முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

f 906 கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி

 

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி | Kokkuthoduvai Human Burial Excavation Un Officer
 By Laksi 11 minutes ago

ஐக்கிய நாடுகள்(UN) சபையின் மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன் முல்லைத்தீவுக்கான (Mullaitivu) விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையில், கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு இடத்திற்கு நேற்று (9) பிற்பகல் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது,  லூடியானா செல்றீன் அகிலன் , முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆகியோரிடம் குறித்த புதைகுழி விவகாரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே அரச உத்தியோகத்தர்கள்: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு

மனிதப்புதைகுழி 

இதற்கு முன்னர் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் 29ஆம் திகதியன்று, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினைப் பொருத்துவதற்காக, கனரக இயந்திரத்தின் மூலம் நிலத்தினை அகழ்ந்தபோது மனிதப் புதைகுழியொன்று இனங்காணப்பட்டிருந்தது.

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐநா பிரதிநிதி | Kokkuthoduvai Human Burial Excavation Un Officer

இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல் துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் இவ்வாறு இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழி இரண்டு கட்டங்களாக அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு இருகட்டங்களாக இடம்பெற்ற அகழ்வாய்வுகளின்படி இதுவரையில் குறித்த மனிதப்புதைகுழியிலிருந்து 40மனித எலும்புக்கூட்டு தொகுதிகளும், தமீழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு போராளிகள் பயன்படுத்தும் இலக்கத்தகடுகள், துப்பாக்கிச் சன்னங்கள், உடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

சம்பள முரண்பாடு விவகாரம்: ரணிலை குற்றஞ்சாட்டும் ஆசிரியர் சங்கம்

நிதி ஒதுக்கீடுகள்

அத்தோடு இரண்டாங்கட்ட அகழ்வாய்வு பணிகளின்போது குறித்த மனிதப் புதைகுழி வளாகம் விசேட ஸ்கேன் கருவிமூலம் ஆய்வு செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஸ்கேன் கருவி ஆய்வின்மூலம் முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதானவீதியின் கீழ்ப்பகுதியிலும் மேலும்பல மனித எச்சங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டிருந்தது.


இந்தநிலையில் , குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்விற்கென ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் முடிவுற்றதால் அகழ்வாய்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகளுக்கான நிதிஒதுக்கீடுகள் மீளவும் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் கடந்த (04.07.2024) அன்று ஆரம்ப கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்: நாடாளுமன்றில் கஜேந்திரன் எம்.பி விடுத்த கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?