முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

c 172 ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அச்சுறுத்தலா?

சீனா - சொலமன் தீவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஆஸ்திரேலியாவுக்கு பெரும் அச்சுறுத்தலா?
சீனாவுக்கும் Solomon Islands நாட்டுக்குமிடையே ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று உருவாகி வருவதாக வரும் செய்திகள் கசிந்துள்ளன. ‘சீனாவுக்கும் Solomon தீவுகளுக்குமிடையேயான வரைவு பாதுகாப்பு ஒப்பந்தம் - draft security agreement’ பற்றி பசிபிக் தீவுகளுக்கு மிக அருகாமையிலிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு தெரியாமல் போனது குறித்து தேசிய பாதுகாப்பு மட்டத்தில் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இந்த செய்தி உண்மைதான் என்று ABC உறுதிசெய்துள்ளது. ‘சீனாவுக்கும் Solomon தீவுகளுக்குமிடையேயான வரைவு பாதுகாப்பு ஒப்பந்தம் – எனும் இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்குடையே இன்னும் கைச்சாத்திடப்படவில்லை. பசிபிக் பிராந்தியத்தில் திரைமறைவில் நடக்கும் power dynamics - ‘சக்தி இயங்காற்றல்’ பற்றி நமது பாதுகாப்புத்துறை அறிந்துகொள்ளாமல் கோட்டைவிட்டுவிட்டதோ என்று பல மட்டங்களில் கேள்வி எழுப்பப்பட்டுவருகிறது. சீனா தனது பொருளாதார வலிமையைப் பயன் படுத்தி நலிவடைந்த நாடுகளுக்கு சலுகை அடிப்படையில் கடன்களை கொடுப்பதன் மூலமாகவும் உதவிகளை வழங்குவதன் மூலமாகவும் முதலீடுகளைச் செய்வதன் மூலமாகவும் அந்த நாடுகளின் ஆதரவைத் தன்பால் ஈர்த்துக்கொள்வது ஒருபுறம் நடந்துகொண்டுள்ளது. அந்த நாடுகளின் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் அந்த நாட்டுக்குள் நிலைகொண்டு அந்த பிராந்தியத்தில் தமது இராணுவ பலத்தை விஸ்தரிப்பது சீனாவின் யுக்தி.
Prime Minister of the Solomon islands Manasseh Sogavare Prime Minister of the Solomon islands Manasseh Sogavare, third left, talks to Chinese President Xi Jinping (Parker Song/Pool Photo via AP) சமூக ஊடகங்களில் வரும் செய்திகளைப் பார்க்கும் போது சீனா, Solomon Islands மீதான செல்வாக்கை நல்ல விலை கொடுத்து வாங்கியிருக்கிறது என்பதும் Solomon island இன் உள் நாட்டு அரசியல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு என்பவற்றை மட்டும் முன்னிலைப்படுத்தி சீனா இதை முன்னெடுக்கவில்லை என்பதும் geopolitics என்ற மறைமுகமான ‘புவிசார் அரசியல் நோக்கங்கள்’ இதற்கு காரணமாக இருந்திருக்கவேண்டும் என்பதும் தெளிவாகிறது. Solomon Islands சீனாவின் பக்கமாகச் சாய்வது பசிபிக் பிராந்தியத்தில் இராணுவ சமநிலையைப் பாதிக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கும் Solomon தீவுகளுக்குமிடையேயான தூரம் சுமார் 2000 கி. மீட்டர்கள். இது Sydney க்கும் மேற்கு ஆஸ்திரேலிய தலைநகரான Perth இற்கும் இடையேயான தூரத்தைவிட மிகக் குறைவானதாகும். காலங்காலமாக ஆஸ்திரேலியாவும் நியூஸீலாந்துமே Solomon island இன் பாதுகாப்புக்கான எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றிருந்தன என்பதோடு இதைத் தொடருவதில் உறுதியாகவும் இருக்கின்றன. Solomon island ஒரு தீவுக்கூட்டம் (Archipelago). இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் இருக்கின்றன. அவற்றுள் 9 தீவுகள் பிரதானமான தீவுகளாகும். இவற்றுள் மிகப் பெரிய தீவான Guadalcanal என்ற தீவில் இந்த நாட்டின் தலைநகர் Honiara அமைந்துள்ளது. ஏழரை லட்சம் மக்களைக்கொண்ட இந்த நாட்டில் 95 சதவீதமானவர்கள் Melanesian என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். மிகுதி 5 சதவீதம் Polynesian, Micronesian, Chinese, European communities. 63 மொழிகள் பேசப்படுகிற இந்த நாட்டில் ஆங்கிலமே உத்தியோக மொழியாக இருக்கிறது. A panpipe band in Solomon Islands பிரதமர் Manasseh Sogavare யின் தலைமையில் கடந்த நவம்பர் மாதம் தேசிய அரசுக்கும் Malaita மாகாண அரசுக்குமிடையே அங்கு கலவரங்கள் வெடித்தபோது Solomon Islands இன் பிரதமர் Manasseh Sogavare யின் வேண்டுகோளின் பேரில் ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படை ( Australian Defense Force) மற்றும் பொலிஸார் அங்குஅனுப்பிவைக்கப்பட்டார்கள். தாய்வானிடமிருந்து விலகி சீனாவுடன் ராஜதந்திர உறவுகளை முன்னெடுக்க Sogavare அரசு 2019 இல் எடுத்த முடிவு காரணமாகவே இந்த கலவரங்கள் எழுந்தன. இந்த முடிவு எட்டப்படுவதற்கு முன்னரே ஆஸ்திரேலியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அங்கு கலவரங்களை அடக்கச்சென்ற Australian Defence Force ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படைஅதிகாரிகள் 100 பேரும் 2023 வரை அங்கு தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூஸீலாந்தும் பாதுகாப்பு அதிகாரிகளை அங்கு அனுப்பியிருக்கிறது. இப்போது பேசப்படும் சீனாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் Solomon Island இன் domestic political என்ற உள்நாட்டு அரசியல் பாதுகாப்பு பற்றி மட்டுமே பேசுகிறது என்றும் ‘geopolitics’ என்ற புவிசார் அரசியலைப்பற்றியதல்ல என்று சிலரால் பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில் சீனா அங்கு இராணுவத்தளமொன்றை அமைக்க க்கூடிய சாத்தியங்களும் சீன கப்பல்கள் அங்கு வந்து செல்லக்கூடிய சாத்தியங்களும் உண்டு என்று பார்க்கப்படுகிறது. எனவே இந்தப்பிராந்தியத்தின் இராணுவ சமநிலை பெருமளவில் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. Riots erupted in Honiara, the capital of the Solomon Islands, last year Riots erupted in Honiara, the capital of the Solomon Islands, last year
