முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 134 மீறி சம்பந்தனின் அதிரடி முடிவு

சுமந்திரனின் விருப்பத்தை மீறி சம்பந்தனின் அதிரடி முடிவு
பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், எதிர்த்து வாக்களிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்து வலியுறுத்திய போதும், ஏனைய யாரும் அந்த நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. இதனால், பயங்கரவாத தடை சட்ட திருத்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த சட்ட வரைபை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) சமர்ப்பித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் அண்மைக்காலமாக நடக்கும் உள்ளக கலந்துரையாடல்களில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுக்கும், தனக்கும் சுமுகமான கலந்துரையாடலும், தொடர்பும் இருப்பதாக வெளிப்படுத்தி வருகிறார். இந்த பின்னணியில், இன்று விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விடலாம் என கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும், அதனை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதையடுத்து, வாக்கெடுப்பில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது பற்றி ஆராய, தமிழ் தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடினர். இரா.சம்பந்தன் (R.Sampanthan), செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), த.சித்தார்த்தன் (D.Siddharthan), கோவிந்தன் கருணாகரன் (G. Karunakaran), எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) சாள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalathan) ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். இதன் போதும், திருத்த சட்டமூல வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கலாமென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அந்த வரைபில் சாதகமான சில அம்சங்கள் உள்ளதாகவும், அதனூடாக கிடைக்கும் இடைக்கால நன்மைகளை பெற்றுக்கொள்ளலாமென்றும் தெரிவித்தார். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பயங்கரவாத தடை (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு எதிராக வாக்களிப்பது தான் தற்போதைய சூழலில் உகந்தது எனக் கூற அக் கூற்றை வழமையாக நிராகரிக்கும் வழக்கத்தில் சுமந்திரன் நிராகரிக்க முற்பட சம்பந்தன் மிகவும் இறுக்கமான தொனியில் அப்படிச் செய்ய முடியாது சுமந்திரன் இது மக்களின் இயல்பு நிலையைப் பாதிக்கும் ஏற்பாடு நீங்கள் கூறுவது போன்று நடுநிலமை வகிக்க முடியாது என திட்டவட்டமாக கூற சுமந்திரன் செய்வதறியாது வழி பிதுங்கி நின்றுள்ளார். கடந்த காலங்களில் சுமந்திரனின் முடிவுகளால் தமிழ் மக்களிற்கு எற்பட்ட பின்னடைவுகளை உணர்ந்த சம்பந்தன் கடந்த நான்கு மாதங்களாக சுமந்திரன் தனி நபராக தினிக்க முற்படும் அனைத்து முடிவுகளையும் தூக்கி எறிந்து பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுகளுடன் இணங்கிச் செல்கின்ற போக்கு அதிகரித்துள்ளதாக கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தார்கள். கூட்டத்தில் கலந்து கொண்ட யாரும் நடுநிலமை நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டுமென்ற இறுதி நிலைப்பாட்டில் எந்த சமரசமும் செய்ய முடியாதென ரெலோ (Telo) தரப்பினர் தெரிவித்தனர் இதன் போது புளொட்டும் அதே நிலைப்பாட்டையே கொண்டிருந்தது. எதிர்த்து வாக்களிப்பதை தவிர மற்றொரு தெரிவு இருக்க முடியாதென சாள்ஸ் நிர்மலநாதனும் உறுதியாகத்த தெரிவித்துள்ளார். இதையடுத்து, பயங்கரவாத தடைச்சட்ட திருத்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களிப்பதென கூட்டமைப்பு முடிவு செய்தது. அனைவரும் ஒரே முடிவை எடுத்தால், தானும் எதிர்த்து வாக்களிப்பதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார். பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக நீக்கவேண்டும் என கையெழுத்து போராட்டம் நடத்துகின்ற அரசியல் முக்கியஸ்தர் நடுநிலை வகிக்க முற்பட்டமை கூட்டத்தில் கலந்து கொண்ட பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது, காரணம் நடுநிலை வகிக்கும் மனநிலை இருக்குமானால் இது மக்களை ஏமாற்றும் செயல் என கூட்ட முடிவில் சம்பந்தனிடம் முறையிட்டுள்ளனர். அது மட்டுமல்லாது இன்று 22.03.2022 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலை வகித்திருக்குமாக இருந்தால் சர்வதேச ரீதியில் தமக்கும் ஒரு பலமாக இருந்திருக்கும் என அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிசுக்கும், சுமந்திரனிற்கும் இடையில் நடந்த சுமுகமான கலந்துரையாடலில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்பார்த்தது நடுநிலை, அதை சுமந்திரனால் இன்று செய்ய முடியாலம் போய்விட்டது, அப்படி நடந்திருந்தால் அரசின் சர்வதேச நெருக்கடி ஓரளவு தனிவதற்கு சிறு வாய்ப்பாகி இருந்திருக்கும் நல்ல வேளை எல்லோரும் இருக்கமாக இருந்ததால் நிலமை மாறியது என கூட்டமைப்பின் பங்காளின் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அது மட்டுமல்லாது நடுநிலை வகிக்க வேண்டும் என ஒற்றைக்காலில் நின்ற சுமந்திரன் பயங்கரவாத தடைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வாக்களித்தமை வியப்பாகவும் - சிரிப்பாகவும் இருந்தது என மேலும் தெரிவித்துள்ளார். இவ் அரசை கடுமையாக விமர்சித்து விட்டு நிபந்தனை இன்றி பேச வேண்டும், அரசுடன் இணங்கி செல்வது போன்ற மறைமுக செயற்பாட்டில் கூட்மைப்பின் "வீ அணி" செயற்படுகின்றமை தொடர்பில் யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளமை தமிழ் இனத்திடம் உள்ளதையும் பாரிய அழிவில் முடிக்கும் செயலாக மாறும் என கூறப்படுகிறது

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?