தமிழர்களின் உரிமைக்காக பாரிய போராட்டம் - கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு தமிழ் மக்களின் உரிமைகள் மீறப்படுதல் மற்றும் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவதுக்கெதிராக பாரிய போராட்டங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடலொன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கவுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா அரங்கத்தில், நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் பங்களிப்போடு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயம் அழிக்கப்பட்டது தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் தமிழின அடையாளங்கள் அழிக்கப்படுவது தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலின் போது விவாவதிக்கப்படவுள்ளது. பகிரங்க அழைப்பு tna protest jaffna மேலும், இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள், தொழிற்சங்கங்கள், மத அமைப்புகள், மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது
துரோகி எங்கும் எதிலும் இருப்பான் விழிப்பாக இரு. கீழே உள்ள b 10 இலக்கத்தை இடப்பக்க மேல் மூலையில் எழுதி தேடும் இடத்தில் கிளிக் பண்ணினால் நீங்கள் விரும்பிய அனைத்தையும் பார்க முடியும். (பிரிகேடியர் / கேணல்b10.)( (b21 லெப் கேணல்))(. மேஜர் b12 )(கப்டன் b13 )(2ம் லெப்டினன்ட் b14) வீரவேங்கைb15)( b16 உதவி யாழர்) தலைவர் ஏனைய படம்b17)(லெப்டின்ட்b19)