முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

d 663 கொலையின் உன்மை வெளிவந்தது,

இளம் பெண்ணின் மரணத்தில் புதிய திருப்பம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல்
கண்டி- அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றச்சாட்டை மறுத்த இராணுவ சிப்பாய் இளம் பெண்ணின் மரணத்தில் புதிய திருப்பம்! வெளியாகிய அதிர்ச்சி தகவல் | Alawatugoda Young Women Dead Police Investigation
காவல்துறை மோப்ப நாய் ´ஏகல்´ மூலம் அவரது வீடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார். இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?