மற்றும்

c 497 பெட்ரோல்இல்லை பச்சிளம் குழந்தை பலி

இலங்கை பொருளாதார நெருக்கடி: பெட்ரோல் தேட ஏற்பட்ட தாமதத்தால் பச்சிளம் குழந்தை பலி ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையின் பொருளாதார நெருக்கடி, தற்போது உயிரை காவுகொள்ளும் அளவிற்கு உக்கிரமடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு வரிசைகளில் காத்திருந்த சில வயோதிகர்கள் கடந்த காலங்களில் உயிரிழந்திருந்தனர். பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பகுதியில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவொன்று நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துள்ளது. சிசுவிற்கு ஏற்பட்ட திடீர் சுகவீனத்தை அடுத்து, குறித்த சிசுவை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சித்துள்ளனர். இரண்டு நாட்களேயான அந்த சிசு, தாய் பால் குடிப்பதை தவிர்த்தமையினால், சிசுவின் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், குறித்த சிசுவை மருத்துவமனையில் அனுமதிக்க பெற்றோர் முயற்சி செய்துள்ளனர். எனினும், உரிய நேரத்தில் சிசுவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இலங்கை போராட்டம் முச்சக்கரவண்டிக்கு (ஆட்டோ) பெட்ரோல் இல்லாத காரணத்தால் சிசுவை அழைத்து செல்ல முடியாத நிலைக்கு பெற்றோர் தள்ளப்பட்டுள்