முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 623 வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்:

வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் குழந்தைகள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு அந்த இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உடற்கூறாய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavuniya Family Murder Children S Strangled Rope இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் தந்தை, தாய் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்று முன்தினம் (07-03-2023) செவ்வாய்க்கிழமை காலை சடலங்களாகக் கண்டுபிடிக்கப்பட்டனர். வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavuniya Family Murder Children S Strangled Rope 42 வயதான சிவபாதசுந்தரம் கௌசிகன், 36 வயதான வரதராயினி, 9 வயதான மைத்ரா, 3 வயதான கேசரா ஆகிய நால்வரதும் சடலங்களே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டது. குடும்பத் தலைவரான கௌசிகனின் சடலம் வீட்டின் விறாந்தைப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரவர் படுக்கையில் தூங்கும் நிலையில் இருந்தனர். அவர்களின் சடலங்கள் போரவையால் நன்கு போர்த்தப்பட்டிருந்தன. வவுனியாவில் மர்மமாக உயிரிழந்த பிள்ளைகள்: உடற்கூறாய்வில் வெளியான அதிர்ச்சி தகவல் | Vavuniya Family Murder Children S Strangled Rope உயிரிழந்தவர்களின் உடற்கூறாய்வு நேற்றும் இன்றும் நடைபெற்றது. அதன் முடிவில் இரு பிள்ளைகளும் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. தந்தை தூக்கில் தொங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கின்றார் என்கின்ற முடிவுக்கு சட்ட வைத்திய அதிகாரி வந்துள்ளார். கௌசிகனின் சடலத்தில் வேறு எந்தத் தடயங்களோ, காயங்களோ இல்லாத காரணத்தால் அவரது இறப்பு தூக்கில் தொங்கியதால் ஏற்பட்டது என்கின்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கின்றது. ஆனால், இரண்டு குழந்தைகளினதும் தாயாரான வரதராயினியின் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
அவரதும் கணவனான கௌசிகனதும் உடல் உறுப்பு மாதிரிகளும் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளும் மேலதிக ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திடமிருந்து முழுமையான அறிக்கை கிடைத்த பின்பே இது தொடர்பில் சட்ட வைத்திய அதிகாரியால் உறுதியான முடிவுக்கு வரமுடியும். இதேவேளை, குடும்பத்தினர் கூண்டோடு இறப்பதற்கு முதல் இரவு, அதாவது கடந்த திங்கட்கிழமை (06-03-2023) இரவு அந்த வீட்டுக்கு வந்து சென்றிருக்கின்றது என்று பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ள ஒரு ஹயஸ் வாகனம் பற்றிய விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?