முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 113 ஓயாத அலைகள் -3

ஓயாத அலைகள் -3 நடவடிக்கைய
ை மையமாக வைத்து அதன் முன்-பின்னான காலப்பகுதியை விளக்குகிறது. இத்தொடரின் எழுத்தாளர் அப்போது நின்ற இடங்கள், பணிகளைப் பொறுத்து ஒரு கோணத்திலிருந்து மட்டுமே இது எழுதப்படுகின்றமையால் இது முழுமையானதொரு பரிமாணத்தை எப்போதும் தராது. ஒருவரின் அனுபவங்களூடாக மட்டுமே இப்பகுதி பயணிக்கும். ஈழநேசன் வலைத்தளத்தில் (eelanesan.com) தொடராக வெளிவந்த இக்களப்பதிவு தேசத்தின் குரலில் மீள்பதிவாகின்றது. எதிர்பாராத விதமாய் மழை தூறத் தொடங்கியது. தூக்கக் கூடியவற்றைத் தூக்கிக்கொண்டு ஏனையவற்றை பொலித்தீன் பைகளால் மூடிவிட்டு அருகிலிருந்த தட்டியொன்றின் கீழ் எல்லோரும் ஓடி ஒதுங்கினோம். மழை பலப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வானம் நன்கு வெளித்திருந்தது. ‘சே! பயிற்சியை முடிச்சிட்டு வேளைக்குப் போய்ப் படுப்பமெண்டா கோதாரி விழுந்த மழை குழப்புது’ – நித்தி சலித்தான். ‘மாஸ்டர்! மழை பெலக்காது. தூறலுக்கயே செய்து முடிப்பம். அதுவும் பயிற்சிதானே. சண்ட நேரத்தில மழை தூறினா ஓடிப்போய் தாழ்வாரத்துக்க ஒதுங்கிறதே?’ – மலர்விழி சொன்னாள். ‘இதுக்கயும் உனக்கு நக்கல். எனக்குப் பிரச்சினையில்லை, தூறலுக்க நிண்டு நாளைக்கு நீங்களொராள் தும்மினாலே கடாபியண்ணை என்னைக் கும்மிப் போடுவார்’. – இது சசிக்குமார் மாஸ்டர்.
இறுதியில் மழைத்தொப்பிப் போட்டபடி பயிற்சியைத் தொடர்வதென முடிவாகியது. அணிகள் தமது நகர்வுக்கான தொடக்கப் புள்ளிகளுக்குப் போய் நகரத் தொடங்குகின்றன. வெட்டைக்குள்ளால், பற்றைகளுள்ளால், வடலிக் கூட்டங்களுள்ளால் என்று வெவ்வேறு தரைத் தோற்றங்களுக்குள்ளால் அந்த நள்ளிரவில் அணிகள் இலக்குநோக்கி நகர, இராணுவத்தினராக நியமிக்கப்பட்டவர்கள் நகர்வுகளைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவொரு மாதிரிப் பயிற்சி. ஆட்லறித்தளம் ஒன்றைத் தாக்கயழிப்பதற்காக கரும்புலிகள் அணி பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறது. லெப்.கேணல் சசிக்குமார் மாஸ்டர் (இவர் இம்ரான் – பாண்டியன் படையணியைச் சேர்ந்த சசிக்குமார்; 2009 இல் வன்னியில் நிகழ்ந்த கடும் போர்க்காலத்தில் வீரச்சாவடைந்தார்.) தலைமையில் இந்தப் பயிற்சித் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது போரினால் சிதைந்துபோய் பயன்படுத்தாமலிருந்த முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக் கட்டடத்தை மையமாக வைத்து இந்த இராணுவ முகாமின் மாதிரிவடிவம் அமைக்கப்பட்டுப் பயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தச் சுற்றாடலில் குறிப்பிட்ட தூரத்துக்கு மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இரவு, பகல் என்று மாறிமாறி இறுதிக்கட்டப் பயிற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இதில் கரும்புலிகள் அணியின் இரண்டாவது தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுமையாகவும் மூன்றாம் தொகுதியைச் சேர்ந்தவர்களில் நாலைந்து பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளார்கள். தாக்குதல் நடத்தும் அணிகள் இன்னும் முழுமையாக இல்லை. ஏனென்றால் இப்போதும் வேவுக்காக சிலர் உள்ளே சென்றுள்ளார்கள்.
