முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 622 கண்டிப்பாக தமிழர்கள் செய்ய வேண்டியது,

புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை
யுத்தக்குற்றவாளியான சிறிலங்கா இராணுவ தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க என்பவரை ஐ. நாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில் பங்கேற்பதை தடைசெய்வதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் மற்றும் பிற மனித உரிமைகள் அமைப்புகள் ஒன்றிணைந்து ஐ.நாவை வலியுறுத்துமாறு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ICPPG பணிப்பாளர் அம்பிகை செல்வகுமார்,இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமையை மீளாய்வு செய்வதற்கு போர்க்குற்றவாளியை எவ்வாறு ஐ.நா அனுமதிக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை | An Urgent Request To Diaspora Tamil Organizations இது தொடர்பில் ICPPG மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐ. நாவின் மனித உரிமைகள் குழுவில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றிய மீளாய்வுக்கான இலங்கை அரச தூதுக்குழுவில், யுத்தகுற்றவாளியான மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடைசெய்யுமாறு ICPPG ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுபோல, ஏனைய மனித உரிமை அமைப்புக்களும், தற்போதைய இலங்கைக்கான மனித உரிமைகள் அமர்வில் போர்க்குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க பங்கேற்பதை தடை செய்யக்கோரி, ஐ.நா மனித உரிமைகள் குழுவிடம் வேண்டுகோள் விடுக்குமாறும் ICPPG அவரச அழைப்பு விடுத்துள்ளது.
மிகுந்த கவலையளிக்கும் செயற்பாடு புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை | An Urgent Request To Diaspora Tamil Organizations யுத்த குற்றவாளிகளை ஐ.நா தடை செய்ய தவறும் சம்பவங்கள் இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சித்திரவதைக்குள்ளானவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தங்களைப் போன்ற சர்வதேச அரச சார்பற்ற மனித உரிமைகள் அமைப்புக்களிற்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் ICPPG தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது. குலதுங்கவின் முன்னோடியான சிசிர மெண்டிஸ் புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளிடம் விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை | An Urgent Request To Diaspora Tamil Organizations மேலும், 07ம் திகதி கார்த்திகை 2016 முதல் 27ம் திகதி ஆடி 2017 வரை குலதுங்க ஜோசப் முகாமுக்கு (SFHQ-W) பொறுப்பான தளபதியாக இருந்தார். இந்த காலகட்டத்தில் ஜோசப் முகாமில் சித்திரவதைக்கு ஆளான பலர் பிரித்தானியா மற்றும் உலகம் முழுவதும் வாழ்ந்து வருகின்றனர் என்பதையும் ICPPG சுட்டிக்காட்டியுள்ளது. 2016 இல் குலதுங்கவின் முன்னோடியான சிசிர மெண்டிஸ் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிற்கு அனுப்பப்பட்ட போது பெலிஸ் கெயர் செய்ததைப் போல, ஆககுறைந்தது அவரது பங்கு பற்றல் குறித்து அவரிடம் வினா எழுப்புமாறு ஐ.நா மனித உரிமைகள் குழுவை கோரியுள்ளதுடன் முன்னாள், தற்போதைய மற்றும் எதிர்கால குற்றவாளிகளுக்கு ஒரு இறுக்கமான செய்தியை அனுப்புமாறும் ICPPG கோரியுள்ளது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?