முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

c 153 இலங்கை உணவகத்தில் காத்திருந்த வியப்பு!

லண்டனில் இருந்து சென்றவருக்கு இலங்கை உணவகத்தில் காத்திருந்த வியப்பு! லண்டனில் இருந்து இலங்கை வந்த ஒருவர் இலங்கை உணவகம் ஒன்றில் கொத்துரொட்டியும் , பிளேன் ரீயும் சாப்பிட்டதற்கு 1620 ரூபா செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் நேற்றிரவு நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் தனது இராப்போசனத்தை முடித்துள்ளார். அவர் சாப்பிட்ட கொத்து ரொட்டிக்கு ரூபா 1500 ம், பிளேன் ரீக்கு ரூபா120 செலுத்தியதாக தெரியவருகின்றது. இந்நிலையில் லண்டனில் இருந்து சென்றவர் இராபோசனத்திற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாளவு பணம் கொடுக்க வேண்டியுள்ளதா என வியப்பை வெளியிட்டுள்ளார். அதேவேளை நாட்டில் அண்மைகாலமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் .

c 152 தொடரும் உக்ரைன் போர்

உயிரோடு இருக்கும்போதே ரஷ்யாவுக்கு ஓடிவிடுங்கள்: பகீரங்க எச்சரிக்கை விடுத்த உக்ரைன் உக்ரைன் மீது ரஷ்யா 31 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை தொடுத்து வருகின்றது. மேலும் இந்த தாக்குதலுக்கு ஈடுகொடுத்து உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இருக்கிற ரஷிய துருப்புகளை உயிரோடு ரஷ்யாவுக்கு ஓடிவிடுமாறு உக்ரைன் படை வீரர்கள் எச்சரித்துள்ளனர். இதுபற்றி உக்ரைன் படை வீரர் ஒருவர், “ஓடுங்கள். ஓடி விடுங்கள். குழந்தைகளை கொல்லாதீர்கள். வீடுகளை, குடும்பங்களை அழிக்காதீர்கள். உயிரோடு இருக்கும்போதே உங்கள் நாட்டுக்கு ஓடி விடுங்கள்” என கூறியதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. உக்ரைன் போரில் ரஷ்யா 1 லட்சத்து 90 ஆயிரம் படைவீரர்களை களமிறக்கி உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் படைவீரர்களை வரையில் இந்தப் போரில் இதுவரை கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு கூறுகிறது.உக்ரைன் இராணுவ கட்டளை மையத்தின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் உக்ரைன் இராணுவ கட்டளை மையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. மத்திய உக்ரைனில் உள்ள வினிஸ்டியா நகரில் உள்ள இராணுவ கட்டளை மையத்தை குறிவைத்து ரஷ்யா இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்

c 151 உக்ரைனுக்கு ஆயுதங்களை தர முடியாது!

உக்ரைனுக்கு ஆயுதங்களை தர முடியாது! திட்டவட்டமாக தெரிவித்த நாட ு உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. மேலும் ரஷ்ய துருப்புகளின் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் பதிலடி கொடுத்து வருகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன் மும்முரமாக ரஷ்ய துருப்புகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை அளித்து வரும் நிலையில் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பன் (Viktor Orbán) ஆயுதம் தர முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவை எதிர்த்து போரிட ஆயுதங்கள் வழங்க வேண்டும், கூடவே ரஷியா மீது பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடான ஹங்கேரிக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) உணர்வுப்பூர்வமான வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும், அவரது வேண்டுகோளை ஏற்க அந்த நாடு மறுத்து விட்டது. இதுபற்றி அந்த நாட்டின் பிரதமர் விக்டர் ஆர்பன் நேற்று வியாழக்கிழ்மை (24-03-2022) சமூக ஊடகம் ஒன்றில் காணொளியில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ உக்ரைன