முன்னர் வேவுப்போராளிகள் தகவல்கள் திரட்ட, கரும்புலிகள் தனியே நடவடிக்கை மட்டும் செய்யும் நிலை மாறி, கரும்புலிகளே வேவுப்பணியையும் செய்து நடவடிக்கையையும் செய்யும் நிலை நடைமுறைக்கு வந்திருந்தது. இதில் கரும்புலிகள் தனித்தோ வேவு அணியினருடன் இணைந்தோ இந்த வேவுப்பணியைச் செய்துகொண்டிருந்தார்கள். வேவு நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளும் உள்ளனர். இப்போது நடந்து கொண்டிருக்கும் மாதிரித் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களும் மாறிமாறி குறிப்பிட்ட இலக்குக்கு வேவுக்காகாகச் சென்று வந்துகொண்டிருந்தனர். இந்த வேவு நடவடிக்கைக்கு லெப். கேணல் இளம்புலி (முன்னர் மணலாற்று மாவட்டப் படையணியில் இருந்தவர். மிகச்சிறந்த வேவுக்காரன். தனியொருவராக இவர் சாதித்தவை ஈழப்போராட்டத்தில் பொறிக்கப்பட வேண்டியவை. பின்னர் மணலாற்றில் வீரச்சாவடைந்தார்.) பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு முறையும் வேவுக்காகச் செல்பவர்களைக் கூட்டிச் சென்றுவருவார். சென்றுவரும் அனைவரும் மிகத் திருப்தியாகவே இருந்தார்கள். தாக்குதல் எந்தவிதச் சிக்கலுமின்றி நூறுவீதமும் வெற்றியாக அமையுமென்பதில் யாருக்கும் ஐயமிருக்கவில்லை. ஆட்லறித் தளத்துள் வெற்றிகரமாகப் புகுந்தது மட்டுமன்றி ஆட்லறிகளை மிக நெருக்கமாகவும் சென்று பார்த்து வந்திருந்தார்கள். குறைந்தது மூன்று முறையாவது அடுத்தடுத்து தொடர்ச்சியாக இப்படிப் போய்வந்தது மிக அதிகளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. தாக்குதல் இலக்கானது மணலாற்றுக்காட்டில் அமைந்திருக்கும் ‘பராக்கிரமபுர’ என்ற இராணுவ முகாம். எமது கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து மிக நீண்ட தூரத்தில் இருந்தது அந்த முகாம். மேலும் அப்பகுதிகளில் – ஏன் அதையண்டிய பகுதிகளிற்கூட எமது ஊடுருவற் செயற்பாடுகளோ தாக்குதல்களோ நடந்ததில்லை. எனவே எதிரி மிகமிக அலட்சியமாக இருந்தான். அந்த முகாமின் அரைவட்டப்பகுதி பெண் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது. சிறிலங்கா இராணுவத்தைப் பொறுத்தவரை போர்ப்பகுதிகளிலோ, ஆபத்து ஏற்படுமெனக் கருதும் பகுதிகளிலோ பெண் இராணுவத்தினரைப் பயன்படுத்துவதில்லை. அங்கே நிலைப்படுத்தப்பட்டிருக்கும் ஆட்லறிகளைக் கூட எதிரி பயன்படுத்துவதில்லை. அவை பயன்படுத்தக்கூடிய தூரவீச்சுக்குள்ளும் இருக்கவில்லை. மணலாற்றின் முக்கிய இராணுவத் தளங்களான மண்கிண்டிமலை, கொக்குத்தொடுவாய் போன்ற தளங்கள் தாக்கப்படும்போது அவற்றுக்கான பாதுகாப்புச் சூடுகளை வழங்குவதற்காகவே இந்த ஆட்லறித்தளத்தை இராணுவம் அமைத்திருந்தது.