AP இதுதொடர்பாக ஆஸ்திரேலியா நியூஸீலாந்து ஆகிய நாடுகள் இப்போது விழித்துக்கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் உள்நாட்டுத்துறை அமைச்சர் Karen Andrews இதுபற்றி கருத்து தெரிவிக்கும் போது, ‘சீனா தனது இராணுவ நடவடிக்கைகளை பசிபிக் பிராந்தியத்தில் விஸ்தரிக்க முயற்சி செய்வது ஆஸ்திரேலியா வுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார். ‘இது எங்களுடைய backyard- வீட்டின் பின்புறம். அங்கு நடக்கக்கூடிய எந்தவொரு செயல்பாடு குறித்தும் நாம் கரிசனை கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. Solomon Islands, இக்கட்டான சூழ்நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளது. நாம் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவோம்’ என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ‘இந்த ஒப்பந்தம் பற்றிவரும் செய்திகள் உறுதி செய்யப்படும்பட்சத்தில் பசிபிக் பிராந்தியம் வெகுவாகப் பாதிக்கப்படும்’ என்று எதிர்க்கட்சித்தலைவர் Anthony Albanese தெரிவித்திருக்கிறார். ‘Solomon Island இல் சீனா இராணுவ தளம் அமைக்கும் நோக்கம் ஏதும் இருப்பின் இதுபற்றிய எமது எதிர்ப்பை நாம் Solomon Islands அரசுக்குத் தெரியப்படுத்துவோம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் Peter Dutton கூறியிருக்கிறார். Defence Minister Peter Dutton Defence Minister Peter Dutton AAP Image/ Darren Pateman இந்தச் சூழ்நிலையில், ‘இதுவரை Solomon தீவுகளுக்கு ஆஸ்திரேலியாவும் நியூஸீலாந்தும் செய்துவரும் நிதி உதவிகள், ஒத்துழைப்புகள், இராஜதந்திர மட்டத்திலான செயல்பாடுகள் யாவும் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பது நிரூபணமாவதாக’ New Zealand foreign affairs committee யின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய Simon O’ Connor கூறியிருக்கிறார். ‘சீனா இந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பது எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புக்கு பெரிய சவாலாக அமையக்கூடும்’ என்று முன்னாள் பிரதமர் Kevin Rudd தெரிவித்திருக்கிறார். ஆகவே ‘இப்போதைய நிலையில் Solomon Islands இன் பாதுகாப்புக்காக உதவுவதில் சீனாவும் ஆஸ்திரேலியாவும் சரி சமமான பங்கு வகிப்பார்கள்’ என்று Solomon Islands இன்பிரதமர் Sogavare தெரிவித்திருந்தாலும் கூட Solomon Islands இன் பலவீனத்தைப் பயன்படுத்திக்கொண்டு மெதுவாக ஆனால் உறுதியாக சீனா அங்கு உள்நுழையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் சீனா, அங்கு இராணுவதளம் மற்றும் கப்பல்கள் தரித்துநிற்கும் வசதிகள் என்பவற்றை உருவாக்கும் பட்சத்தில், பசிபிக் சமுத்திரப் பகுதியின் சுதந்திரமான நடமாட்டமும் அப்பகுதியில் அமைந்துள்ள ஏனைய நாடுகளின் பாதுகாப்பும் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் இருந்து வரக்கூடிய சவால்களை முறியடிப்பதில் சிக்கல்களும் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. Australian Army soldiers talk with local citizens Australian Army soldiers talk with local citizens during a community engagement patrol through Honiara, Solomon Islands, on Nov. 27, 2021. Australian Defence இப்போது பேசப்படும் சீனா - Solomon Islands இற்குடையேயானபாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவது உடனடி சாத்தியமில்லை. ஏனெனில், இந்த வரைவு ஒப்பந்தம் Simon islands இன் அமைச்சரவை ஒப்புதலைப் பெறவேண்டும். அதன்பின்னர் அது பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தையும் பெறவேண்டும். பின்னர் இருசாராராலும் கைச்சாத்திடப்படல் வேண்டும். அதன்பின்னரே இது நடைமுறைக்கு வரும். இந்த முயற்சியை முறியடிக்க ஆஸ்திரேலியா ஆவன செய்யும் என்பதே அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அமெரிக்கா, Solomon Islandsல் தனது தூதரகத்தை அமைக்க முயற்சி செய்துவருவதாகவும் செய்திகள் வந்துள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா நியூஸீலாந்து ஆகிய நாடுகள் அமெரிக்கவுடன் கைகோர்த்து பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் இராணுவ நகர்வுகளை முறியடிக்க ஆவன செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?