முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 681 கருமையான, அடர்த்தியான கூந்தலை நீங்கள் விரும்புபவரா

கருமையான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலைக் குழம்பு!
பொதுவாகவே பெண்களுக்கு அடர்த்தியான கூந்தல் என்பது மிகவும் விருப்பமானதொன்று தான். ஆனால் அந்தக்காலத்தில் இருந்தவர்களுக்கு எல்லாம் தரையை தட்டும் அளவிற்கு முடி வளர்ந்திருக்கும். அவர்கள் அப்போது எந்த ஷாம்பும் பயன்படுத்தியது இல்லை, எந்த எண்ணெய்யும் பயன்படுத்தியது இயற்கை பொருட்களைக் கொண்டு இயற்கையாகவே அழகான முடியைக் கொண்டிருந்தார்கள். ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கு வகிக்கிறது, ஆனால் தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் முடி உதிர்வு ஏற்படுகின்றது. இதனை எவ்வித பக்கவிளைவுகளுமின்றி இயற்கை வழிகளிலேயே சரி செய்யலாம்.
கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலைக் குழம்பு அந்தவகையில் முடிக்கு கருவேப்பிலை மிக மிக பயனுள்ளது. கறிவேப்பில்லைக்குழம்பு கருவேப்பில்லையில் கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் பி, விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அனைத்து சத்துக்களும் உங்கள் முடிவளர்ச்சிக்கு அதிகம் உதவுகிறது. இந்தக் கறிவேப்பிலையைக் கொண்டு கருமையான, அடர்த்தியான முடியைப் பெற வைக்கும். இந்த கருவேப்பிலைக் குழம்பு எவ்வாறு செய்வதென்று பார்க்கலாம். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலைக் குழம்பு தேவையான பொருட்கள் கறிவேப்பிலை – 1 கட்டு கடலைப்பருப்பு – 1 ஸ்பூன் மிளகு - 10 காய்ந்த மிளகாய் – 2 உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு – ஒரு ஸ்பூன் கடுகு – 1/2 ஸ்பூன் சீரகம் – ஒரு ஸ்பூன் புளி – ஒரு நெல்லிக்காய் அளவு. நல்லெண்ணெய் – 100 மில்லி உப்பு – 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை – 1 கொத்து செய்முறை முதலில், பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர், இதில் உறுவி வைத்துள்ள கறிவேப்பிலை தழைகளை சேர்த்து வறுத்து, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். தற்போது, அதே பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும். பின்னர் இந்த சேர்மத்தை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றிக்கொள்ளவும். இதனுடன் வறுத்து வைத்துள்ள கறிவேப்பிலையை சேர்த்து பொடியாக அரைத்து, தண்ணீர் சேர்த்து மசாலா கரைசல் தயார் செய்யவும். கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் கருவேப்பிலைக் குழம்பு இதனிடையே ஒரு சிறு நெல்லிக்காய் அளவு புளியினை ஒரு கோப்பையில் தண்ணீருடன் சேர்த்து ஊற வைத்து, புளி கரைசல் தயார் செய்து வைத்துக்கொள்ளவும். தற்போது கறிவேப்பிலை குழம்பு தயார் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் இதனுடன் நாம் தயார் செய்து வைத்துள்ள மசாலா கரைசல் மற்றும் புளி கரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். முதல் கொதி வந்துதும் இதில் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கிவிட, கறிவேப்பிலை குழம்பு தயார்

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?