முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 659 தமிழீழப்பகுதியில் தொடரும் வறுமக்கொலைகள் பின்னால் கொலைக்கும்பல் யார் இவர்கள்?

தமிழர் பகுதியில் ஒரே நாளில் பதிவாகிய மூன்று மரணம்
வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரிக்குட்டியூர் பகுதியில் ஒரே நாளில் மூவர் மரணமடைந்துள்ளதுடன் நஞ்சு அருந்திய இளம் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாரிக்குட்டியூர் படிவம் 4 பகுதியில் தவறான முடிவெடுத்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதுடைய நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (17.03) மதியம் பூவரசன்குளம் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் வவுனியா வைத்தியசாலையில் சிறுநீரக நோய் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த வாரிக்குட்டியூர் படிவம் 5 இல் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மேலும் வாரிக்குட்டியூரின் அயல் கிராமமான கங்கன்குளம் பகுதியில் வசிக்கும் 60 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் சிறுநீரக நோயினால் மரணமடைந்துள்ளார். இதுதவிர ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் வாரிக்குட்டியூர் படிவம் 5 இல் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவர் நேற்று (16.03) மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது நஞ்சு அருந்திய நிலையில் மரணமடைந்துள்ள சம்பம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அப் பகுதியில் உள்ள பேருந்து தரிப்பிடம் ஒன்றில் மயங்கிய நிலையில் ஊர் மக்களால் மீட்கப்பட்டு நோயாளர் காவு வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழர் பகுதியில் ஒரே நாளில் பதிவாகிய மூன்று மரணம் | Three Deaths Were Reported In The Same Day அவரது உடல் நிலை பாதிப்படைந்துள்ளதால் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு பூவரசன்குளத்தின் வாரிக்குட்டியூர் பகுதியில் ஒரே நாளில் இடம்பெற்ற 3 மரணங்கள் தொடர்பிலும் இளம் பெண் ஒருவர் நஞ்சருந்தி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பிலும் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?