முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

d 675 வெளிநாடுகளில் தங்களின் திறமையைக்காட்டும் தமிழீழப் பெண்கள்,

பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழ் பெண்! கடந்த 12.03.2023 ஞாயிற்றுக்கிழமை பிரான்சிலுள்ள பாரிசு நகரில் நடைபெற்ற சூழல் மாசடைதல், பிளாஸ்ரிக் பாவனையால் ஏற்படும் தீமைகள், நாகரிகப் போர்வையில் அநியாயமாக கழிவுகளுக்குள் உள்ளாகும் உடைகள் மூன்றாம் உலகநாடுகளின் பாவனைக்கு வழங்குதல், உயிர்கள் மீதான பாதுகாப்பு என பல்வேறு மனிதகுலத்திற்கு அவசியமான விடயங்களை கருத்தில் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் மரதன் ஓட்ட நிகழ்வில் 15 ஆயிரம் வரையிலான பிரெஞ்சு மற்றும் பல்லின மக்கள் பங்குபற்றியிருந்தனர். அதில் ஈழத்தமிழ் மக்களின் பிரதிநிதியாக இரண்டு பிள்ளைகளின் தாயார் திருமதி. பிரவீனா நிமால் பங்கு பற்றியதுடன், 10 கிலோமீற்றர் தூரத்தை முழுமையாக ஓடித் தமிழினத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இவரின் மனத்திடம் கொண்ட ஓட்டத்தினால் சிறப்பாக பேற்றினைப் பெற்றுக்கொண்டதோடு, அதற்கான சிறப்புப் பரிசினையும் பதக்கத்தையும் ஏற்பாட்டாளர்களிடம் பெற்றுக்கொண்டார். இந்நிலையில் பாரிசின் மத்தியில் ஆரம்பித்த இந்த மரதன் ஓட்டம் பாரிசின் சர்வதேச உதைபந்தாட்ட மைதானத்தில் நிறைவடைந்தது. பிரான்சில் தமிழினத்திற்கு பெருமை சேர்த்த ஈழத

d 674 இலங்கையில் மனநிலை பாதிக்கப்படுதற்கொலை செய்யும் இளையோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு?

தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்த யுவதி யுவதி ஒருவர் புகையிரதம் வரும் நேரம் தண்டவாளத்தில் தலையை வைத்து படுத்து உயிரை மாய்த்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி இன்று(21.03.2023) பயணித்த புகையிரதத்திலேயே இந்த பதற வைக்குமு் சம்பவம் றடைபெற்றுள்ளது. காவல்துறையினர் விசாரணை தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரை மாய்த்த யுவதி | Woman Committed Suicide In Front Of Train பத்துலு ஓயா என்ற பகுதியில் வைத்தே 18 வயதுடைய குறித்த யுவதி இவ்வாறு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்த யுவதி புத்தளம் கறிகட்டை பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவருகிறது. மேற்படி யுவதி புகையிரதம் வருவதை அவதானித்து விட்டு தனது கைப்பையை எறிந்து விட்டு தண்டவாளத்தில் தலையை வைத்து கொண்டதாக காவல்துறை முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் உடப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

d 673 தமிழீழத்தில் நடப்பது என்ன?

பறிபோகும் தாய்நிலம் - எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிக்கப்படும் தமிழர் நிலம் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் எவ்வித முன்னறிவிப்புமின்றி அரசதிணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக் கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கொக்குத்தொடுவாய் கமக்கார அமைப்பினர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். அத்துடன், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரனை அழைத்து அங்குள்ள நிலைமைகளைக் காண்பித்துள்ளனர். கொக்குத்தொடுவாய் - கோட்டக்கேணியிலிருந்து, அம்பட்டன் வாய்க்கால், தீமுந்தல், பணம்போட்ட கேணி, நாயடிச்ச முறிப்பு, வெள்ளைக்கல்லடி, சிவந்தா முறிப்பு, சூரியனாறுவரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில் அரச திணைக்களத்தைச் சார்ந்த சிலரால் எல்லைக்கற்கள் நாட்டப்பட்டு அபகரிப்பு முயற்சியொன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதேவேளை காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கோ, கமக்கார அமைப்பினருக்கோ அறிவித்தல் வழங்கப்படாமலேயே குறித்த எல்லைக் கற்கள்

d 672 இந்தியாவுக்கு காத்திருக்கும் பேரிடி..!