பாதுகாப்பு விடயத்தில் எதிரி மிக அலட்சியமாக இருந்த, ஆனால் கரும்புலிகள் தமது தாக்குதல் வெற்றியில் நூறு வீதமும் உறுதியாகவிருந்த இந்த முகாம் மீதான தாக்குதல் திட்டம், ஏனோ தெரியவில்லை சிலதடவைகள் இடைநிறுத்தப்பட்டது. பயிற்சிகள் இறுதிக்கட்டத்தையடைந்து எல்லாம் தயாராகும் நேரம் தலைவரிடமிருந்து இடைநிறுத்தச் சொல்லி அறிவித்தல் பிறப்பிக்கப்படும். சிலநாட்களில் மீண்டும் கட்டளை கிடைக்க, ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா எனப்பார்ப்பதற்காக வேவு அணியை அனுப்பிவிட்டு இங்கே பயிற்சி தொடங்கிவிடும். பிறகு மீளவும் திட்டம் பிற்போடப்படும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் நடந்தன. இவற்றுக்கான காரணம் பின்னர் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. இந்த வேவுகள், மாதிரிப் பயிற்சிகள் எல்லாம் நடந்துகொண்டிருந்த காலம் 1999 ஆம் ஆண்டு புரட்டாசி, ஐப்பசி மாதங்களில். அன்றைய நேரத்தில் வன்னியிலிருந்த இராணுவச் சமநிலைபற்றிச் சொல்லியாக வேண்டும். ஜெயசிக்குறு நடவடிக்கையானது கண்டிவீதியில் மாங்குளம் சந்தியைக் கைப்பற்றிய நிலையில் நின்றுகொண்டிருந்தது. மேற்கிலே ரணகோச தொடரிலக்கத்தில் நடந்து பள்ளமடுவில் நின்றுகொண்டிருந்தது. வன்னியின் கிழக்கிலே ஒட்டுசுட்டான் சந்தியையும் தாண்டி எதிரி முன்னேறி நின்றிருந்தான். நாயாற்றுக் கடற்கரையிலிருந்து வளைந்து வளைந்து செல்லும் இராணுவத்தின் முன்னணிக் காப்பரண் வரிசை, நெடுங்கேணி – ஒட்டுசுட்டான் வீதியைப் பாதுகாத்து, ஒட்டுசுட்டான் – மாங்குளம் வீதியைப் பாதுகாத்து நீண்டுசென்று மேற்குக் கடற்கரை வரை நூற்றுக்கும் அதிகமான கிலோமீற்றர்கள் நீண்டிருந்தது. அதே காப்பரண் வரிசையை மறித்துப் புலிகளும் தமது காப்பரண் வரிசையை அமைத்துச் சண்டையிட்டு வந்தார்கள். இந்தக் காலப்பகுதியில் நெடுங்கேணி தொடக்கம் நாயாற்றுக் கடற்கரை வரையான பகுதிகளில் இருதரப்புக்குமிடையே சண்டைகள் நடப்பதில்லை. இப்பகுதிகளில் படையினரின் செறிவும் குறைவாகவே இருந்தது. அப்போது மிகப்பெரிய ஆளணிக் குறைபாட்டை சிறிலங்காப் படைத்தரப்புக் கொண்டிருந்தது. முன்னணிக் காப்பரண்களை விட பின்னணி முகாம்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதிலேயே அதிக கவனத்தை சிறிலங்காப் படைகள் செலுத்தியிருந்தன. இந்தப் பகுதிகளூடாக புலிகளின் வேவு அணிகள் மிகச் சுலபமாகப் போய்வந்து கொண்டிருந்தன. ‘பராக்கிரமபுர’த்துக்கான வேவும் இவ்வழியேதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
பராக்கிரமபுர மீதான தாக்குதல் நடந்தால் மணலாற்றின் முன்னணிக் காப்பரண் வரிசையில் மாற்றங்கள் நடக்கும். இராணுவக் கட்டுப்பாட்டுக் காடுகளுக்குள் புதிதாக தற்காலிக சிறுமுகாம்கள் அமைக்கப்படலாம்; புதிய சுற்றுக்காவல் அணிகள் வருவிக்கப்பட்டு காடுகளில் கண்காணிப்புக்கள் அதிகரிக்கலாம். புதிய சூழலைப் படித்து முடிக்க இயக்கத்துக்கு இன்னும் சிலகாலம் தேவைப்படலாம். இம்முகாம் மீதான தாக்குதல் மட்டுமே இப்போதைக்குப் போதுமென்றால் இவற்றைப் புறக்கணித்து அந்தத் தாக்குதலைச் செய்யலாம். சமீபகாலமாக யுத்தகளம் மந்தமடைந்திருந்தது. இராணுவச் சமநிலையில் தமிழர் தரப்பின் கையை ஒருபடி உயர்த்த இத்தாக்குதல் பெரிதும் தேவைப்பட்டது. இத்திட்டத்தோடு தொடர்புடைய போராளிகள் நூறுவீதமும் வெற்றி உறுதியான இந்த நடவடிக்கையைப் பெரிதும் எதிர்பார்த்தார்கள். இது பிற்போடப்பட்டுக் கொண்டிருந்த காரணத்தை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் தலைவருக்கோ இத்திட்டம் மட்டுமே மூளையில் இருக்கவில்லை. மணலாற்றுக்காட்டில் எதிரியின் அந்த இலகுத்தன்மை அவருக்குத் தேவையாக இருந்தது. அதில் கல்லெறிந்து குழப்ப அவர் விரும்பவில்லை. ஆனாலும் பராக்கிரமபுர மீதான தாக்குதல் திட்டத்தையும் முழுமையாகக் கைவிடவில்லை.
தொடரும்... - இளந்தீரன் -

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?