முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 116 உக்ரைனில் தகர்த்தெறியப்படும் ரஷ்ய படைவாகனங்கள்

உக்ரைனில் தகர்த்தெறியப்படும் ரஷ்ய படைவாகனங்கள் -வெளியானது
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய படையினருக்கு நினைத்தது போல் போர் அவ்வளவு இலகுவானதாக அமையவில்லை. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் படையினரின் தகுந்த பதிலடியும் பின்புலத்தில் அமெரிக்கா உட்பட மேற்கத்தைய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கும் நவீனரக ஆயுதங்களும்தான். இந்த நிலையில் படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவ வாகனங்கள் தம்மால் தகர்த்தெறியப்படும் வீடியோவை உக்ரைன் படைத்தளபதி றொப் லீ ( Rob Lee)வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குடியிருப்பு பகுதியில் நின்று கொண்டிருக்கும் ரஷ்யஇராணுவ வாகனங்களை உக்ரைன் படைகள் பீரங்கி மூலம் தாக்கி அழிக்கின்றனர். இந்த தாக்குதலை உக்ரைன் படைகள் ஆளில்லா விமானம் மூலம் வீடியோவாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.உக்ரைனில் ரஷ்யாவுக்கு மரண அடி -உயிரிழந்த படைவீரர்களின் சடலங்களுடன் இரவில் பறக்கும் உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்யாவுக்கு போர்க்களம் அவர்கள் நினைத்தது போல் சுலபமானதாக இருக்கவில்லை. உக்ரைன் படையினரின் கடும் எதிர்தாக்குதலால் ரஷ்ய படையினர் நாளாந்தம் பெருமளவில் கொல்லப்படுவதுடன் படை தளபாடங்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
இந்த நிலையில் உக்ரைனில் கொல்லப்படும் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க இரவு நேரங்களில் அவர்களது சடலங்களை ஏற்றிய விமானங்கள்,ரயில்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் அண்டை நாடான பெலாரஸ்க்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. ரேடியோ ஃப்ரீ ஐரோப்பா (RFE) மூலம் பெறப்பட்ட காட்சிகள் மார்ச் மாத தொடக்கத்தில் பெலாரஷ்ய நகரமான ஹோமல் வழியாக இராணுவ அம்புலன்ஸ்கள் செல்வதை காட்டுகின்றன. RFE ஒரு மருத்துவ அதிகாரியை மேற்கோள் காட்டி, மார்ச் 13 வரை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் Homel-ல் இருந்து ரஷ்யாவிற்கு ரயில்கள் அல்லது விமானம் மூலம் அனுப்பப்பட்டது என அவர் கூறியதாக தெரிவித்துள்ளது. ஹோமலில் வசிப்பவர்கள் RFE-யிடம் காயமடைந்த ரஷ்ய வீரர்கள் நகரத்தில் உள்ள மூன்று தனித்தனி மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்படுவதாகவும், உள்ளூர் நோயாளிகள் வருகையை நிர்வகிப்பதற்கு முன்கூட்டியே வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தனர். "அங்கு பல ரஷ்யர்கள் காயமடைந்துள்ளனர், இது திகிலூட்டுகிறது. பயங்கரமாக சிதைக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை முழுவதும் அவர்களின் முனகல்களைக் கேட்கமுடியவில்லை" என்று ஹோமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குடியிருப்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை உக்ரைன் படையெடுப்பில் தமது தப்பில் 500 இற்கும் குறைவான படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினரை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?