அமெரிக்காவின் இராணுவத்தளமாக இலங்கை - இந்தியாவுக்கு காத்திருக்கும் பேரிடி..! அமெரிக்கா தன்னுடைய எதிர்கால நடவடிக்கைக்காக இலங்கையின் இராணுவ நடவடிக்கையை தனது கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டுள்ளதாக இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்காவை பொறுத்தவரை இலங்கை அரசியலையும், படையினரையும் வசப்படுத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். கட்டுப்பாட்டுக்குள் இந்தியா அமெரிக்காவின் இராணுவத்தளமாக இலங்கை - இந்தியாவுக்கு காத்திருக்கும் பேரிடி..! | Sri Lanka As Us Military Base Challenge For India தற்போது இலங்கை முழுமையாக அமெரிக்காவின் பக்கம் வந்துள்ளதுடன், பக்கத்து நாடான இந்தியாவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. அதாவது மியன்மாரில் கற்றுக்கொண்ட பாடத்தினை மீண்டும் இலங்கையில் அமெரிக்கா கற்க கூடாது என்பதற்காக இவ்வாறு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய இராணுவத்தினரை விட அதிகளவிலான இராணுவத்தின

d671 தமிழீழப்பகுதியில் இளையோரின் தற்கொலை அதிகரிப்பு?

சிறந்த வாழ்க்கைத் தெளிவு பரந்த அறிவு தமிழர் மத்தியில் குறைந்து வருகின்றதா? யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவு! சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்றையதினம் பிற்பகல் தனது வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். அவர் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியுள்ள மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழில் 19 வயது யுவதியின் விபரீத முடிவு! | The Tragic End Of A 19 Year Old Girl In Yali அவரது சடலமானது மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

d 670 அந்த விடயத்தில் நம்ப முடியாத மனிதர்களா?

புகார் கொடுக்க வந்த பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி! புகார் கொடுக்க வந்த பெண்ணை பொலிஸ் நிலையத்தில் வைத்து கற்பழித்த இன்ஸ்பெக்டரிடம் விசாரணை நடந்து வருகிறது. பெங்களூரு கொடிகேஹள்ளி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவருக்கு வீரேந்திர பாபு என்பவர் அறிமுகம் ஆனார். அவர் அந்த பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை கடனாக பெற்றுள்ளார். ஆனால் பணத்தை அவர் திரும்ப கொடுக்கவில்லை. இதுகுறித்து கேட்டாலும் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண், வீரேந்திர பாபு மீது புகார் அளிக்க கொடிகேஹள்ளி பொலிஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அவர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ராஜண்ணாவிடம் புகார் அளித்தார். புகார் கொடுக்க வந்த பெண்ணை கற்பழித்த பொலிஸ் அதிகாரி! | The Police Officer Raped Woman Came To Report அப்போது அந்த பெண்ணின் செல்போன் எண்ணை பெற்று கொண்ட ராஜண்ணா, அவருக்கு அடிக்கடி செல்போனில் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை என்ற பெயரில் ராஜண்ணா, அந்த பெண்ணை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்தார். பின்னர் அங்கிருந்த அறைக்கு அழைத்து சென்று அவரை கற்பழித்ததாக

d 669 உன்மையை மறைக்க முடியாத நிலையில் ஆசியல்வாதிகள்,

மிகப்பெரும் ஆபத்தில் கிளிநொச்சி மண் - சிறிலங்கா அரசாங்கத்தின் துல்லிய காய் நகர்த்தல்! கிளிநொச்சி மக்களின் வறுமையையும், ஏழ்மையையும் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் துல்லியமான காய்நகர்த்தல் ஒன்றை மேற்கொள்கிறது என்று தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதற்கமைவாக, பணத்தின் ஊடாக அப்பகுதி மக்களை குடிபெயர்த்தும் பாரிய முயற்சியும் இடம்பெறுவதாகவும், அதன் மூலம் கிளிநொச்சி மண்ணுக்கு பாரிய ஆபத்து ஏற்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏமாற்றப்படும் மக்கள் மிகப்பெரும் ஆபத்தில் கிளிநொச்சி மண் - சிறிலங்கா அரசாங்கத்தின் துல்லிய காய் நகர்த்தல்! | Kilinochchi Tamil Peoples Sritharan Mp Government அண்மைய நாட்களிலே கிளிநொச்சியில் சீமெந்து தொழிற்சாலை ஒன்றை அமைக்கவுள்ளதாகத் தெரிவித்து மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வீடு கட்டி தருகின்றோம், வீதி போட்டு தருகின்றோம், பல்வேறு உதவிகளை செய்கின்றோம் எனக்கூறி ஒரு கும்பல் மக்களிடமிருந்து வெற்றுப் பேப்பர்களில் கையெழுத்துக்களை வாங்குகின்றனர். மக்களை வ