c 150 இலங்கையில் தொடரும் இன வண்முறை

வவுனியாவில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு இளைஞர் குழுவால் நேர்ந்த கொடூரம்! வவுனியாவில் உள்ள வீடு ஒன்றிற்குள் வாள்களுடன் சென்ற இளைஞர்கள் தாக்குதலை தொடுத்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (25-03-2022) பகல் வவுனியா – வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வேப்பங்குளம் பகுதியில் 7 ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் கணவன் வேலைக்கும், பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்ற நிலையில் பெண் மட்டும் வீட்டில் சமைத்துக் கொண்டு நின்றுள்ளார். இதன்போது கார் ஒன்றில் வாள்களுடன் சென்ற இளைஞர் குழுவொன்று குறித்த வீட்டின் யன்னல், கதவு, கதிரைகள் மீது தாக்குதல் நடத்தியதுடன், பெண்ணையும் தாக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்து தப்பியோடிய பெண் அருகில் இருந்த கடைக்குள் நுழைந்துள்ளார். பின்தொடர்ந்து சென்ற இளைஞர் குழு, கணவன் எங்கே எனக் கேட்டு அச்சுறுத்தல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற நெளுக்குளம் பொலிஸார் த

c 149 சவுதியில் பாரிய தாக்குதல்

சவுதியில் பாரிய தாக்குதல் - பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு சவுதி அரேபியாவின் மிகப்பெரிய அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஜுடா நகரில் அமைந்துள்ள எண்ணெய் கிடங்குகளில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு உள்ளனர். ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்களே இந்த தாக்குதலை ஆளில்லா விமானம்மூலம் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

c 148 இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்த விடுதலைப்புலிகள்

இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்த விடுதலைப்புலிகள் - தலை காட்டத் தயங்கிய வல்லரசுகளின் இந்திய ஒன்றியத்திற்கு விடுதலைப்புலிகள் ஒரு பெரும் பாதுகாப்பாக இருந்தனர் என தமிழ்ப்பேரசு கட்சியின் வ.கௌதமன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் இருந்தவரை அமெரிக்க கப்பலோ சீன நீர்மூழ்கியோ இந்துமாக் கடலில் முகம் காட்டியதில்லை. அத்துமீறிய எந்த நாட்டு கப்பலாக இருந்தாலும் அவை அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டனஎனவும் அவர் தெரிவித்துள்ளார். 1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் யுத்தம் நடந்தபோது அமெரிக்காவும் சீனாவும் பாகிஸ்தானுக்கு போட்டிபோட்டுக் கொண்டு ஆயுதம் மற்றும் இராணுவ உதவிகள் செய்து கொண்டிருந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அதிரடியாக இராணுவத்தை அனுப்பி கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து சுதந்திரம் பெற்ற வங்க தேசம் என அறிவித்தார். அதைப்போன்று இந்தியாவிற்குப் பேராபத்தாக விளங்கி இலங்கையை முற்றும் முழுதாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சீனாவிற்கும் சேர்த்து பாடம் புகட்ட தமிழர் தாயகமான தமிழீழத்தை பிரித்து தனி நாடாக பிரகடனப்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோடி அவர்களுக்குத் தமிழ்ப் பேரரசு க

c 147 ஆஸ்திரேலிய அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது!

ஆஸ்திரேலிய அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டது! ஆஸ்திரேலியாவின் கடல்கடந்த முகாம்களில் தடுத்துவைக்கப்பட்ட அகதிகளை நியூசிலாந்தில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையில் எட்டப்பட்டுள்ளது. குறித்த திட்டத்திற்கு, ஆஸ்திரேலியா ஏற்கனவே 'கொள்கையளவில்' இணக்கம் தெரிவித்திருந்த பின்னணியில், இது குறித்த இறுதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியா- நியூசிலாந்து நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடமொன்றுக்கு 150 அகதிகள் என்ற அடிப்படையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படவுள்ளனர். தற்போது நவுறுவிலுள்ள அகதிகள், மற்றும் கடல்கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டு இங்கு தற்காலிக விசாவுடன் தங்கியுள்ள அகதிகள், இந்த ஒப்பந்தத்தின்கீழ் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவதற்கு தகுதிபெறுவர். அந்தவகையில் நவுறுவில் சுமார் 112 பேரும், ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துவரப்படவர்களில் 1168 பேரும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சப