முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

TAMIL Eelam news b911

அமெரிக்க ஜனாதிபதியாக நான் இப்போ இருந்திருந்தால் - டிரம்ப் வெளியிட்ட கருத்து!
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் (Donald Trump) கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர். ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த் நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலை ஒருபோதும் வந்திருக்காது. எனக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நன்றாக தெரியும். அவர் தற்போது செய்யும் செயலை (உக்ரைன் மீதான தாக்குதல்) டிரம்ப் அரசாங்கம் (டிரம்ப் அதிபராக) இருந்திருந்தால் நிச்சயம் செய்திருக்கமாட்டார். ஆனால், தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. விளாடிமிர் புதின் (Vladimir Putin) தனக்கு என்ன வேண்டுமோ அதை தற்போது பெறுவது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?