முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

e 196 பொது மக்களின் நாளாந்த உளைப்பில் கைவைக்கும் இராணுவம்?

 

வவுனியாவில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட கைகலப்பால் இருவர் வைத்தியசாலையில்

 By Yadu 31 நிமிடங்கள் முன்

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Follow us on Google News

வவுனியாவில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முயன்ற இராணுவத்தினருக்கும், குளத்தின் குத்தகைதாரர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கனகராயன் குளம் பகுதியில் உள்ள கரப்பு குத்தி குளத்தினுள் செவ்வாய்கிழமை (12) இரவு இந்த சம்பவம் இடம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இடம்பெற்ற கைகலப்பில் இருவர் மாங்குளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரப்புக்குத்தியில் அமைந்துள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காக விலை மனுக்கோரல் அடிப்படையில் அக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வவுனியாவில் இராணுவத்தினருடன் ஏற்பட்ட கைகலப்பால் இருவர் வைத்தியசாலையில் | Clashes With Soldiers In Vavuniya Two In Hospital

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்கள்

இந் நிலையில் கரப்புக்குத்தி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவத்தினர் வலைகளைப் போட்டு சட்டவிரோதமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குளத்தை குத்தகைக்கு எடுத்தவர்களால் மீன்பிடிக்க வேண்டாம் என்று இராணுவத்துக்கு தெரியப்படுத்தியபோதும் செவ்வாய் இரவு 9 மணியளவில் மீண்டும் இராணுவத்தினர் வாள்களுடன் வந்து மீன்பிடியில் ஈடுபட வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து அப்பகுதிக்கு சென்ற குளத்தினை குத்தகைக்கு எடுத்த பயனாளியும் அவரது நண்பரும் மீன்பிடிக்க வேண்டாம் என இராணுவத்தை மறித்துள்ளனர்.

அதன்போது இராணுவத்தினரின் கையிலிருந்த வாள்களால் முதுகிலும் முள்ளந்தண்டின் கீழ்பகுதியிலும் தாக்கப்பட்டு கரப்புக் குத்தியைச் சேர்ந்த சிறீதரன் சுஜீபன் (29) எனும் இளைஞன் காயமடைந்துள்ளார்.

மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துகள்

சிறப்புச் செய்திகள்

e 248 இலங்கை இந்திய புலநாய்வாழர்களின் நாடகம் பிடிபட்டது,

துவராக என்ற பேரைப்பயன்படுத்தி பணம்பறிப்பதற்கு வளிவகுத்தவர்கள் எமது தீவிர ஆதரவானவர்களான ஐயா நெடுமாறன் மற்றும் காசி அண்ணை ஆவர் இவர்கள் விடுதலைப் புலிகளில் புலநாய்வு படிப்பிக்கப்பட்டவர்கள் அல்ல . (மேலே உள்ள படத்தில் வீரச்சாவு அடைந்த நிலையில் இருக்கும் படம் உன்மையான துவாரகாவின் படம்) இவர்கள் சாதாரண மனிதர்கள், புலநாய்வு முகவர்கள் என்னமாதிரி தகவலை எடுப்பார்கள் என்னன்று அதை எப்படிப்பரப்புவார்கள் என்பது தெரியாது, ஆரம்பத்தில் தளபதி  ராமு உயிரோடு இருப்பதாகவும் மீண்டும் அவர் செயல்டுவார் எனவும் மாதம் ஒரு தடவை 10 இராணுத்தைக்கொலை செய்வார் எனவும், மீண்டும் தமிமீழப் போராட்டம் நடக்கும் என சொல்லி பெரும் தொகையானபணத்தை சிங்களப் புலநாய்வாளர்கள். கைப்ற்றிக்கொண்டார்கள்,  துவராக விடயத்தில் ஊடகங்களை பயன்படுத்தி மக்களிற்குத் தெரியப்படுத்தி பெரும் தொகையானபணம் சூறையாடுவதற்காக திட்டம் போடப்பட்டுள்ளது, அதற்கு அமைவாக சில ஊடகங்கள் அதை ஏற்கவில்லை  அவர்கள் முதலில் ஓஸ்கா போர் அவர்களோடு கதைத்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என சொல்லியுள்ளனர், பின்னர் சம்பந்தப்பட்ட ஒருதர் oscar for அவர்களோடுகதைத்து ஊடாகங்களை அனுமதிக்கும்மாறு க

e 773 தேசிய தலைவரின் கடைசி நாள் வாக்குறுதி..மக்களின் முன் கடைசி தருணங்கள்''தொட...

 தலைவரின் இறுதி உரை

e 297 முள்ளிவாய்க்கலிற்கு ஆயுதம்கொடுத்து உதவியவனை நேரில் சென்று சந்திந்த கமாஸ்?

 அழியும் இனங்களை பாதுகாற்காமல் அழிப்பவனுக்கு ஆயுதம் கொடுப்பவர்கள் சிந்திக்க வேண்டும் முள்ளிவாய்க்காலில் நாம் அழிந்த போது எந் உலக நாடுகளும் வாய் திறக்கவில்லை இப்பொழுது எத்தனை வாய்கள் ஆடுகின்றது என்பதை தமிழர்களே பாருங்கள்,?