முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 620 நான் செத்த பின் மொத்தமாகவோ சில்லறையாகவே எமது மண்ணை வில்லுங்கள் நான் உயிரோடு இருக்கும் மட்டும் இது நடக்காது தலைவர் கிட்டு அண்ணாவிற்கு சொன்ன பதில்

பறிபோகும் தாய் நிலம் - துணைபோகும் பிரதேச செயலாளர் By Kiruththikan 53 நிமிடங்கள் முன் 0 SHARES Follow us on Google News விளம்பரம் முதல் ஒரு சில தமிழர்கள் எமது போராட்டத்திற்கு அதரவு வழங்கினார்களா? இப்பொழுது நடப்பது என்ன?
வவுனியா - பூவரசன் குளம், வேலன்குளம், கோவில்மோட்டை கிராமத்தின் பொதுமக்கள் விவசாய செய்கை காணியில் 25 ஏக்கரை நாவலப்பிட்டியிலுள்ள பெரும்பான்மை இனத்தவருக்கு பண்ணை செய்கை மேற்கொள்வதற்கு பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதுடன், குறித்த காணியை தமக்கு விவசாய செய்கை மேற்கொள்ள பெற்றுத்தருமாறும், எமது பகுதியில் வசிப்பவர்களின் காணிகளை எவ்வாறு நாவலப்பிட்டியிலுள்ள பெரும்பான்மை இனத்தவருக்கு பண்ணைச் செய்கை என்ற போர்வையில் நீண்டகால குத்தகைக்கு வழங்க முடியும் என்றும் கேள்வியெழுப்பிய மக்கள் தமது காணியை மீட்டுத்தருமாறும் கோருகின்றனர். வவுனியா, வேலன்குளம், கோவில் மோட்டை பகுதியில் வசித்துவரும் மக்கள் கடந்த1969ஆம் ஆண்டிலிருந்து பூர்வீகமாக அங்கு வசித்து வருகின்றனர். அதற்கான காணி ஆவணப்பத்திரம் என்பன வைத்திருக்கின்றனர்.
நீண்டகால குத்தகை பறிபோகும் தாய் நிலம் - துணைபோகும் பிரதேச செயலாளர் | Action To Give 5 Acres Of Land To Sinhalese சிலரின் ஆவணங்கள் யுத்த நடவடிக்கையினால் இடம்பெயர்வின் போது தவறவிடப்பட்டுள்ளது. எனினும் தற்போது அப்பகுதி காடு வளர்ந்து காணப்படுகின்றது. காணியில் துப்பரவுப்பணிகளை மேற்கொள்ள வசதியற்ற நிலையில் மக்கள் வசித்து வருகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்திய பிரதேச செயலாளர் அக்காணியை நாவலபிட்டியில் வசித்துவரும் பெரும்பான்மை இனத்தவருக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பினை தெரிவிப்பதுடன், தமது காணிக்கான ஆவணங்களையும் தம்வசம் வைத்திருக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கைகளை பெற்றுக்கொடுக்காமல் இயற்கை உணவு உற்பத்தி என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவருக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பறிபோகும் தாய் நிலம் - துணைபோகும் பிரதேச செயலாளர் | Action To Give 5 Acres Of Land To Sinhalese இவ்விடயம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம், அங்குள்ள அமைப்புக்களுடன் கிராம அலுவலகர், பிரதேச செயலாளர் கலந்துரையாடல் மேற்கொள்ளாமல் பிரதேச செயலாளரின் தன்னிச்சையான இந்நடவடிக்கைக்கு தமது எதிர்ப்பினை தெரிவிப்பதாகவும் தமது காணியை தமக்கு மீட்டுத்தருமாறு மேலும் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?