முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 633கெட்ட நடத்தையால் பிறந்த குழந்தையை தாய் பாசத்தால் கொல்ல விரும்பவில்லை?

ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற தாய் வாக்குமூலம்!
ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்து அப்படி விட்டுக் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் கழிவறையில் கூடையொன்றில் இருந்து குறித்த சிசு கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயிலின் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற தாய் வாக்குமூலம்! | The Mother Who Left Baby Toilet Train Confessed நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த மீனகய ரயிலில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் ரயில் அதிகாரிகளும் கண்டுபிடித்துள்ளனர். பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில் கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சந்தேகநபர் தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளது. இதன்போது பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?